Thursday, January 22, 2009

கோவி. சென்னை வருகை..

இலங்கை தமிழர் பிரச்னை சம்பந்தமாக..பிரனாப் முகர்ஜியை இலங்கை அனுப்புவதாக பிரதமர் டிசம்பர் திங்கள் 4ம் நாள்..கலைஞர் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள் சந்தித்தபோது உறுதிமொழி கொடுத்ததை...பிரதமரே..மறந்திருந்தாலும்..நாம் மறக்கவில்லை.

பின்னர் தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் பேசிய கலைஞர்..ஒவ்வொரு நிமிஷமும்..ஒரு அப்பாவி தமிழன் இலங்கையில் இறக்கிறான் என்றார்.அந்த கணக்குப்படி பார்த்தாலும்..இதுவரை..70000 தமிழர்கள்..டிசம்பர் 4 முதல்..இந்த பதிவு இடும் நேரம் வரை இறந்திருக்கக்கூடும்.

இந்நிலையில்..தமிழக சட்டமன்றத்தில்...இன்று கலைஞர், பேரவைத் தலைவர் அனுமதியுடன் 'ஐயகோ!இலங்கையில் தமிழ் இனம் அழிகிறது.இந்திய பேரரசுக்கு "இறுதி வேண்டுகோள்" என்ற தீர்மானத்தை முன் மொழிவதாக இருக்கிறார்.

இச்செய்தி கேட்டதும்..உடல்நலக் குறைவால்..work from home செய்துவரும் மன்மோகன் சிங்..'தமிழ் மக்களின் உணர்ச்சிகளை புரிந்துக் கொள்வதாகவும்..உடனடியாக..தன் சார்பில் கோவியை சிங்கையிலிருந்து கலைஞரை சந்திக்க தன் தூதுவராக அனுப்புவதாக தெரிவித்துள்ளார்.

கோவியார்..கலைஞரை சந்தித்ததும் ..பிரனாப் இலங்கை அனுப்பும் தேதி நிச்சயிக்கப்படும் என தெரிகிறது.கோவியாரும்...தன் பயணத்தினால்..ஏற்பட்டுள்ள..முன்னேற்றம் குறித்து..நிருபர்களை..சென்னை மெரினாவில்..காந்தி சிலை அருகே.25-1-09.ஞாயிறன்று மாலை 5 மணி அளவில் சந்திக்கிறார்.

11 comments:

  1. ஹா ஹா ஹா ஹா!
    கண்கள் பனிக்கின்றன!! இதயம் இனிக்கிறது!!!

    ReplyDelete
  2. //கோவியார்..கலைஞரை சந்தித்ததும் ..பிரனாப் இலங்கை அனுப்பும் தேதி நிச்சயிக்கப்படும் என தெரிகிறது.கோவியாரும்...தன் பயணத்தினால்..ஏற்பட்டுள்ள..முன்னேற்றம் குறித்து..நிருபர்களை..சென்னை மெரினாவில்..காந்தி சிலை அருகே.25-1-09.ஞாயிறன்று மாலை 5 மணி அளவில் சந்திக்கிறார்.//

    :)) கொன்னுட்டிங்க போங்க !

    ReplyDelete
  3. பிரணாப் முகர்ஜி நல்லா கொட்டாவி விடுவார் தெரியும். கோவியாரும் நல்லா கொட்டாவி விடுவாரா?

    ReplyDelete
  4. நாத்தழுதழுக்க நீங்கள் கேட்டதே ..நீங்கள் எங்களது உணர்வுகளை புரிந்துகொண்டிருப்பதை தெரிவிக்கிறது

    ReplyDelete
  5. //:)) கொன்னுட்டிங்க போங்க !//
    யாரை கோவி..அப்போது இதையும் சேர்த்து 70001 ஆ!!!

    ReplyDelete
  6. //ஜோதிபாரதி said...
    பிரணாப் முகர்ஜி நல்லா கொட்டாவி விடுவார் தெரியும். கோவியாரும் நல்லா கொட்டாவி விடுவாரா?//


    இந்த பிரதமருக்கு...கொட்டாவியைத் தவிர..வேற என்ன ஆவியை அனுப்பி என்ன பயன்

    ReplyDelete
  7. //இந்த பிரதமருக்கு...கொட்டாவியைத் தவிர..வேற என்ன ஆவியை அனுப்பி என்ன பயன்//


    அதனால் தான் கோவியை அனுப்புகிறாரோ?

    ReplyDelete
  8. ///ஜோதிபாரதி said...
    //இந்த பிரதமருக்கு...கொட்டாவியைத் தவிர..வேற என்ன ஆவியை அனுப்பி என்ன பயன்//


    அதனால் தான் கோவியை அனுப்புகிறாரோ?///

    :-)))))))))

    ReplyDelete
  9. அடடா கோவியாரின் பயணத்தையும் அரசியலாக்கிடீங்களே.?

    ReplyDelete
  10. //’டொன்’ லீ said...
    அடடா கோவியாரின் பயணத்தையும் அரசியலாக்கிடீங்களே.?//


    வருகைக்கு நன்றி ’டொன்’ லீ

    ReplyDelete
  11. கோவி அண்ணன் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete