Monday, September 24, 2012

வீடு திரும்பல் மோகன்குமார்..




சில பதிவர்களைக் கண்டு நான் வியப்பதுண்டு..

இவர்கள்..முக்கியப் பணியில் இருந்து கொண்டு..எப்படி நேரத்தை ஒதுக்கமுடிகிறது என்று..

அப்படி நான் வியந்த பதிவர்களில் ஒருவர் வீடுதிரும்பல் மோகன் குமார்.

இவர் ஒரு மென்பொருள் நிறுவனத்தில்..உயர்ந்த பதவி ஒன்றில் இருந்து கொண்டு..பதிவிற்கும் நேரத்தை ஒதுக்குகிறார்.அதுவும் ஏனோ..தானோ பதிவுகள்..இல்லை..

ஒவ்வொரு பதிவும் ஒரு ரகம்..

பயணம் செய்த இடங்கள் பற்றிய பதிவு..அவ்விடங்களுக்கு பயணம் செய்யாதவர்களை பயணிக்கத் தூண்டும் விதத்தில் அமைந்திருக்கும்..

வாழ்க்கையில் கீழ் மட்டத்தில் இருப்பவர்கள்..தொழிலை மையமாக வைத்து அவர்களிடம் நேர்காணல் பதிவு...

சென்ற உணவகங்கள் பற்றிய பதிவு..

சினிமா விமரிசனங்கள்...

சுஜாதாவின் கதைகளை விமரிசித்து எழுதும் பதிவுகள்..

இப்படி ஒரு பதிவிற்கும்..மற்றதற்கும்..மாறுபட்ட பதிவுகள்..

தவிர்த்து பதிவுகளும்..சற்றே நீளமான பதிவுகள்..தேவைப்படும் இடங்களில்..அவற்றைப் பற்றிய குறிப்புடன்.

இதைத்தவிர்த்து, அவ்வப்போது தொலைக்காட்சி சேனல்களில் தோன்றுவது...

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்..

ஹேட்ஸ் ஆஃப் மோகன்குமார்.

மோகன்குமாரை நான் ஓருமுறைதான் சந்தித்துள்ளேன்...அவரது பழகும் விதமும் அருமை..

அவரிடம் நான் பல நிறைகளைக் கண்டாலும்...என்னால்..ஓரிரு குறைகளும் அவரிடம் இருப்பதை உணர முடிகிறது..இது என் கணிப்புதான்..அதில்  தவறும் இருக்கக்கூடும்..

மோகன் குமாரிடம்..நகைச்சுவை உணர்வு சற்று குறைவு என்றே தோன்றுகிறது.தவிர்த்து, அவர் விரைவில் உணர்ச்சிவசப்படுபவர் என்று எண்ணுகிறேன்.அவர் தன் முன் கோபத்தை சற்று குறைத்துக்கொள்ள வேண்டும் என்றே தோன்றுகிறது.

5 comments:

Philosophy Prabhakaran said...

மோகன் குமார் சார் வாழும் அதே காலத்தில் நானும் வாழ்வதையே மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன்...

வருண் said...

என்ன சார், உங்க தளத்தை யாரும் "ஹேக்" பண்ணி உங்க பேரில் பதிவெழுதுறாங்களா?

இணைய தளத்தில் நிறைகளைப் பகிர்வதோடு நிறுத்தியிருந்தால் அழகாக இருந்து இருக்கும்! என்னவோ போங்க!

பழனி.கந்தசாமி said...

ரசித்தேன்.

கோவி.கண்ணன் said...

:)))


கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் னு யாராவது அவருக்கு சொல்லி இருக்கக் கூடும்

திண்டுக்கல் தனபாலன் said...

பழகுவதற்கு நல்ல மனிதர்...

மற்றபடி நாம் எப்படி அணுகுகிறமோ, அது போல் தான் Return...