Showing posts with label சிந்தனைகள் - நிகழ்வுகள். Show all posts
Showing posts with label சிந்தனைகள் - நிகழ்வுகள். Show all posts

Friday, June 18, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (18-6-10)

எப்போதெல்லாம் முடிகிறதோ..அப்பொழுதெல்லாம் முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.முருங்கை இலையில் பழங்களைவிட 7 மடங்கு வைட்டமின் 'சி' சத்து அதிகமாக உள்ளதாம்.பாலைவிட கால்சிய சத்து 4 மடங்கு அதிகம் உள்ளது.காரெட்டைவிட 4 மடங்கு வைட்டமின் 'ஏ' உள்ளதாம்.பொட்டாசிய சத்து வாழைப்பழத்தைவிட 3 மடங்கு அதிகம் உள்ளது.

2)சமீபத்தில் இந்தியா வந்த இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே 7 ஒப்பந்தங்களில் கையெழுத்து இட்டு பெற்றுக் கொண்டு திரும்பியுள்ளார்.அவற்றில் ஒன்று..சிங்கள ராணுவத்திற்கும்,போலீசாருக்கும் இந்தியாவில் பயிற்சி அளிப்பது.இலங்கையில் போர் முடிந்துவிட்டது..புலிகளை ஒழித்து விட்டோம் என்று கூறிய ராஜபக்க்ஷே.. சிங்கள ராணுவத்திற்கு மீண்டும் பயிற்சி பெறுவது யாருக்காக..யாரை ஒழிக்க..

3)போலி விஷ வாயு வழக்கில் 26 வருஷம்,சிபுசோரன் கொலை வழக்கில் 36 வருஷங்கள் கழித்து விசாரணை முடிந்து தீர்ப்பு வந்துள்ளது.தீர்ப்புகள் பற்றி விமரிசிக்க வேண்டாம்..ஆனால்..வழக்குகள் முடிய இத்தனை ஆண்டுகளா..என எண்ணுகையில் வருத்தம் ஏற்படத்தான் செய்கிறது..கவியரசு அன்றே சொன்னார் 'கோர்ட்டுக்குப் போனால் நடக்காது..அந்த கோட்டைக்குள் நுழைந்தால் திரும்பாது' என்று

4)சதுரங்க ஆட்டத்தை முதலில் கண்டு பிடித்த நாடு என்ற பெருமை இந்தியாவையேச் சாரும்.

5)தற்போது உலகம் முழுதும் வெப்பம் அதிகரித்து வருவதால்..புயல், சூறாவளி, பனிப்பொழிவு ஆகியவை அதிகரித்து வருகிறதாம்..1939 முதல் 1986 வரை அட்லாண்டிக் கடலில் வருஷத்திற்கு 41 புயல் காற்றுகள் உருவாகுமாம்..இப்போது அதுவே 63 ஆக அதிகரித்துள்ளதாம்.

6)கொசுறு...
அவர் போலி டாக்டர்னு எப்படி சொல்ற
வாயுத் தொந்தாவுன்னு போனா..ஆமாம்..உங்க உடம்புல 10 சதவிகிதம் நைட்ரஜன்,3 சதவிகிதம் ஹைட்ரஜன்,65 சதவிகிதம் ஆக்சிஜன் வாயுக்கள் இருக்குன்னு சொல்றார்

டிஸ்கி...அனைவரையும் மாலை புத்தக வெளியீட்டில் சந்திக்கிறேன்

Thursday, April 22, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்(23-4-10)

உடல் இளைக்க சிலர் 'டயட்' டில் இருப்பதாகக் கூறுவர்..ஆனால் இப்படி டயட்டில் இருப்பதால் இதய நோய்கள்,கேன்சர்,டயாபடீஸ் ஆகிய நோய்கள் வர வாய்ப்பிருப்பதாக இங்கிலாந்தில் நடந்த ஒரு ஆய்வு அறிக்கைக் கூறுகிறது..ஆகவே மருத்துவரை கலந்து ஆலோசிக்காது..நீங்களே இஷ்டத்திற்கு டயட்டில் இருக்காதீர்கள்

2)சர்வதேச நிதி நெருக்கடிக்கு இடையேயும்..வெளிநாடு வாழ் இந்தியர்கள் கடந்த நிதியாண்டில் முதல் ஆறு மாத காலங்களில் தாயகத்திற்கு அனுப்பிய தொகை 1.22 லட்சம் கோடி..நமது நன்றியை என்.ஆர்.ஐ., க்களுக்கு சொல்வோம்

3)நம் நாட்டு மக்கள் தொகையில் 37.2 சதவிகிதத்தினர்..அதாவது கிட்டத்தட்ட 40.71 கோடி பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களாம்..

4)உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்காக கோவையில் 140 திருமண மண்டபங்கள் இதுவரை பதிவு செய்து வைக்கப் பட்டுள்ளனவாம்..தவிர்த்து கோவையில் நான்காயிரம் ஓட்டல் அறைகளும்,மேட்டுப்பாளயத்தில் 300 அறைகளும்,திருப்பூரில் 400 அறைகளும், நீலகிரியில் ஆயிரம் அறைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாம்

5)தமிழில் பெயர்ப் பலகை வைக்காத 105 கடைகள்..கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாம். இவற்றின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு செய்திக் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது..(தமிழ்ப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என அறிவித்த தமிழக அரசு..எங்களுக்கும் அப்படி அறிவித்தால் தமிழில் பெயர் வைக்கிறோம்..அதைவிடுத்து சட்டப்படி நடவடிக்கை என்றால்..அரசு..ஒரு கண்ணில் வெண்ணெய்..ஒரு கண்ணில் சுண்ணாம்பாய் செயல்படுவது ஏன்? என்கிறார் ஒரு வியாபாரி)

6) இரவுக்கு வேண்டியதை பகலில் தேடி வைத்துக் கொள்
மழைக்காலத்திற்கு வேண்டியதை மற்றைய காலத்தில் தேடி வைத்துக் கொள்
முதுமைக்கு வேண்டியதை இளமையில் தேடிக்கொள்
மறுமைக்கு வேண்டியதை இம்மையில் தேடிக்கொள்

- வாரியார்

7)கொசுறு ஒரு ஜோக்

தலைவரே! உங்க மேல உயர்நீதி மன்றத்தில் உள்ள கேஸ்ல தர்மம் வெல்லும்னு மக்கள் பேசிக்கிறாங்க
உச்ச நீதி மன்றம் வரைக்கும் போய் பார்த்துடலாம்.,


டிஸ்கி- 25-4-10 ஞாயிறு மாலை 7 மணி அளவில் நாரத கான சபாவில் நடைபெறும் கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸின் கோடை நாடக விழாவில் நான் எழுதி, இயக்கும் 'மனசேதான் கடவுளடா' என்ற நாடகம் அரங்கேறுகிறது.அனுமதி இலவசம்..அனைத்து நண்பர்களையும் அன்புடன் அழைக்கிறேன்

Thursday, March 18, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்(19-3-10)

1) உலகிலேயே இரண்டு தேவாலயங்கள் தான் கல்லறை மீது எழுப்பப் பட்டுள்ளன.ரோம் நகர புனித ராயப்பர் ஆலயம்..மற்றது சென்னையில் உள்ள சாந்தோம் சர்ச்.யேசு கிறிஸ்துவின் பன்னிரெண்டு சீடர்களில் ஒருவர் செயின்ட் தாமஸ்..அவர் பிரச்சாரத்திற்கு வந்த போது..அவர் கொல்லப்பட்டார்.அவர் உடல் இங்குதான் அடக்கம் செய்யப்பட்டது.

2)அலுவலகத்தில்..நம் வேலையில் ஏதேனும் தவறு செய்து விட்டால்..மேல் அதிகாரி கூப்பிடுகையில் நம் இதயம் வேகமாக படபடக்கிறது..உடல் சூடாகிறது..சூட்டைத் தணிக்க உடன் மூளை வியர்வையை வெளியேற்றுகிறது.இப்படி பயத்தில் அதிகமாக வியர்ப்பதற்கு ஹைபெர் ஹைட்ரோஸிஸ் என்று பெயர்

3)வைகோவிற்கு இந்த ஆண்டு அரசியலில் பொன்விழா ஆண்டாம்..அதை பிரம்மாண்டவிழாவாக கொண்டாடத் தயாராகிறது ம.தி.மு.க.,எவ்வளவு ஆண்டானால் என்ன எங்க தலைவருக்கு அரசியல் நடத்தத் தெரியாது என்கிறார் ஒரு ம.தி.மு.க., தொண்டர்..(விழாவிற்கு கலைஞரை தலைமை தாங்கச் சொல்லி..அரசியல் ஆசான் என்று அவருக்கு ஒரு பட்டம் கொடுங்க..கூட்டணி மாற சந்தர்ப்பம் உண்டு - இதைச் சொல்பவர் அதி புத்திசாலி அண்ணாசாமி)

4)கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் 50 லட்ச மனித உழைப்பு நாட்கள் ஸ்டிரைக், கதவடைப்பு என வீணானதாக மத்திய தொழிலாளர் நலத் துறை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இதில் ஆந்திரா முதல் இடம் வகிக்கிறதாம்.அங்கு மட்டும் 22லட்சம் மனித உழைப்பு நாட்கள் வீணானதாம்.

5) புதிய பேரவைக் கட்டிடத்தில் முகட்டில் பிரம்மாண்டமான டூம் அமைக்கப் பட்டுள்ளது.அதன் மீது விழும் சூரிய ஒளிக்கற்றைகள் 100 அடிகள் தாண்டி கீழே..பேரணிக்குள் வட்டமாக விழுவது போல அமைக்கப்பட்டுள்ளதாம்.இது கலைஞரை மிகவும் கவர்ந்துள்ளதாம்.உதய சூரியன் ஒளி நிரந்தரமானது எனக் காட்ட இதைவிட வேறு என்ன வேண்டும்?

6)அடுத்தவர் உங்கள் தவறைச் சுட்டிக்காட்டி..கிண்டல் செய்தால் இரு மடங்கு மகிழுங்கள்..ஒன்று..ஒருவர் மகிழ உங்கள் தவறு உதவியது...மற்றது..மீண்டும் அத் தவறு செய்யாமல் இருக்க அவர் உதவினார்.

7) கொசுறு..ஒரு ஜோக்

இன்னிக்கு என் கிட்ட ஒருத்தர் உன் நண்பன் பெயரைச் சொல் உன்னைப் பற்றி சொல்றேன்னு சொன்னார்..உடனே உன் பெயரைச் சொன்னேன்
உடனே என்ன சொன்னார்
ச்சீன்னு காறித் துப்பிட்டு போயிட்டார்

Wednesday, December 30, 2009

சந்ததிப்பிழைகள்

(சற்று பொறுமையாக படிக்கவேண்டிய பதிவு)
அலிகள் என சமுதாயத்தில் ஓரம் கட்டப்பட்டவர்கள் இவர்கள்.பின் அரவாணிகள் என்றும்..இன்று திருநங்கைகள் என்றும் அழைக்கப் படுகின்றனர்.இவர்களை நா.காமராசன் அவர்கள் காகிதப் பூக்கள் என்கிறார்.அவர்களைப் பற்றி அவர் எழுதிய உருவகக் கவிதையைப் பாருங்கள்.

காலமழைத் தூறலிலே
களையாய்ப் பிறப்பெடுத்தோம்
தாய்ப்பாலின் சரித்திரத்தில்
சதுராடும் புதிரானோம்

விதைவளர்த்த முள்ளானோம்
விளக்கின் இருளானோம்
சதைவளர்க்கும் பிணம்நாங்கள்
சாவின் சிரிப்புகள்

மூங்கையொரு பாட்டிசைக்க
முடவனதை எழுதிவைக்க
முடவன் கை எழுதியதை
முழுக்குருடர் படித்ததுண்டோ?

மூங்கையின் பாட்டானோம்
முடவன்கை எழுத்தானோம்
முழுக்குருடர் படிக்கின்றார்

சந்திப்பிழை போன்ற
சந்ததிப்பிழை நாங்கள்
காலத்தின் பேரேட்டைக்
கடவுள் திருத்தட்டும்

தலைமீது பூவைப்போம்
தாரணியோர் கல்லறையில்
பூவைத்தல் முறைதானே?
பூத்தஉயிர்க் கல்லறைகள் நாங்கள்

தாய்ப்பெண்ணோ முல்லைப்பூ
தனிமலடி தாழம்பூ
வாய்ப்பந்தல் போடுகின்ற நாங்கள்
காகிதப் பூக்கள்.

திருநங்கைகள் பற்றிய உருவகக் கவிதை இது.இனி இதன் அர்த்தத்தைப் பார்ப்போம்

காலம் என்ற மழைத்தூரலில் களையாகப் பிறப்பெடுத்துள்ளோம்.தாய்ப்பாலின் சரித்திரத்தில் சதுராடும் புதிராக ஆனோம்.விதை வளர்த்த முள்ளாக ஆனோம்.சுடர் விளக்கின் இருளாக ஆனோம்.சதை வளர்க்கும் பிணங்கள் நாங்கள்.சாவின் சிரிப்புகள் ஆனோம்.

ஊமை பாட்டிசைக்க, கையில்லா முடவன் அதை எழுதிவைக்க,முழுக்குருடர் அதனைப் படிப்பதால் என்ன பயன் விளையும்?அப்படிப்பட்ட பயனற்ற வாழ்வு எங்களுடையது.

நாங்கள் சந்திப்பிழை போன்ற சந்ததிப் பிழைகள்.காலமென்னும் ஏட்டில் நிகழ்ந்துவிட்ட பிழைகள்.எங்கள் வாழ்வு பிழையுள்ள,பொருளற்ற வாழ்வு.

நாங்கள் பூச்சூடினால் கல்லறைக்குப் பூ வைத்ததுபோல் இருக்கும்.பூச்சூடி உலவினாலும் கூட, நாங்கள் பூத்த கல்லறை போன்று உயிரற்ற சடலத்தின் மீது பூ வைத்தது போல இருக்கும்.

எங்களைப் பெற்றெடுத்த தாய்மார்கள், தாய்மை மணப்பதனால் மணம் வீசும் முல்லைப்பூ போன்றவர்கள்.தனிமலடியாக விளங்கும் ஒவ்வொருவரும் தாழம்பூப் போன்றவர்கள்.வாய்ப்பேச்சால் வக்கணையாகப் பேசும் நாங்களோ மணம் சிறிதும் அற்ற காகிதப்பூக்கள்

இனி நாம்..
இன்றைய காலகட்டத்தில்..அரசு திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்துள்ளது.திருநங்கை என்ற அழகான பெயர் சூட்டியுள்ளது.சமுதாயத்திலும் மக்களிடையே இவர்களுக்கு அங்கீகாரம் கிடைத்துவருகிறது.

ஆயினும்..காமராசனின் இக்கவிதை..அவர்களது மனக்குமறலை அழகாக எடுத்துக் கூறுகிறது.நா.காமராசன் பற்றி அடுத்த பதிவு தொடரும்