Tuesday, August 5, 2008

வாய் விட்டு சிரியுங்க

சுமதி டார்லிங்..உனக்காக என் உயிரையும் கொடுப்பேன்
ஆமாம்..இதையே எவ்வளவோ..தரம் சொல்லிட்டீங்க..ஒரு தரம் கூட செயல்படுத்தலை

2.வீடு கட்டணும்னு கடன் வாங்கினியே கட்டி முடிச்சுட்டியா?
ரூஃப்,அறைகள் எல்லாம் கட்டி முடிச்சுட்டேன்..இன்னும் அஸ்திவாரம் தான் பாக்கி

3.உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் வழக்கமில்லை எனக்கு..
பொய் சொல்லாதே..நேற்றுக்கூட வாழிக்காய் பஜ்ஜின்னு சொன்னே..ஆனா உள்ள
உருளைக்கிழங்குதான் இருந்தது.

4.முட்டாள்னு யாரையோ திட்டினியே..என்னையா?
சே..சே..ஊர்ல உன்னைத்தவிர வேற முட்டாளே இல்லையா என்ன?

5.உன்னோட அறிவுதான் டார்லிங் என்னை மயக்கிடுச்சு
நான் உன்னை லவ் பண்றதுக்கும் அதுதான் காரணம்
என்னைப்போல உன்னாலயும் பொய் சொல்ல முடியுதே

6.கள்ளச்சாராயம் விக்கற பக்கிரியின் பொண்ணை பெண் பார்க்க போனியே என்ன ஆச்சு
பொண்ணு எப்படியிருக்கா?
பீப்பாய் மாதிரி இருக்கா.

22 comments:

  1. //4.முட்டாள்னு யாரையோ திட்டினியே..என்னையா?
    சே..சே..ஊர்ல உன்னைத்தவிர வேற முட்டாளே இல்லையா என்ன?//

    :) கலக்கல்.

    இதையே கொஞ்சம் மாற்றி

    நண்பர் 1 : எனக்கு முட்டாள்களுடன் பேசி பழக்கமில்லை
    நண்பர் 2 : கோபப் படாமல் கேளு, எனக்கு முட்டாள்களுடன் பேசும் பழக்கம் இருக்கிறது !
    :)

    ReplyDelete
  2. "அசத்தப் போவது யாரு", "கலக்கப்போவது யாரு" ஸ்டேண்டப் காமெடி மாதிரி கலக்குறீங்க, சூப்பர்.

    ReplyDelete
  3. எல்லாமே நல்லா இருக்கு சிரிக்கும்படி !

    ReplyDelete
  4. ச்சின்னப்பையன் எப்போதும் போல :-))

    ReplyDelete
  5. கோவி சார் ..நான் தடுக்குல நுழைஞ்சா...நீங்க கோலத்தில நுழையறீங்க

    ReplyDelete
  6. கோவி சார் ..நான் தடுக்குல நுழைஞ்சா...நீங்க கோலத்தில நுழையறீங்க

    ReplyDelete
  7. சயீத்..நீங்க எதாவது சொல்லப்போக..நம்பளை கமல் ரசிகர்ங்கன்னு சொல்லி..ரஜினியை புறக்கணிக்கறாங்கன்னு சொல்லப்போறாங்க

    ReplyDelete
  8. பாஸ்கர் (அறுவைன்னு சொல்ல மனசு வரல்லை) வருகைக்கு நன்றி

    ReplyDelete
  9. //சயீத்..நீங்க எதாவது சொல்லப்போக..நம்பளை கமல் ரசிகர்ங்கன்னு சொல்லி..ரஜினியை புறக்கணிக்கறாங்கன்னு சொல்லப்போறாங்க//

    //முட்டாள்னு யாரையோ திட்டினியே..என்னையா?
    சே..சே..ஊர்ல உன்னைத்தவிர வேற முட்டாளே இல்லையா என்ன?//

    ஏங்க! இதுல ஏதும் உட்குத்து இல்லியே?.

    சத்தியமா நான் இது ரஜினி ரசிகர்களுக்கானது இல்லைன்னு சொல்றேனுங்கோ...

    ReplyDelete
  10. கண்டிப்பா எந்த உட்குத்தும் இல்லீங்கோ

    ReplyDelete
  11. நல்ல காமெடி தான்!

    வால்பையன்

    ReplyDelete
  12. வால் பையன் தங்கள் முதல் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  13. //வால் பையன் தங்கள் முதல் வருகைக்கு நன்றி//

    உங்கள் நன்றிக்கு நன்றி

    வால்பையன்

    ReplyDelete
  14. என் ஹாஸ்ய ரசம் ருசி பார்க்க அழைப்பு விடுக்கிறேன்கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் ,சிந்தனை கலந்த சிரிப்பு என்ற‌ கலவை.அனைவரது கவலையையும் மறக்கவைக்க என் 'சிரி' ய முயற்சி

    ReplyDelete
  15. நன்றாக இருக்கிறது உங்கள் பதிவுகள்

    ReplyDelete
  16. ஜோக்ஸ் ஜூப்பர் கலெக்ஷன்ஸ்

    ReplyDelete