Wednesday, January 4, 2017

பெண்களும்...பாதுகாப்பும்



காலம் மாறினாலும் பெண்ணைப் பெற்றவர்கள் பயப்படத்தானே வேண்டியிருக்கிறது

சம உரிமை..என பெண்கள், ஆண்களுக்கு நிகராக எல்லாப் பிரிவுகளிலும் பெருமளவு பெருகி வந்தாலும் சமுதாயத்தில் அவர்களுக்கு பாதுகாப்பு ஜீரோதான்.

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், ஒரு பெண் வீட்டை விட்டுக் கிளம்பிக் காலையில் சென்றால்...மாலையில் பத்திரமாக வீடு வந்து சேருவாளா..? என்பதே இன்றைக்கு நிச்சயமில்லைங்கிற நிலை உருவாகிக்கிட்டிருக்கிறது

"ஏம்மா...அந்தப் பையன் பார்க்க எப்படியிருக்கான். ரௌடி மாதிரி இருக்கானா"

"அவன் என்னைப் பின் தொடர்ந்து வர்றது எனக்குத் தெரியறது.ஆனா..அவன் எப்படி இருக்கான்னு நான் பார்க்கல"

"எவ்வளவு நாளா இப்படி நடக்கிறது"

"ஒரு மாசமா அப்பா"

"போலீஸ்ல வேணும்னா கம்ப்ளைன்ட் பண்ணலாமா?"

"வேண்டாம்ப்பா. கொடுமைக்கு ஆளாகும் பெண்களோட வேதனையை போலீஸ் புரிஞ்சுக்கறதில்ல.அதனாலதான் இது போல விஷயங்களை பொண்ணுங்க போலீஸ்ல புகார் கொடுக்கறதில்ல.புகார் கொடுக்க பயப்படறாங்க.புகார் கொடுக்கறவங்கக் கிட்டே போலீஸ்காரங்க எப்படியெல்லாம் கேள்விகளைக் கேட்கறாங்கன்னு சொல்லத் தேவையில்லை. பெண்கள் பிரச்னைன்னு வர்றப்போ பொறுப்பத்த முறையிலே தான் அவங்க நடக்கறாங்க.உடனேயே ஜாதி முலாம் பூசறது...கள்ளக் காதல்னு சொல்றது.இப்படி போலீஸ்..ஊடகங்கள்னு எல்லாமே உடனே அந்தப் பொண்ணுக்குக் களங்கத்தை ஏற்படுத்திடறாங்க.அதனால ..நாம போலீஸுக்குப் போக வேண்டாம்னு தோணுதப்பா

முழுக்கதையையும் படிக்க....

No comments: