Friday, March 26, 2010

சாகுந்தலம்..(நாட்டிய நாடகம்)






(இந்த நாட்டிய நாடகம்..நான் எழுதி..நியூயார்க் நகரில் நாட்டிய நாடகமாக தமிழர் வாழும் பகுதியில் நடத்தப்பட்டது)

காட்சி-1

(காட்டில் வேட்டையாட வந்த மன்னன் துஷ்யந்தன் சகுந்தலையைப் பார்த்ததும்)

என் மனம்

சிறகடித்து பறக்கிறதே..

கண்ணெதிரே பார்க்கும்

இவள்

வண்ணத்துப் பூச்சியோ

சிறகுகளால் அழைக்கவில்லையே...

இருக்காது...

சிரிப்பால்...புன் சிரிப்பால்..

என்னைக் கொல்கிறாளே..

வெண்ணிற உடை..

சரஸ்வதியோ இவள்..

இல்லை..இல்லை...

பளீரென பிரகாசிக்கும் முகம்...

அன்னை சிவ பத்தினியோ..

இல்லை..இல்லை..

இவள் மகாலட்சுமிதான்

ஒரு வேளை

முப்பெருந்தேவியின் ஓர் வடிவோ..

சிந்தை கலங்க வைத்து

சித்தாடைக் கட்டிய

சிட்டுக் குருவி இவள்..

இவள்..யார்...யார்..

இவ்வனத்தில் - தப்பாய்

பிறந்து தவிக்கும் பெண்ணோ?

கெஞ்சும் கண்களால்

கொஞ்சும் பெண்மகள்

பட்டாம் பூச்சியாய் பறக்கும்

காலத்தில்

துறவியாய்...எப்படி

என் கனவிலும்..நனவிலும்

மறக்க முடியாதே..

இவள் அழகிற்கு அழகு

அவ்வழகை ஆராதிப்பதே

தளராது ஈதலே

அழகின் இலக்கணம்..

மானை வேட்டையாட

வந்த நான்..இந்த..

புள்ளிமான் வலையில் வீழ்ந்தேனே..

(துஷ்யந்தனைக் கண்ட சகுந்தலையின் நிலை அடுத்த பதிவில்)

12 comments:

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

தலைவரே எந்த இடம் யாரால் அரங்கேற்றம் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிட்டிருந்தால், அங்கிருப்பவர் யாராகிலும் படிக்கும்போது, இது போன்று ஒரு நிகழ்ச்சிக்கு வேறு கருவில் எழுத அழைப்பு வரலாமில்லையா?
:))

T.V.ராதாகிருஷ்ணன் said...

எனக்குத் தெரிந்த நண்பரின் மனைவி நாட்டியம் சொல்லித்தருகிறார் அங்கு.அங்கு பயிலும் மாணவர்களுக்கான ஆண்டுவிழா நிகழ்ச்சிக்காக எழுதியது.என் பழைய டயரியைப் புரட்டும்போது கிடைத்தது..பதிவேற்றிவிட்டேன்..அவ்வளவே!

Chitra said...

அருமையாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!

பிரபாகர் said...

நல்லா இருக்குங்கய்யா...

உங்கள் டைரிய அடிக்கடி புரட்டி, இது போல் நிறைய இன்னும் நிறைய தாருங்கள் அய்யா!

பிரபாகர்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Chitra said...
அருமையாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!//

நன்றி Chitra

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பிரபாகர் said...
நல்லா இருக்குங்கய்யா...

உங்கள் டைரிய அடிக்கடி புரட்டி, இது போல் நிறைய இன்னும் நிறைய தாருங்கள் அய்யா!

பிரபாகர்.//

வருகைக்கு நன்றி பிரபா

வித்யா said...

நல்லாருக்கு சார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி வித்யா

அக்பர் said...

அருமையா, எளிமையா இருக்கு சார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி அக்பர்

இயற்கை ராஜி said...

ரொம்ப நல்லாயிருக்குங்க அண்ணா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//இயற்கை ராஜி said...
ரொம்ப நல்லாயிருக்குங்க அண்ணா//

மகிழ்ச்சி சகோதரி