Wednesday, March 12, 2008

பெண் பதிவிரதைகளாக இருக்கவேண்டு மென ஆண் நினைக்கிறான்.ஆனால் அவன் யோக்யன் இல்லை

.அவன் தன் மனைவி பதிவிரதையாக இருக்கவேண்டுமென நினைக்கிறானே தவிர மற்ற பெண்களைப்பற்றி நினைப்பதில்லை.
அட!! முட்டாளே.. ஆண் பிள்ளைகள் தவறினால், பெண் எப்படி பதிவிரதையாக இருக்க முடியும்?ஒரு சிறு கற்பனை கணக்கு.ஒரு ஊரில்..லட்சம் ஜனங்கள்.50000 ஆண்கள்.50000 பெண்கள்.45000 ஆண்கள் பிற பெண்களை விரும்புவதாக வைத்துக்கொள்வோம்.அதிலிருந்து 45000பெண்கள் பிறருக்கு இச்சைக்கு இடமாக வேண்டும்.இதில் 20000 ஆண்கள் ஓரளவு தங்கள் ஆசையை நிறைவேற்றுவதாக வைத்துக்கொண்டால்,20000 பெண்கள் விபசாரிகளாய் இருத்தல் அவசியமாகிறது.அந்த 20000 பேரில் 100 பேர் தான் தள்ளப்படிகிறார்கள். மற்றவர்கள் புருஷனுடனேயே வாழ்கிறார்கள்.ஆனால் அவள் புருஷனுக்கு இவளைப்பற்றி தெரியாது.
ஆகவே பெரும்பாலோர் விபசாரிகளுடனே வாழ்கிறார்கள்.இதனிடையே பெண்களை புருஷர்கள் அடிப்பதும்,திட்டுவதும் எல்லையின்றி நடைபெறூகிறது.மானங்கெட்ட தோல்வி ஆண்களுக்கு.
என் மீது அன்பு செய் என பெண்ணை அடிக்க இவனுக்கு என்ன உரிமை? இதற்கு ஒேர் வழி..
ஆண்களே ..நீங்கள் பெண்களிடம் அசையாத பக்தி செலுத்துங்கள்.பக்தியே பக்தியை விளைவிக்கும். அச்ச்த்தினாலேயே அவள் நமக்கு அடிமைப் பட்டிருப்பாள் என்று நினைப்பவன் முட்டாள்.
அச்சத்தினால், ஒருவள் அடிமைப்பட்டிருப்பாள் என நீ நினைத்தால்...அவள் உனக்கு அடிமைப்போல் நடித்தாலும் உள்ளே துரோகத்தை வைத்துக்கொண்டுதான் இருப்பாள்.
அச்சத்தினால் அன்பை விளைவிக்க முடியாது.

கற்பு நிலை என்று சொன்னால்
அதை இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம்.

(பாரதியின் கட்டுரைகள்)

3 comments:

')) said...
This post has been removed by a blog administrator.
')) said...

உங்கள் திட்டும், பாராட்டும் பாரதியைச்சேரும்.ஏனெனில் இவை பாரதியின் எழுத்துக்கள்

')) said...

//அச்ச்த்தினாலேயே அவள் நமக்கு அடிமைப் பட்டிருப்பாள் என்று நினைப்பவன் முட்டாள்.
அச்சத்தினால், ஒருவள் அடிமைப்பட்டிருப்பாள் என நீ நினைத்தால்...அவள் உனக்கு அடிமைப்போல் நடித்தாலும் உள்ளே துரோகத்தை வைத்துக்கொண்டுதான் இருப்பாள்.
அச்சத்தினால் அன்பை விளைவிக்க முடியாது.//

இராதகிருஷ்ணன் ஐயா,

நன்று சொன்னீர்கள் ! நல்ல கருத்துக்கள் !

****
'விபச்சாரி' இதற்கு முற்போக்காளர்கள் பயன்படுத்தும் சொல் 'பாலியல் தொழிலாளி', பெண்ணை மட்டுமே குறைபட்டு சொல்லும் சொல்தான் 'விபச்சாரி' அவளிடம் செல்பவர்களுக்கு அந்த பட்டம் இல்லை. அதனால் அந்த சொல்லை முற்போக்காளர்கள் பயன்படுத்துவது இல்லை, ஆண் / பெண் இருவருக்கும் பொதுவாக விபச்சாரம் செய்பவர்களை 'பாலியல் தொழிலாளி' என்றே எழுதிவருகிறார்கள்.