Friday, March 6, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்..(7-3-09)

1.அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த வில்சனின் தந்தை ஒரு சர்ச் பாதிரியாராக இருந்தார்.ஒரு நாள் அவர் மாதாகோவில்ல உபன்யாசம் முடிச்சுட்டு..வீடு திரும்பிக்கொண்டிருந்தார் குதிரை மீது.அந்த கிராமத்திலிருந்த ஒரு கருமி அவரை நிறுத்தி..'உங்க குதிரை இவ்வளவு கொழு கொழுன்னு இருக்கிறது.நீங்கள் மட்டும்...எலும்பும்..தோலுமாய் இருக்கிறீர்களே' என்றார்.
வில்சன் அசரவில்லை...'குதிரைக்கு சாப்பாடு நான் போடுகிறேன்..எனக்கு சாப்பாடு நீங்கள் போடுகிறீர்கள்' என்றாராம்.

2.சொர்க்கத்தில் இறைவனை தரிசிக்க ஒரு நீண்ட வரிசை காத்திருந்தது.அப்போது..கடைசியில் நின்றுக் கொண்டிருந்த ஒருவனை முதலில் அழைத்தனர்.வரிசையில் நின்றுக்கொண்டிருந்த மற்றவர்கள் அதற்கான காரணம் கேட்டபோது..இறைவன் சொன்ன பதில்..'கடைசியாக வந்தவர்..பூலோகத்தில் ஆட்டோக்காரர்.அவர் வண்டியில் யார் ஏறினாலும்..அவர்களை என்னைப் பற்றி எண்ண வைத்தவர்.இவரால் எனக்கு பக்திமான்கள் அதிகம் உண்டாகியுள்ளனர்' என்றாராம்.

3.வகுப்பிற்கு புது ஆசிரியர் வந்தார்..மாணவர்களிடம் 'இங்கே..யாரெல்லாம் முட்டாள்கள்? எழுந்து நில்லுங்கள்' என்றார்.யாரும் எழுந்து நிற்கவில்லை.சிறிது நேரம் கழித்து ஒரு மாணவன் எழுந்து நின்றான்.
ஆசிரியர்..'நீ உன்னை முட்டாளாக நினைக்கிறாயா?' என்றார்.அதற்கு அந்த மாணவன்'இல்லை...நீங்கள் மட்டும் தனியாக நின்றுக்கொண்டிருக்கிறீர்களே...அதனால் உங்களுக்கு துணையாக இருக்கட்டுமே என எழுந்து நின்றேன்' என்றான்.

4.எல்லாச் செடிகளும்...பூத்துத்தான் காய்க்கும்...பூசணிச்செடி மட்டும் காய்த்துத்தான் பூக்கும்.

5.ஒரு பொன்மொழி...ஒரு ஜாதி தாழ்ந்தது என்பது எவ்வளவு பொய்யோ..அவ்வளவு பொய் இன்னொரு ஜாதி உயர்ந்தது என்பதும்....சொன்னவர்-ஜெயகாந்தன்

6.ஒரு கவிதை-

சில
கவிஞர்களை
சிலுவையில் அறைந்துவிடலாம்!
மரங்கள்
வருத்தப்படும்
மன்னித்துவிடலாம்

- நெல்லை ஜெயந்தா

7.ஒரு ஜோக்...

தலைவர் ஏன் பயந்துக் கொண்டிருக்கிறார்..
யாரோ..அவரை அஞ்சானெஞ்சன் என்று கூறிவிட்டார்களாம்..அதனால்தான்.

15 comments:

  1. //குதிரைக்கு சாப்பாடு நான் போடுகிறேன்..எனக்கு சாப்பாடு நீங்கள் போடுகிறீர்கள்' என்றாராம்.//

    நச்

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி நிஜமா நல்லவன்

    ReplyDelete
  3. எல்லாமே சூப்பர் என்றாலும் ஜெயகாந்தன் சொன்னது சூப்பரோ சூப்பர்,

    ReplyDelete
  4. கலக்கல்

    ReplyDelete
  5. ஆட்டோ ஓட்டுனர் ஜோக்ஸ் எத்தனை வந்தாலும் குலுங்கிக் குலிங்கி சிரிக்க வைக்கும் .
    இது நிஜம்
    “ஆட்டோ ஓட்டுனருக்கு என் பெண்ணைக் கொடுத்தது தப்பாப் போச்சு ஏன்?
    வரதட்சணையைக் ,கட்டிலுக்கு மேலே போட்டுக் கொடுன்னு சொல்றாரே.”

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி கோமா...உங்க ஆட்டோ ஜோக்கும் அருமை

    ReplyDelete
  7. //வருங்கால முதல்வர் said...
    எல்லாமே சூப்பர்.//
    வருகைக்கு நன்றி வருங்கால முதல்வர்

    ReplyDelete
  8. ரசித்து ருசித்து சாப்பிட்டேன்

    ReplyDelete