Tuesday, September 2, 2008

தயவு செய்து யாராவது உதவுங்களேன்...

கலைஞர் டி.வி.யில் ..வினாயகசதுர்த்தி முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் என்று சொல்லாமல்..விடுமுறை தினத்தை முன்னிட்டு என்றார்கள்.கீழ் கண்ட தினத்தை என்ன வென்று சொல்வார்கள் என விடை தெரியாது குழம்புகிறேன்..யாராவது உதவி..என் சந்தேகத்தை தீர்த்து வையுங்க்ளேன்.
ஜனவரி 14 பொங்கல்தினம் என்று நிகழ்ச்சிகள் வழங்குவார்களா? அல்லது தமிழ் புத்தாண்டை முன்னிட்டு என்பார்களா? அல்லது விடுமுறை தினத்தை முன்னிட்டு என்றுதான் சொல்வார்களா?
ஏப்ரல் 14 அன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு என்பார்களா? அல்லது டாக்டர் அம்பேத்கர் தினத்தை முன்னிட்டு என்பார்களா?அல்லது விடுமுறை தினத்தை முன்னிட்டு என்பார்களா?
சரஸ்வதி பூஜை யன்று என்ன சொல்வார்கள்,விஜயதசமியை என்ன என்று சொல்வார்கள்? தீபாவளியை என்ன என்பார்கள்.,
தமிழக அரசு..இன்ன இன்ன தினங்களுக்கு இதற்காக விடுமுறை என அறிவிக்கிறார்களே...அதை சொல்லாமல் கலைஞர் டி.வி.அரசை அவமதிக்கிறதா?
உயர் மட்டத்தை திருப்தி படுத்த என்றால்...அது யார் ஆணை?
இந்த சந்தேகம் எல்லாம் சாமான்யனுக்கு வருவதால்...இனி அரசு வருடம்தோறும் வெளியிடும் விடுமுறைதினங்களுக்கான அறிவிப்பை எதற்காக விடுமுறை என்று சொல்லாமல்.....விடுமுறை..விடுமுறை என்றே அறிவிக்குமா?

22 comments:

  1. அமெரிக்க நட்புறவை நாடுவதால்

    அங்கே பிறந்த பிரபலமானவர்கள் பட்டியல்.

    http://www.brainyhistory.com/daysbirth/birth_september_3.html

    அங்கே இறந்த பிரபலமானவர்கள் பட்டியல்.

    http://www.brainyhistory.com/daysdeath/death_september_3.html

    அங்கே நடக்கும் பிரபல நிகழ்ச்சிகள்.

    http://www.brainyhistory.com/days/september_3.html


    பிள்ளையார் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சில

    நமீதாவுக்கு பிடித்தமான சமையல் போட்டா பொருத்தமா இருக்குமா

    இல்லாட்டி

    விடுமுறை சிறப்பு நிகழ்ச்சில போட்டா பொருத்தமா இருக்குமா ?

    ReplyDelete
  2. :)

    நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருக்கு இன்று என்ன நாள்னு குழப்பமா இருந்தா இப்படி பொதுவா விடுமுறைனு சொல்லலாம்!!!!

    ReplyDelete
  3. cud u pls allow openID ?
    thanks
    subash

    ReplyDelete
  4. ஞாயிற்றுகிழமை கூடத்தான் விடுமுறை அன்னைக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் போடுவாங்களா

    ReplyDelete
  5. //பிள்ளையார் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சில

    நமீதாவுக்கு பிடித்தமான சமையல் போட்டா பொருத்தமா இருக்குமா

    இல்லாட்டி

    விடுமுறை சிறப்பு நிகழ்ச்சில போட்டா பொருத்தமா இருக்குமா//

    அப்போ அந்த வகையில் கடவுளுக்கு மரியாதை கொடுக்கிறார்கள் என்று சொல்கறீர்களா?

    ReplyDelete
  6. // சுபாஷ் said...
    :)

    நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருக்கு இன்று என்ன நாள்னு குழப்பமா இருந்தா இப்படி பொதுவா விடுமுறைனு சொல்லலாம்!!!!//


    அப்போ கலைஞர் டி.வி.லே வேலை செய்யறவங்க குழப்பவாதிகள்..சரிதானே சுபாஷ்

    ReplyDelete
  7. //வால்பையன் said...
    ஞாயிற்றுகிழமை கூடத்தான் விடுமுறை அன்னைக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் போடுவாங்களா//


    வால்பையன்..ஆனாலும் உங்களுக்கு ரொம்ப பேராசை..வாரா வாரம் சிற(ரி)ப்பு நிகழ்ச்சிகள் போடணும்னு ஆசைப்படறீங்களே!!!

    ReplyDelete
  8. rapp சில நாட்களுக்குப் பிறகு..உங்கள் பதிவுகளையும்,பின்னூட்டத்தையும் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது

    ReplyDelete
  9. //ஞாயிற்றுகிழமை கூடத்தான் விடுமுறை அன்னைக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் போடுவாங்களா//

    வழமையாகவே Sunday Special / weekend Special என்று போடுவாங்கதானே???
    :)

    ReplyDelete
  10. //அப்போ கலைஞர் டி.வி.லே வேலை செய்யறவங்க குழப்பவாதிகள்..சரிதானே சுபாஷ்//

    ஆஹா. நா இதுக்கு வரலப்பா!!!
    ஹிஹி

    குழப்பவாதிகள் என்று சொல்லல.
    குழம்பிப்போயிருக்கலமென்றுதா சொன்னேன்
    ( தப்பிச்சேன்)

    ReplyDelete
  11. *******அப்போ அந்த வகையில் கடவுளுக்கு மரியாதை கொடுக்கிறார்கள் என்று சொல்கறீர்களா******

    நமீதாவோட பிடிச்ச சமையல பத்தி சொன்னா கடவுளுக்கு மரியாதை இல்லாம போய்டுமா ? இல்லாட்டி கடவுள் கலைஞர் டிவி மரியாதை கொடுக்காட்டி சன் டிவிக்கு போய்டுவாரா ?

    அந்த நிகழ்ச்சி சிறப்பு தினத்துக்கு relevant இல்லன்னு சொல்லவந்தா, நீங்க அத நக்கல் பண்றீங்க !! நான் மட்டும் தான் இதுவரைக்கும் நக்கலுக்காக எந்த பின்னூட்டமும் போடறது இல்ல.

    ReplyDelete
  12. //நமீதாவோட பிடிச்ச சமையல பத்தி சொன்னா கடவுளுக்கு மரியாதை இல்லாம போய்டுமா ? இல்லாட்டி கடவுள் கலைஞர் டிவி மரியாதை கொடுக்காட்டி சன் டிவிக்கு போய்டுவாரா ?

    அந்த நிகழ்ச்சி சிறப்பு தினத்துக்கு relevant இல்லன்னு சொல்லவந்தா, நீங்க அத நக்கல் பண்றீங்க !! நான் மட்டும் தான் இதுவரைக்கும் நக்கலுக்காக எந்த பின்னூட்டமும் போடறது இல்ல.//


    நக்கல் வேறு..ஜோக்குக்காக சொல்வது வேறு..இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது என எண்ணுகிறேன்.வருகைக்கு நன்றி அவனும் அவளும்

    ReplyDelete
  13. நச் கேள்வி கேட்ட வால் வாழ்க!!!

    ReplyDelete
  14. // ச்சின்னப் பையன் said...
    நச் கேள்வி கேட்ட வால் வாழ்க!!!//

    :-)))))

    ReplyDelete
  15. நான் என்னவோ ஏதோ என்று ஓடோடி வந்தேன். வந்தால்....ப்பூ! இதுதானா?

    ReplyDelete
  16. //நானானி said...
    நான் என்னவோ ஏதோ என்று ஓடோடி வந்தேன். வந்தால்....ப்பூ! இதுதானா?//


    உங்களை ஓடி வர அளவுக்கு டைடில் போட்டுட்டேன் பார்த்தீங்களா நானானி

    ReplyDelete
  17. ahaa ! ivvalavu seriousaa neenga ? sorry sir.

    ReplyDelete
  18. ahaa ! ivvalavu seriousaa neenga ? sorry sir.

    ReplyDelete
  19. // அவனும் அவளும் said...
    ahaa ! ivvalavu seriousaa neenga ? sorry sir.//

    ஆஹா..எல்லாவற்றையும் சீரியஸாகத்தான் நீங்க எடுத்துப்பீங்களா? சாரி சார்/மேடம்

    ReplyDelete
  20. /
    வால்பையன் said...

    ஞாயிற்றுகிழமை கூடத்தான் விடுமுறை அன்னைக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் போடுவாங்களா
    /

    சூப்பர் கேள்வி
    :))))))

    ReplyDelete
  21. //வால்பையன் said...

    ஞாயிற்றுகிழமை கூடத்தான் விடுமுறை அன்னைக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் போடுவாங்களா
    /

    சூப்பர் கேள்வி
    :))))))//

    சன் டி.வி.லே சிறப்பு நிகழ்ச்சி இருந்தா..கலைஞரிலும் இருக்கும்..அதற்கு விடுமுறைதான் வேண்டும் என்பதில்லை

    ReplyDelete