Friday, May 7, 2010

அன்றும்..இன்றும்..

நமதி இதிகாசங்கள் உண்மையாக நடந்ததா..அல்லது கற்பனைக் கதைகளா என்ற சர்ச்சைக்குப் போகாமல்..அவற்றில் குறிப்பிட்டுள்ள ஒரு சில காட்சிகள்..

விமான போக்குவரத்து நம் இதிகாசங்களில் அன்றே இருந்திருக்கிறது

தொலைக்காட்சிக் கண்டுபிடிக்கப் பட்டதோ இருபதாம் நூற்றாண்டில்..ஆனால்..நாம் ராமாயணம்,மகாபாரதம் ஆகியவற்றைப் படிக்கையில்..இன்றைய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் அன்றே அவற்றில் சொல்லப்பட்டுள்ளதைக் காணலாம்..

ராவணன் சீதையைக் கவர்ந்து செல்கையில் புஷ்பீக விமானத்தில் செல்கிறான்..

கண்ணகி..மதுரை எரித்து..பின்...புஷ்பீக விமானம் வந்து அவளை மேலுலகம் அழைத்துச் செல்கிறதாம்.

தொலைக்காட்சிப் பக்கம் வந்தால்..

குருட்சேத்திரத்தில் போர் நடக்கையில் கண்ணில்லா திருதிராஷ்டர மன்னனுக்கு போர்க்களத்தில் நடப்பதை அவரது அரண்மனையில் இருந்துக் கொண்டே சொல்ல சஞ்செயன் என்னும் மந்திரியை நியமிக்கிறான்.வேத வியாசரின் அருளால் சஞ்செயன் போரில் நடப்பதை அங்கிருந்தபடியே ஞானதிருஷ்டியால் சொல்கிறான்..

அன்று புஷ்பீக விமானம்..ஞானதிருஷ்டி என்று சொல்லப்பட்டவையே இன்று ஆகாய விமானம், தொலைக்காட்சி ஆகியவை

25 comments:

கோவி.கண்ணன் said...

உள்ளேன் ஐயா,

உலக நாடுகளில் அனைத்தில் மனுசனுக்கு பறக்கும் கனவு என்றும் உள்ளவையே. அதை செயலாக்கிப் பார்த்தது ஐரோப்பியர்கள் மட்டுமே

நியோ said...

அன்பு ராதா!
'அந்த காலத்தில எல்லாம் நான்' அப்படின்னு சாக கிடக்கிற கிழம் தான் பேசும்...
நா சொன்னது உங்கள இல்லை சார் ..
மதங்களை !
எல்லா மதங்களும் பல விஞ்ஞான கண்டுபிடிப்புகளை தங்கள் நூல்களிருந்து பட்டியலிடுது...
ஆனா அவைகள் எப்போதும் கண்டுபிடிப்புகளுக்கு எதிராகவே தொடர்ந்து செயல்பட்டவந்த்தது ..வரும் ...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கோவி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நியோ said...
அன்பு ராதா!
'அந்த காலத்தில எல்லாம் நான்' அப்படின்னு சாக கிடக்கிற கிழம் தான் பேசும்...
நா சொன்னது உங்கள இல்லை சார் ..
மதங்களை !//

என்னைச் சொன்னாலும் தப்பில்லை..
வந்தவர் எல்லாம் தங்கியிருந்தால் பூமியில் உங்களுக்கு இடமில்லாமல் இருந்திருக்கும்

DREAMER said...

உண்மைதாங்க...
VYMANIKA SHASTRAன்னு ஒரு புக்-ல ஒரு விமானம் தயாரிப்பதற்கு தேவையான ப்ளூப்ரிண்ட்டு, INSTRUCTION MANUAL இப்படி எல்லாம் சமஸ்கிருதத்துல இருக்குதாம்.

-
DREAMER

Chitra said...

அன்று புஷ்பீக விமானம்..ஞானதிருஷ்டி என்று சொல்லப்பட்டவையே இன்று ஆகாய விமானம், தொலைக்காட்சி ஆகியவை


......ஓஹோ...... கம்ப்யூட்டர் மட்டும் இல்லாமலா இருந்துருக்கும்? நிச்சயம் இருந்துருக்கும்.

பிரபாகர் said...

புஷ்பக விமானத்தடம் சிறிது தூரம் தெரிந்து பின் மறைந்ததாயும் இருப்பது இன்றைய விமானம் டேக் ஆப் ஆவதை நினைவு கூறுவதாயும் சுஜாதா எழுதியிருக்கிறார் அய்யா!

பிரபாகர்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

//DREAMER said...
உண்மைதாங்க...
VYMANIKA SHASTRAன்னு ஒரு புக்-ல ஒரு விமானம் தயாரிப்பதற்கு தேவையான ப்ளூப்ரிண்ட்டு, INSTRUCTION MANUAL இப்படி எல்லாம் சமஸ்கிருதத்துல இருக்குதாம்//

வருகைக்கு நன்றி Dreamer

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Chitra said...
ஓஹோ...... கம்ப்யூட்டர் மட்டும் இல்லாமலா இருந்துருக்கும்? நிச்சயம் இருந்துருக்கும்//

இருந்துருக்கும் chitra

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பிரபாகர் said...
புஷ்பக விமானத்தடம் சிறிது தூரம் தெரிந்து பின் மறைந்ததாயும் இருப்பது இன்றைய விமானம் டேக் ஆப் ஆவதை நினைவு கூறுவதாயும் சுஜாதா எழுதியிருக்கிறார் அய்யா!

பிரபாகர்...//

வருகைக்கும்..தகவலுக்கும் நன்றி பிரபா

முனைவர்.இரா.குணசீலன் said...

வலவன் ஏவா வானஊர்தி. (2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆளில்லா வானூர்தி)


http://gunathamizh.blogspot.com/2010/01/2500.html

T.V.ராதாகிருஷ்ணன் said...

// முனைவர்.இரா.குணசீலன் said...
வலவன் ஏவா வானஊர்தி. (2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆளில்லா வானூர்தி)//

வருகைக்கும்..தகவலுக்கும் நன்றி முனைவர்.இரா.குணசீலன்

வானம்பாடிகள் said...

Chitra said...

/ ......ஓஹோ...... கம்ப்யூட்டர் மட்டும் இல்லாமலா இருந்துருக்கும்? நிச்சயம் இருந்துருக்கும்.//

ஹி ஹி. புறாமெயில்ல புறாப்ளாக் அக்கவுண்ட் கூட இருந்திருக்குமோ?

நியோ said...

அன்பு ராதா!
சித்ரா உங்களை அப்படி கிண்டல் பண்றாங்க ..
எப்படி சார் அப்பாவியா முகத்தை வச்சுகிட்டு இருந்துருக்கும்னு சொல்றீங்க ...
நீங்க ரொம்ப நல்லவர் சார் !

நியோ said...

பாருங்க ராதா ..
வானம்பாடியும் கிண்டல் பண்ணுறார் ..
ரெண்டு பேர் comment ஐயும் சீக்கிரமா delete பண்ணுங்க...
சீக்கிரமா ...

ஹேமா said...

ஓ...அப்பவே இருந்ததைத்தான் இப்போ புதுப்பிச்சு வச்சிருக்காங்களா !

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

/////தொலைக்காட்சிக் கண்டுபிடிக்கப் பட்டதோ இருபதாம் நூற்றாண்டில்..ஆனால்..நாம் ராமாயணம்,மகாபாரதம் ஆகியவற்றைப் படிக்கையில்..இன்றைய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் அன்றே அவற்றில் சொல்லப்பட்டுள்ளதைக் காணலாம்..///////

உண்மைதான் அன்று நாம் முன்னோர்கள் எழுதி வைத்து சென்றதை மட்டும்தான் இதுவரை நாம் கண்டுப்பிடித்து இருக்கிறோம் அதில் இன்னும் பல நிறைவுபெறாமலே இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் . மிகவும் சிறப்பான பதிவு பகிர்வுக்கு நன்றி !

அதிஷா said...

சூப்பர் கண்டுபிடிப்பு!

யுவகிருஷ்ணா said...

ரூம் போட்டு யோசிக்கறதுன்னா இதுதானா? :-)

க.பாலாசி said...

ம்ம்ம்.... பகிர்வுக்கு நன்றி...

அன்புடன் அருணா said...

அட!நல்லாருக்கே!

வெற்றி said...

நல்ல பதிவு நன்றி அதிஷா !

விக்னேஷ் காந்த் said...

வணக்கம் சார்.. பொதுவாகவே மனிதர்களின் வியூகங்கள் அவ்வபோது சரியாவதும் உண்டு.. “ரெண்டு பட்டனை தட்டிவிட்டா அட இட்லி வந்துடுமே” என்ற பழைய பாடல் நினைவிலிருக்கும் என நம்புகிறேன். ஆனால் இது சாதாரணமானதே! நாமும் கூட ஒரு சமயத்தில் “போகிற போக்கை பார்த்தா மனுஷனுக்கு சோறு ஊட்டி விட மிஷின் வந்துடும் போலவே” அப்புடின்னு சொல்லுவோம். யாருக்கு தெரியும் இதுவும் நடக்கலாம். அப்போ யாராவது நாம சொன்னத எடுத்து ப்ளாக் பண்ணலாம். வியூகத்தில் வியப்பதற்கு எதுவுமேயில்லை....

ஜெரி ஈசானந்தன். said...

புஷ்பக் விமானம் சொந்தமா வச்சுகிறதா?இல்ல கமர்சியலா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி