Wednesday, February 11, 2009

வாய் விட்டு சிரியுங்க..

1.எங்க ஆஃபீஸ்ல யார் தப்பு பண்ணினாலும் உடனே வீட்டுக்கு அனுப்பிடுவாங்க..
இப்போ நீங்க வேற வேலை தேடறீங்களா?

2.என்னோட பையன்..எப்போதும்..be indian..buy indian தான்
அவ்வளவு தேச பக்தியா?
ஆமாம்..படிப்பில கூட..இந்தியர்கள் கண்டுபிடித்த '0" தான் வாங்குவான்.

3.வெளிநாட்டிலிருந்து உன் பையன் என்ன வாங்கி வந்தான்
நாலு செண்ட் தான்
ஏன்..ஒரு ஏக்கர் வாங்கிட்டு வரச் சொல்லி இருக்கலாமே

4.டாக்டர்- உங்க வயற்றில எப்படி இவ்வளவு தீப்புண் ஏற்பட்டது
நோயாளி- பையன் +2 ல நல்ல மார்க் வாங்கணுமேன்னு..இவ்வளவு நாள் வயத்தில நெருப்பை கட்டிக்கிட்டு இருந்தேன்

5.டாக்டர் என் மூக்கு பலமடைய ஏதாவது மருந்து கொடுங்க.என் மூக்கு கண்ணாடி வைட்டக் கூட மூக்கால தாங்க முடியல

6.வர வர ஆஃபீஸ்ல இருந்து லேட்டா வர்றீங்களே..என்ன காரணம்
நான் என்ன செய்யறது...ஒரு பயலும் போறப்ப எழுப்பிவிடாம போயிடறாங்க..

21 comments:

  1. //4.டாக்டர்- உங்க வயற்றில எப்படி இவ்வளவு தீப்புண் ஏற்பட்டது
    நோயாளி- பையன் +2 ல நல்ல மார்க் வாங்கணுமேன்னு..இவ்வளவு நாள் வயத்தில நெருப்பை கட்டிக்கிட்டு இருந்தேன்

    6.வர வர ஆஃபீஸ்ல இருந்து லேட்டா வர்றீங்களே..என்ன காரணம்
    நான் என்ன செய்யறது...ஒரு பயலும் போறப்ப எழுப்பிவிடாம போயிடறாங்க..


    //

    Super !

    ReplyDelete
  2. இன்னும் நிறைய சரக்க எறக்கி விடுங்க நண்பா.. சிரிச்சிக்கிட்டு இருப்போம்..

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி கார்த்திகைப் பாண்டியன்

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி அக்னி பார்வை

    ReplyDelete
  5. ப்ளஸ் டூவைக் காட்டிலும் பெண் கல்யாணம் சரியாக இருக்குமோ?

    சூப்பர் ஜோக்ஸ்

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி ச்சின்னப் பையன்

    ReplyDelete
  7. இப்போ எல்லாம்..கல்யாணத்தைப் பற்றிக்கூட கவலை படுவதில்லை. மகன்(ள்) களின் 10 ஆவது..12 ஆவது பரிட்சைகள் பற்றித்தான் பேற்றோர் கவலை.உங்களுக்கு கொஞ்ச வருஷம் போனதும் தெரியும் முரளி !!!!!!!!

    ReplyDelete
  8. நான் தான் 50000 கஸ்டமர். மெயில் id அனுப்புங்க. ஸ்க்ரீன் ஷாட் அனுப்பி அதுக்குரிய பரிச வாங்கிக்கறேன்.

    ReplyDelete
  9. வருகைக்கு நன்றி மணிகண்டன்

    ReplyDelete
  10. நாலும் ஆறும் சூப்பர்.

    ReplyDelete
  11. வருகைக்கு நன்றி வடகரை வேலன்

    ReplyDelete
  12. வாய் விட்டு சிரித்தேன் .
    அருமையான ஒளடதம் இந்த நகைச்சுவை .தினமும் ஒரு டீஸ்பூன் தரவும்

    ReplyDelete