Saturday, September 27, 2008

வாய் விட்டு சிரியுங்க

1.அந்த டாக்டர் ஐயப்ப பக்தர்னு எப்படி சொல்ற..
தலைவலின்னு போனாக்கூட படிப்படியா 18 நாள் மருந்து சாப்பிடணும்னு சொல்வார்.

2.அந்த டாக்டர் முன்னாலே சினிமா டைரக்டரா இருந்தார்னு எப்படி சொல்ற
நோயாளிகிட்டே 4 ரோல் எக்ஃஸ்ரே ஃபிலிம் எடுத்துடுங்கன்னு சொல்றாரே!!

3.புயல் மழையாலே மாமூல் வாழ்க்கை பாதிக்கப்பட்டதுன்னு சொல்றாங்களே..ஏன்?
மாமூல் வாங்கறவங்க வாழ்க்கை பாதிக்கப்பட்டதை அப்படி சொல்றாங்க போல யிருக்கு.

4.தயாரிப்பாளர்-கண்ணே..கலைமானே ங்கிற பாட்டை நீங்க எழுதினீங்களா?
கவிஞர்- ஆமாம்
தயாரிப்பாளர்- வாங்க கண்ணதாசன் ஐயா...இவ்வளவு நாட்கள் நீங்கள் அமரர் ஆகிட்டீங்கன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.

5.உன் பையன் புதுசா..ஏதோ பிஸினஸ் ஆரம்பிக்கப்போறதா சொன்னியே..என்ன பிசினஸ்
மெகா சீரியல் பார்க்கறச்சே எப்படி அழணும்னு சொல்லிக்கொடுக்கப் போறானாம்.

6.கல்யாணம் ஆனதிலே இருந்து..வனஜாவுக்கு கர்வம் ரொம்ப அதிகமாயிடுச்சு
ஏன்
அவ புருஷன் அருமையா சமைக்கிறானாம்.

6 comments:

  1. 3 ஆம் நம்பர் சிரிப்பு ஓகே.
    நன்றி.

    ReplyDelete
  2. :)
    :))
    :))))
    :)))))
    ( வேற ஒன்னுமில்ல. எக்கோ!!)

    2ம் 4ம் என் சாய்ஸ்!!!

    ReplyDelete
  3. // வடகரை வேலன் said...
    :-)))))))))))
    //
    வருகைக்கு நன்றி வேலன்...மீண்டும் வாருங்கள்

    ReplyDelete
  4. //ஜுர்கேன் க்ருகேர் said...
    3 ஆம் நம்பர் சிரிப்பு ஓகே.
    நன்றி.//

    வருகைக்கு நன்றி ஜூர்கேன்

    ReplyDelete
  5. //சுபாஷ் said...
    :)
    :))
    :))))
    :)))))
    ( வேற ஒன்னுமில்ல. எக்கோ!!)//


    நன்றி ..நன்றி.,

    :-)))))))))))

    சோகக்குறி அல்ல..

    எதிரொலியை திருப்பி அனுப்பி உள்ளேன்

    ReplyDelete