Tuesday, October 21, 2008

வாய் விட்டு சிரியுங்க...

1.யாதும் ஊரே..யாவரும் கேளிர் என்ற கொள்கை உடையவர் எங்க தலைவர்..ஓட்டலுக்குப் போனாலும்..காசி ஹல்வாவும்,கல்கத்தா ரசகுல்லாவும்,மங்களூர் போண்டாவும்..மும்பை மீல்ஸூம் தான் சாப்பிடுவார்.

2.தலைவர் இடைத்தேர்தலுக்கு ஏன் பெண் வேட்பாளரை அறிவிச்சிருக்கார்
'இடை'த்தேர்தல்னா அதுலே பெண்கள்தானே வெற்றி பெற முடியும்.

3.அதோ போறாரே அவர் நம்மை 'சௌக்யமா'ன்னு விசாரிக்கமாட்டார்
ஏன்?
அவர் டாக்டர் ஆச்சே

4.கவர்ச்சி நடிகை காந்தா நிர்வாண நிதி திரட்டறாங்களாம்
ஐயோ..அது நிர்வாணநிதி இல்லை..நிவாரண நிதி

5.கோவியானந்தா- நீங்க துறவியானதற்கு காரணம்?
ராதானந்தா-மனைவி..குழந்தைகள் தான் காரணம்..ஆமாம் நீங்க?
கோவியானந்தா-மனைவி குழந்தைகள் இல்லாததுதான் காரணம்

6.மகன்-(தந்தையிடம்)அப்பா நீ எந்த ஊர்ல பிறந்தே
தந்தை-திருநெல்வேலியில்
மகன்- அம்மா
தந்தை-மும்பையில்
மகன்- நான்
தந்தை-சென்னயில்
மக்ன்- என்ன ஆச்சர்யம்..எங்கெங்கோ பிறந்த நாம எப்படி ஒன்னா திருச்சிலே சேர்ந்திருக்கோம்

17 comments:

  1. //////5.கோவியானந்தா- நீங்க துறவியானதற்கு காரணம்?/////

    அவர் எப்போ துறவியானார்?:-))))
    வேறு பெயர் கிடைக்கவில்லையா உங்களுக்கு?:-)))

    ReplyDelete
  2. //மகன்-(தந்தையிடம்)அப்பா நீ எந்த ஊர்ல பிறந்தே
    தந்தை-திருநெல்வேலியில்
    மகன்- அம்மா
    தந்தை-மும்பையில்
    மகன்- நான்
    தந்தை-சென்னயில்
    மக்ன்- என்ன ஆச்சர்யம்..எங்கெங்கோ பிறந்த நாம எப்படி ஒன்னா திருச்சிலே சேர்ந்திருக்கோம் //


    s.J சூர்யாவுக்கு ஒரு கதை கிடைச்சிட்டு போல

    ReplyDelete
  3. இடைத்தேர்தல் நல்ல தமாசு

    ReplyDelete
  4. ////// SP.VR. SUBBIAH said...
    //////5.கோவியானந்தா- நீங்க துறவியானதற்கு காரணம்?/////

    அவர் எப்போ துறவியானார்?:-))))
    வேறு பெயர் கிடைக்கவில்லையா உங்களுக்கு?:-)))//////

    SP.VR. SUBBIAH said...
    //////5.கோவியானந்தா- நீங்க துறவியானதற்கு காரணம்?/////

    அவர் எப்போ துறவியானார்?:-))))
    வேறு பெயர் கிடைக்கவில்லையா உங்களுக்கு?:-)))

    ReplyDelete
  5. //.கவர்ச்சி நடிகை காந்தா நிர்வாண நிதி திரட்டறாங்களாம்
    ஐயோ..அது நிர்வாணநிதி இல்லை..நிவாரண நிதி //

    அடச்சே!!!!

    ReplyDelete
  6. //இடை'த்தேர்தல்னா அதுலே பெண்கள்தானே வெற்றி பெற முடியும்.
    //
    எல்லா பெண்களும் வெற்றி பெற முடியாது:)

    ReplyDelete
  7. எங்கேந்து சார் இவ்வளவு ஜோக் புடிக்கறீங்க ? கலக்கலா இருந்தது.

    கோவியானந்தானு பேரு இல்லாட்டி நம்பர் 5 ஜோக்ல வரும் தகுதிய இழக்குது. அது வாழ்க்கையோட நிதர்சனம்.

    ReplyDelete
  8. இடைத்தேர்தலுக்கு நிர்வாண நிதி திரட்டினத ரசிச்சேன்.

    ReplyDelete
  9. ///SP.VR. SUBBIAH said...
    //////5.கோவியானந்தா- நீங்க துறவியானதற்கு காரணம்?/////

    அவர் எப்போ துறவியானார்?:-))))
    வேறு பெயர் கிடைக்கவில்லையா உங்களுக்கு?:-)))///


    நீங்கள் சொல்லும் கோவியானந்தா..வேறு..நான் சொல்பவர் வேறு..ஏதேது..எங்களுக்குள் சண்டை மூட்டிவிடுவீர்கள் போலிருக்கிறது
    ;-))))).

    ReplyDelete
  10. // பக்கி லுக் ... said...

    s.J சூர்யாவுக்கு ஒரு கதை கிடைச்சிட்டு போல//


    வருகைக்கு நன்றி பக்கிலுக்

    ReplyDelete
  11. ///ஜுர்கேன் க்ருகேர் said...
    இடைத்தேர்தல் நல்ல தமாசு///

    வருகைக்கு நன்றி ஜுர்கேன் க்ருகேர்

    ReplyDelete
  12. //// ச்சின்னப் பையன் said...
    //.கவர்ச்சி நடிகை காந்தா நிர்வாண நிதி திரட்டறாங்களாம்
    ஐயோ..அது நிர்வாணநிதி இல்லை..நிவாரண நிதி //

    அடச்சே!!!!////

    :-)))))

    ReplyDelete
  13. //// குடுகுடுப்பை said...
    //இடை'த்தேர்தல்னா அதுலே பெண்கள்தானே வெற்றி பெற முடியும்.
    //
    எல்லா பெண்களும் வெற்றி பெற முடியாது:)///

    :-)))))))

    ReplyDelete
  14. //மணிகண்டன் said...
    எங்கேந்து சார் இவ்வளவு ஜோக் புடிக்கறீங்க ? கலக்கலா இருந்தது.

    கோவியானந்தானு பேரு இல்லாட்டி நம்பர் 5 ஜோக்ல வரும் தகுதிய இழக்குது. அது வாழ்க்கையோட நிதர்சனம்.//

    எங்களுக்குள் சண்டை மூட்டிவிடுவீர்கள் போலிருக்கிறது

    ReplyDelete
  15. // வடகரை வேலன் said...
    இடைத்தேர்தலுக்கு நிர்வாண நிதி திரட்டினத ரசிச்சேன்.//

    வருகைக்கு நன்றி வடகரை வேலன்

    ReplyDelete
  16. வருகைக்கு நன்றி நசரேயன்

    ReplyDelete