Thursday, August 28, 2008

விழுதுகள் (கவிதை)

அவனுக்கு அவன்மீதே

ஆத்திரம்

நாம் இருவர்

நமக்கு இருவர் - மறந்து

வீங்கிய வயிறுடன்

வீட்டினுள் மணவாட்டி

முத்தாய் மூன்றாவது

முளையிலேயே கிள்ளிடணும்

இல்லையேல் முடியாது

இனிதாய் வாழ்ந்திட

இரவு முழுதும் மனப்புயல்

இடி மழையோ வெளியே

மறுநாள் புயலில்

மரங்கள் பல சாய

ஆலமரமோ சாயவில்லை

ஆதாரம் விழுதுகளே..

வருந்திய மனதில்

வந்தது மகிழ்ச்சி

8 comments:

  1. //வருந்திய மனதில்

    வந்தது மகிழ்ச்சி //

    வருந்தியபடி வாசித்துக் கொண்டே

    வந்த எம் மனதிலும் முடிவு

    தந்தது மகிழ்ச்சி!

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி விஜய்

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி

    ReplyDelete
  4. நல்ல முடிவு! கருத்துள்ள கவிதை!!

    ReplyDelete
  5. //நல்ல முடிவு! கருத்துள்ள கவிதை!!//

    வருகைக்கும்,பாராட்டுதலுக்கும் நன்றி இசக்கி

    ReplyDelete
  6. //நல்லாயிருக்கு.....//

    நன்றி ச்சின்னப்பையன்

    ReplyDelete