Sunday, October 12, 2008

வாய் விட்டு சிரியுங்க..

1.மாப்பிள்ளை வீட்டோட இருக்கிறார்னு வருத்தப் படுவியே..இப்ப எப்படி இருக்கிறார்
வீட்டோட அப்பாவா மாறிட்டார்

2ஜோசியர்-உங்க ஜாதகப்படி ..சன்னதி தெருவில இருக்கிற 54ம் நம்பர் வீட்டுல இருக்கிற பொண்ணு மனைவியா இருக்க வாய்ப்பிருக்கு
கேட்பவர்-அது எப்படி உங்களால விலாசத்தைக்கூட கரக்டா சொல்ல முடியுது
ஜோசியர்-என் வீட்டு விலாசம் எனக்குத் தெரியாதா?

3.நேற்று ராத்திரி 12 மணிவரைக்கும் தூக்கம் வரல்லே கடைசில ஆவி வந்ததும்தான் தூக்கம் வந்தது
என்ன சொல்ற
கொட்டாவியைச் சொன்னேன்

4பெண்ணுக்கு லேடின்னு ஏன் இங்கிலீஷ்ல சொல்றோம் தெரியுமா?
ஏன்?
லேடி யை திருப்பிப்படி.அவங்க எல்லாவற்றிலும் டிலேயா இருக்கறதால

5.அவன் அண்டப்புளுகன்னு எப்படி சொல்ற
அவன் ஊர்ல கரண்ட் கட்டே இல்லைன்னு சொல்றான்.

6.டாக்டர் நான் டூட்டில இருக்கறப்போ தூங்கிடறேன்
அதனால தப்பு இல்ல..ஆமாம் என்ன வேலை செய்யறீங்க?
பஸ் டிரைவராயிருக்கேன்

14 comments:

  1. //4பெண்ணுக்கு லேடின்னு ஏன் இங்கிலீஷ்ல சொல்றோம் தெரியுமா?
    ஏன்?
    லேடி யை திருப்பிப்படி.அவங்க எல்லாவற்றிலும் டிலேயா இருக்கறதால//

    பெண்ணியவாதிகள் நாளை உங்கள் வீட்டு முன் மாபெரும் போராட்டமாம்,

    பேசாமல் இந்த பதிவை காஞ்சனா அம்மாதான் எழுதியதாக பின் குறிப்பு போட்டுவிடுங்க.

    :)))))))))

    ReplyDelete
  2. //5.அவன் அண்டப்புளுகன்னு எப்படி சொல்ற
    அவன் ஊர்ல கரண்ட் கட்டே இல்லைன்னு சொல்றான்.//

    வாய் விட்டு சிரியுங்க. பதிவிலும் அரசியலா...
    ஹி ஹி ஹி

    ReplyDelete
  3. //விஜய் ஆனந்த் said...
    :-))))...//

    வருகைக்கு நன்றி விஜய்

    ReplyDelete
  4. //Subash said...
    :)))))))))))))))))))))))//

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  5. ///கோவி.கண்ணன் said...
    //4பெண்ணுக்கு லேடின்னு ஏன் இங்கிலீஷ்ல சொல்றோம் தெரியுமா?
    ஏன்?
    லேடி யை திருப்பிப்படி.அவங்க எல்லாவற்றிலும் டிலேயா இருக்கறதால//

    பெண்ணியவாதிகள் நாளை உங்கள் வீட்டு முன் மாபெரும் போராட்டமாம்,//


    பெண்ணியவாதிகள்..போராட்டமா..வரட்டும்..வரட்டும்..பெண்களுக்கு பயந்தவன் இல்லை நான்..இருங்க...காஞ்சனா அம்மா வராங்க..உங்ககிட்ட அப்பறம் பேசறேன்
    :-(((((

    ReplyDelete
  6. // Saravana Kumar MSK said...
    //5.அவன் அண்டப்புளுகன்னு எப்படி சொல்ற
    அவன் ஊர்ல கரண்ட் கட்டே இல்லைன்னு சொல்றான்.//

    வாய் விட்டு சிரியுங்க. பதிவிலும் அரசியலா...
    ஹி ஹி ஹி//

    என்ன செய்யறது சரவணகுமார்..பதிவு எழுதலாம்னு உட்கார்ந்தா..உடனே அரசியல் ஞாபகம் வந்துடுது.

    ReplyDelete
  7. வருகைக்கு நன்றி ச்சின்னப் பையன்

    ReplyDelete
  8. ஜோக்ஸ் எல்லாம் சூப்பர் சார்.

    ReplyDelete
  9. //மணிகண்டன் said...
    ஜோக்ஸ் எல்லாம் சூப்பர் சார்.//

    நன்றி மணிகண்டன்

    ReplyDelete