Monday, July 26, 2010

கதையான போதிலும்....கருத்துள்ள பாடமே...

ஒரு ஊரில் ஒரு சிறிய ஆட்டுக்குட்டி இருந்தது...அதைப்பார்த்த ஓநாய் ஒன்று அதை இரையாக்கிக்கொள்ள தீர்மானித்தது.

ஒரு நாள் அந்த ஆட்டுக்குட்டி..ஓடிவரும் ஆறின் சரிவில் நீர் அருந்திக் கொண்டிருந்தது.மேல் பகுதியில் வந்து தண்ணீர் அருந்துவது போல பாவனை செய்த ஓநாய்..திடீரென ஆட்டைப் பார்த்து 'ஏன்..இப்படி தண்ணீரை கலக்குகிறாய்"என்று அதட்டிக் கேட்டது.

ஓநாயைப்பார்த்து பயந்த ஆடு..'நான் எப்படி தண்ணீரை கலக்க முடியும்..நீங்கள் குடித்த பின்னர் தானே நீர் எனக்கு வருகிறது?" என்றது.

ஆட்டின் பதிலைக்கேட்டதும்..ஓநாய்..'நீ கலக்கா விட்டால் என்ன?..முன்னர் உன் அப்பன் கலக்கி இருப்பான்...அதற்கும் முன்னால் உன் பாட்டன் கலக்கி இருப்பான்..உன்னை எல்லாம் சும்மா விடக்கூடாது'என்றபடியே ஆட்டின் மேல் பாய்ந்து, அதை அடித்துக் கொன்றது.

நீதி - நம் நியாயம்..எடுபடாது..என்ற நிலையில்..ஒதுங்கி செல்வதே..நல்லது.

14 comments:

Vidhoosh said...

பர்பெக்ட் சார். அருமை. :)

மணிகண்டன் said...

கதை புரியலயே சார் :)- எவ்வளவு நாளுக்கு ஒருமுறை இந்த கதை எழுதறதா இருக்கீங்க ?

இராகவன் நைஜிரியா said...

இந்த கதை முன்பே படித்திருந்தாலும், எதற்காக இந்த கதை என்று புரியவில்லைங்க ஐயா..

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
Vidhoosh
tamildigitalcinema
மணிகண்டன்
இராகவன் நைஜிரியா

நசரேயன் said...

மீள் பதிவா ?

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஆம்..நசரேயன்..இந்த நேரம் இக்கதையின் நீதி எனக்கு தேவைப்பட்டதால் மீள்பதிவிட்டேன்

மங்களூர் சிவா said...

கதையான போதிலும் கருத்துள்ள பாடமே.

ஈரோடு கதிர் said...

கதை புரிகிறது

எதுனாச்சும் உள்குத்து இருக்கான்னுதான் புரியல

Unknown said...

நல்ல கதை.. ஆனாலும் நாங்கள் ஓநாய்களை தின்னும் ஆடுகள்...

vasu balaji said...

T.V.ராதாகிருஷ்ணன் said...
ஆம்..நசரேயன்..இந்த நேரம் //

இக்கதையின் நீதி எனக்கு தேவைப்பட்டதால் மீள்பதிவிட்டேன்//

உங்களுக்கு மட்டுமா சார்:). தேவைப்படும் எல்லாருக்கும்தான்:))

Chitra said...

நல்லது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி

ஹேமா said...

சின்னப்பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கக்கூடிய நீதிக் கதை.நன்றி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி ஹேமா