Friday, August 21, 2009

இடைத் தேர்தலும்..விஜய்காந்தும்..

இடைத்தேர்தல் நடந்த ஐந்து தொகுதிகளுக்கான முடிவுகள் எதிர்ப்பார்த்தபடியே தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

பிரதான கட்சியான அ.தி.மு.க.,வும் தன் கூட்டணி கட்சியான ம.தி.மு.க.,மற்றும் பா.ம.க., கட்சித் தலைமை தேர்தலை புறக்கணித்தாலும்..அக்கட்சியின் தொண்டர்கள் புறக்கணிக்கவில்லை என்பது..வாக்குகள் விழுந்துள்ள சதவிகிதத்திலிருந்து தெரிகிறது.

அக்கட்சியின் தொண்டர்கள் வாக்குகள் எந்த கட்சிக்கு விழுந்துள்ளன..என பார்த்தால்..பெருவாரியானவை தி.மு.க., கூட்டணிக்கே விழுந்துள்ளன.ஒரு சிலரே விஜய்காந்திற்கு வாக்களித்துள்ளார்கள்.

மொத்த தொகுதியிலும் சேர்த்து தி.மு.க., கூட்டணிக்கு 3,98,177 வாக்குகளும்..டி.எம்.டி.கே., விற்கு 1,37,479 வாக்குகளும் விழுந்துள்ளன.

வாக்குகள் சதவிகிதம் உயர்ந்திருக்கிறது என விஜய்காந்த்..அவர் கட்சித் தொண்டர்களை ஊக்குவிக்க சொல்லலாம்..ஆனால் உண்மையிலேயே..அ.தி.மு.க., போட்டியிடாததால் சில ஆயிரம் வாக்குகள் இவருக்கு அதிகமாக விழுந்துள்ளது.அவ்வளவே..

தான் மாபெரும் சக்தியாய் வளர்ந்து வருவதாய் எண்ணிக்கொள்ள ஏதுமில்லை.ஓட்டப்பந்தயத்தில்..நான் இரண்டாவதாக வந்தேன்..என..இருவர் மட்டுமே கலந்துக் கொண்ட பந்தயம் பற்றி பேசி என்ன பயன்.இனி வரும் நாட்களில்..கட்சியை பலப்படுத்துவதுடன்..கூட்டணிக்கும் அவர் தயாராய் இருந்தாலே..அவரால் இனி கட்சி நடத்த முடியும்..இல்லையேல்...வரும் தேர்தல்களில் நிற்க வேட்பாளர்கள் கூட தயாராய் இருக்க மாட்டார்கள்.

கம்யூனிஸ்ட் கட்சிகள் பற்றி சொல்ல ஏதுமில்லை.தமிழ்நாட்டில்..தனியாக நின்றால்..கோவை,நாகபட்டிணத்தில் கூட அவர்கள் வெற்றி பெறமுடியாது.

பாவம்..பா.ஜ.க., அவர்களை விட்டு விடுவோம்...கொங்கு.......வேண்டாம் நமக்கு ஏன் பொல்லாப்பு.

அ.தி.மு.க.,வின் புறக்கணிப்பு...இதிலிருந்து கட்சி எழுந்திருக்க தலைமை..உடனே ஆவன செய்ய வேண்டும்.

இல்லையேல்..கலைஞர் சொன்னாற்போல தி.மு.க., மாபெரும் கட்சியாய் வளர்வதை தடுக்க முடியாது.

3 comments:

பீர் | Peer said...

//அக்கட்சியின் தொண்டர்கள் வாக்குகள் எந்த கட்சிக்கு விழுந்துள்ளன..என பார்த்தால்....//

தேர்தலை புறங்கணித்த கட்சிகளுக்கு தொண்டர்கள் இல்லை என்பதாகவும் பொருள் கொள்ளலாம். ;)


பொதுவாக இடைத்தேர்தலை வைத்து கட்சி நிலையை அவதானிப்பது சரியாக இருக்காது... என்று நினைக்கிறேன்.

இது By எலக்சன் அல்ல Buy எலக்சன் என்று எங்கோ படித்தேன். ;)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி
Peer

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி doctor