1.திராவிட கட்சிகளின் மீது ஏறி அமர்ந்து சிலருக்கு எம்.பி., எம்.எல்.ஏ., பதவிகளைப் பெற்றுத்தரும் தரகு நிறுவனமாக காங்கிரஸ் தன்னிலை தாழ்ந்து விட்டது.
2.நம்மால் கீழ்தாடையை மட்டுமே அசைக்க முடியும்..மேல் தாடையை அசைக்க முடியாது.தாடை எலும்புகள் மிக உறுதியானவை.இவற்றால் 279 கிலோவிற்கு மேற்பட்ட எடையுள்ள பொருள்களை கடித்து தூக்கமுடியுமாம்.
3.உலகிலேயே பெரிய வீடு புரூனே நாட்டில் தான் உள்ளது.புரூனே சுல்தானின் இல்லமே அது.அதில் 1788 அறைகள் உள்ளன.இரண்டு லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் இம்மாளிகை அமைந்துள்ளது.இந்தியாவில் பெரிய வீடு ஜனாதிபதியினுடையது.இதில் 343 அறைகள் உண்டு.
4.எந்த கோடீஸ்வரனும்..யோக்யமாக சம்பாதித்தது இல்லை.பார்ட்னரை ஏமாற்றியிருப்பான்.கஸ்டமரை ஏமாற்றியிருப்பான்..அரசாங்கத்தை ஏமாற்றியிருப்பான்..குறைந்தது தன் மனசாட்சியையாவது ஏமாற்றியிருப்பான்.
5.ஒரு முறை கடலில் மூழ்கிவிட்டு..முத்தெடுக்காமல் திரும்பினால்..கடலில் முத்துக்கள் இல்லை என்றில்லை.நமது முயற்சி போதவில்லை என்று அர்த்தம்.
6.கூப்பிடு தூரம் என்கிறோம்..அது எவ்வளவு தூரம் தெரியுமா? ஒரு சேவல் கூப்பிட்டால்(கூவினால்)எவ்வளவு தூரம் கேட்குமோ அதுவே கூப்பிடு தூரம்.
7.ஒரு ஜோக்
தொண்டன்1 - தலைவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனை சென்றதால்...தீர்க்க முடியா பிரச்னை ஒன்று தீர்ந்தது
தொண்டன்2-என்ன சொல்கிறாய்
தொண்டன்1- பெரிய வீடும்...சின்ன வீடும்..ராசியாயிட்டாங்க..
:)
ReplyDeleteவாராவாரம் கடைசி ஜோக் ல உள்குத்து நல்லாவே வைக்குறீங்க...:))
ReplyDelete4.நச்ச்...
ReplyDeletekizham 32 pallaiyum kaatti sirikkumpothu,enakku udambellam erihirathu!
ReplyDeletemanushanaa ivan?
மெரீனா பீச்சில் சுண்டல் வாங்கித் தின்னுட்டு அந்தப் பேப்பர்ல இருக்குற செய்தியெல்லாம் படிப்போமே அந்த இன்ஸ்பிரேஷன்ல இப்படி காக்டெய்ல் செய்திகளா தலை???
ReplyDeleteநல்லா இருக்கு...!
சமீபத்திய சம்பவத்தின் ஒட்டி உருவான ஜோக் அல்ல என்று சத்தியமாக நம்புகிறேன்.
ReplyDeleteவருகைக்கும்...பின்னூட்டங்களுக்கும் நன்றி.நிஜமா நல்லவன்
ReplyDeleteவருகைக்கு நன்றி
ReplyDeletettpian
மதிபாலா
Rajaraman
நல்லா இருக்கு சார்.
ReplyDeleteகடைசி ஜோக் கொஞ்சம் மலிவா இருக்கு.
:-))
ReplyDeleteவருகைக்கு நன்றி
ReplyDeleteமணிகண்டன்
இயற்கை
புருனோ