Tuesday, December 16, 2008

நட்பின் சிறப்பு என்பது யாதெனில்....

உயிர் காப்பான் தோழன்..என்பர்.

அது எவ்வளவு தூரம் உண்மை என நான் அறியேன்..ஏனெனில் நான் யார் உயிரையும் காப்பாற்றியதில்லை..என்னையும் யாரும் காப்பாற்றியதில்லை.

ஆனால்..நமக்கு வாழ்வில்..ஏற்படும் நண்பர்கள்தான் எவ்வளவு?

பள்ளி பருவத்தில்...உண்டாகும் இளம் நண்பர்கள்..மன விகாரம் இல்லா வயது.கிடைத்த அனைத்தையும் பகிர்ந்துக் கொள்ளும் வயது.ஒன்றாக சேர்ந்து விளையாடிய வயது.மாமரத்தில் இருந்து விழும் அல்லது திருடும் மாங்காயை..உப்பு ,காரம் தோய்த்து சாப்பிட்ட நட்பு,கமர்கட்டை காக்காய் கடி கடித்து பகிர்ந்துக் கொண்ட வயது.போட்டி படிப்பில் மட்டுமே.இப்படி அந்த கால நட்பு..மனதில் பசுமரத்தாணி போல பதிந்து இன்றும் நினைவில் அவர்கள் பெயர் தங்கியிருக்கும் நட்பு.

அடுத்து..கல்லூரி கால நட்பு.பெற்றோர் கஷ்டப்பட்டு செலவு செய்து படிக்க வைப்பது தெரிந்தும்..பணத்தைப்பற்றி கவலைப்படாமல் இருக்கும் வயது.இக்காலத்தில் ஏற்படும் நட்பு சிலருக்கு வாழ்வில்..சிகரெட்,மது,மாது..போன்ற பழக்கங்களை ஏற்படுத்தி வைக்கிறது..அப்படிப்பட்டவர் நட்பு இவ்வயதில் அதிகம் கிடைக்கிறது.இப்படிப்பட்ட நட்பு..ஆசைக்காக..சில எதிர்ப்பார்ப்புகளோடு அமைந்து விடுகிறது.இப்பருவ நட்பு கம்பி மேல் நடப்பது போல.

அதைத் தாண்டி வந்தால்..அலுவலகத்தில், உடன் வேலை செய்வார் நட்பு.இந்த சமயம்...நிறைய சம்பாதிக்க வேண்டும்,சமுதாயத்தில் ஒரு பெரிய மனிதனாக வரவேண்டும்..அவனைவிட நான் பெரிய ஆளாக வர வேண்டும் என்றெல்லாம் எண்ணக்கூடிய சுயநலம் நிறைந்த நட்பு..

பின் ஓய்வு பெற்றதும்..கிடைக்கும் நட்பு...பழைய வாழ்வை அசை போடும் நண்பர்களுடன்.

இப்படி ஒவ்வொரு பருவத்திலும்..பல வேறுபட்ட நண்பர்கள்..பள்ளி பருவம் முதல்..கடைசி வரை தொடரும் நட்பு..ஒரு சிலருக்கே கிட்டும்.அப்படிப்ப நட்பு அமைந்தால் அதுதான் சிறந்த நட்பு..அப்படிப்பட்டவன் தான் சிறந்த நண்பன்.

ஆனால் எப்பருவத்தில்..எவ்வளவு நாட்கள் தொடரும் நட்பாய் இருந்தாலும்..வீட்டில்..பெற்றோரோ,மனைவியோ கோபப்பட்டால், அதைத் தாங்கும் மனம்..நண்பன் ஒருவன் நம்மை தவறாக புரிந்துக் கொண்டால்..கடுமையாக ஏசி விட்டால்/பேசிவிட்டால் தாங்க மாட்டேன் என்கிறது.

இது தான் நட்பின் சிறப்பு.

11 comments:

  1. //வீட்டில்..பெற்றோரோ,மனைவியோ கோபப்பட்டால், அதைத் தாங்கும் மனம்..நண்பன் ஒருவன் நம்மை தவறாக புரிந்துக் கொண்டால்..கடுமையாக ஏசி விட்டால்/பேசிவிட்டால் தாங்க மாட்டேன் என்கிறது.

    இது தான் நட்பின் சிறப்பு.
    //

    காரணம் உண்டு இரத்த தொடர்பு உள்ளவர்களிடம் என்ன தான் கடுமையாக பேசினாலும் காலையில் அவங்க முகத்தில் தான் விழிக்கனும்.

    அப்படி ஒரு நிலை இல்லாததால் நண்பன் தவறாக பேசிவிட்டால் 'போடா வெண்ணை' என்று எளிதாக சொல்லிவிட முடிகிறது

    ReplyDelete
  2. நண்பன் கடுமையாக பேசினால் மன வேதனை அதிகமாக ஆகி விடுகிறது..என்பது உண்மைதானே!!

    ReplyDelete
  3. அன்பு வேண்டுகோள் !

    ஐயா, காஞ்சனா அம்மாவுக்கு உங்கள் நட்சத்திர வாரத்தில் சில பதிவுகள் போட வாய்ப்பு ஏற்படுத்தி கொடுங்கள்.

    சமையல் குறிப்பு பதிவாக இருந்தாலும் சரி, பொங்கல் நெருங்குது...பல வித பொங்கல்கள் செய்முறை பற்றி போட்டால் நல்லா இருக்கும். காஞ்சனா அம்மாவின் சமையல் குறிப்பை வச்சுதான் வடைகறி செய்யக் கற்றுக் கொண்டேன்.

    ReplyDelete
  4. நம் பால்ய நண்பர்களில் இருந்து, தற்போதைய நண்பர்கள் வரை, நண்பர்கள் மாறலாம். நட்பு மாறுவதில்லை. நம் மனமும் முதிர்ச்சியும் மாறும் போது நட்பும் மாறுகிறது.

    சில நேரங்களில் சூழ்நிலையின் நிர்பந்தத்தால் ஏற்படும் நட்பிற்கு மட்டும் எனக்கு விளக்கமே கிடைப்பதில்லை. அப்படி நிர்பந்தித்து ஏற்படும் நட்பு நட்பே ஆகாது என்று தோன்றும்.

    //ஆனால் எப்பருவத்தில்..எவ்வளவு நாட்கள் தொடரும் நட்பாய் இருந்தாலும்..வீட்டில்..பெற்றோரோ,மனைவியோ கோபப்பட்டால், அதைத் தாங்கும் மனம்..நண்பன் ஒருவன் நம்மை தவறாக புரிந்துக் கொண்டால்..கடுமையாக ஏசி விட்டால்/பேசிவிட்டால் தாங்க மாட்டேன் என்கிறது. //

    உண்மை தான். உறவு இரத்த பந்தத்தால் மட்டுமே வருவது. அவர்கள் நம்மை புரிந்துகொள்வதை விட, நட்பு என்பது புரிதலின் பேரில் ஏற்படுவதால், அங்கு முறிவு ஏற்பட்டால் மனம் வலிக்கிறது.

    உங்கள் பதிவு, என்னை, சிறுவயதில் ஆரம்பித்த நட்பு முதல் இன்றளவு நான் கடந்து வந்த பாதையையும் நட்பையும் அசைபோட வைத்து ஆனந்திக்க வைத்தது. நன்றி.

    ReplyDelete
  5. //,மனைவியோ கோபப்பட்டால், அதைத் தாங்கும் மனம்.//



    அடுத்த வேளை சோறு கிடைக்காதே

    ReplyDelete
  6. /// கோவி.கண்ணன் said...
    அன்பு வேண்டுகோள் !

    ஐயா, காஞ்சனா அம்மாவுக்கு உங்கள் நட்சத்திர வாரத்தில் சில பதிவுகள் போட வாய்ப்பு ஏற்படுத்தி கொடுங்கள்.

    சமையல் குறிப்பு பதிவாக இருந்தாலும் சரி, பொங்கல் நெருங்குது...பல வித பொங்கல்கள் செய்முறை பற்றி போட்டால் நல்லா இருக்கும். காஞ்சனா அம்மாவின் சமையல் குறிப்பை வச்சுதான் வடைகறி செய்யக் கற்றுக் கொண்டேன்.///


    தமிழா...தமிழா..ல சமையல் குறிப்பு வர்றதை அவங்க விரும்பலை கோவி.

    ReplyDelete
  7. //Shakthiprabha said...
    நம் பால்ய நண்பர்களில் இருந்து, தற்போதைய நண்பர்கள் வரை, நண்பர்கள் மாறலாம். நட்பு மாறுவதில்லை. நம் மனமும் முதிர்ச்சியும் மாறும் போது நட்பும் மாறுகிறது.

    சில நேரங்களில் சூழ்நிலையின் நிர்பந்தத்தால் ஏற்படும் நட்பிற்கு மட்டும் எனக்கு விளக்கமே கிடைப்பதில்லை. அப்படி நிர்பந்தித்து ஏற்படும் நட்பு நட்பே ஆகாது என்று தோன்றும்.

    //ஆனால் எப்பருவத்தில்..எவ்வளவு நாட்கள் தொடரும் நட்பாய் இருந்தாலும்..வீட்டில்..பெற்றோரோ,மனைவியோ கோபப்பட்டால், அதைத் தாங்கும் மனம்..நண்பன் ஒருவன் நம்மை தவறாக புரிந்துக் கொண்டால்..கடுமையாக ஏசி விட்டால்/பேசிவிட்டால் தாங்க மாட்டேன் என்கிறது. //

    உண்மை தான். உறவு இரத்த பந்தத்தால் மட்டுமே வருவது. அவர்கள் நம்மை புரிந்துகொள்வதை விட, நட்பு என்பது புரிதலின் பேரில் ஏற்படுவதால், அங்கு முறிவு ஏற்பட்டால் மனம் வலிக்கிறது.

    உங்கள் பதிவு, என்னை, சிறுவயதில் ஆரம்பித்த நட்பு முதல் இன்றளவு நான் கடந்து வந்த பாதையையும் நட்பையும் அசைபோட வைத்து ஆனந்திக்க வைத்தது. நன்றி.//
    நன்றி Shakthiprabha

    ReplyDelete
  8. /// SUREஷ் said...
    //,மனைவியோ கோபப்பட்டால், அதைத் தாங்கும் மனம்.//



    அடுத்த வேளை சோறு கிடைக்காதே///


    உங்களுக்கு எப்படி இப்படியெல்லாம் நினைக்கத் தோணுது? :-)))))

    ReplyDelete
  9. நான் நட்புல ரெண்டும் கட்டா நிலையை தாண்டிவிட்டேன்

    ReplyDelete
  10. /// நசரேயன் said...
    நான் நட்புல ரெண்டும் கட்டா நிலையை தாண்டிவிட்டேன்///

    ReplyDelete
  11. /// நசரேயன் said...
    நான் நட்புல ரெண்டும் கட்டா நிலையை தாண்டிவிட்டேன்///

    :-))))

    ReplyDelete