Friday, April 10, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (10-4-09)

உலகத்திலே ஒருத்தன் பணக்காரன் வீட்லே பிறக்கறது பலம்...அப்போதான் அவன் எதிர்காலம் சிறப்பா அமையும்னு சொல்லுவாங்க..அதெல்லாம் சாசுவதமான பலம் இல்லை.ஒவ்வொருவருக்கும் பலம் அவங்க மனசுதான்.அதை தெளிவாகவும்,உறுதியாகவும் வைச்சுக்கிட்டா மற்ற எதைப்பற்றியும் கவலைப்படத் தேவையில்லை.

2.தொலைக்காட்சிப் பெட்டியை இடியட் பாக்ஸ் என்கிறோம்.அந்த அற்புதமான அறிவியல் கண்டுபிடிப்பை புத்திசாலித்தனமாக பயன்படுத்தத் தெரியவில்லை நமக்கு.

3.பறவைக்கு கூடு போதும்..குகை தேவையில்லை..சிங்கத்தின் குகை அதற்கு தேவைப்பட்டால்..சிங்கத்திற்கு அது தேவைப்படும்.

4.கூண்டிலிருந்து வெளியே வா..சாதிக்கலாம்...கூண்டிற்குள் இருக்கும் சிங்கத்தை பார்த்திருக்கிறாயா...ஒரு மூலையிலிருந்து...இன்னொரு மூலைக்கு நேராக நடந்துக் கொண்டிருக்கும்.அதைத்தவிர அதனால் வேறு எதுவும் செய்ய முடியாது.

5.ஒரு கவிதை


துணைநடிகை

இவள் வீட்டுப் பாத்திரத்தில்
சிலநாளே சுடுசோறு
என்றாலும் நடிக்கிறாள்
திரைப்படத்தில் பலவாறு..

வயிற்றுக்கு மிகநெருங்கி
வருகின்ற காமிராவில்
தெரியாது இவள் பசியும்
தெய்வத்தின் வஞ்சகமும்.

-யுகபாரதி

6.ஒரு ஜோக்..

தலைவா..உன்னை எதிர்க்கட்சில அவமானப்படுத்திட்டாங்க
எப்படி?
உனக்கு எதிரா போட்டிபோட சொத்தை கேண்டிடேட்டை போட்டுட்டாங்க.

17 comments:

  1. புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
    தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
    www.ulavu.com
    (ஓட்டுபட்டை வசதிஉடன் )
    உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

    இவண்
    உலவு.காம்

    ReplyDelete
  2. வழக்கம் போல சுண்டல் சூப்பரு...

    ReplyDelete
  3. ///"தொலைக்காட்சிப் பெட்டியை இடியட் பாக்ஸ் என்கிறோம்.அந்த அற்புதமான அறிவியல் கண்டுபிடிப்பை புத்திசாலித்தனமாக பயன்படுத்தத் தெரியவில்லை நமக்கு.
    "///

    நிஜமாக சூப்பர்

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி
    shabi
    உலவு.காம்
    டக்ளஸ்
    agnipaarvai
    Cable Sankar
    இய‌ற்கை

    ReplyDelete
  5. வயிற்றுக்கு மிகநெருங்கி
    வருகின்ற காமிராவில்
    தெரியாது இவள் பசி//

    அருமை! இயந்திரம் தானே!!

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி ஜோதிபாரதி , நிஜமா நல்லவன்

    ReplyDelete
  7. கவிதை நல்லாயிருக்கு...

    அந்த ஜோக்.......... ம்ம்ம்ம்ம்ம் உங்களுக்கு குசும்பு ஜாஸ்தி............

    ReplyDelete
  8. /
    வயிற்றுக்கு மிகநெருங்கி
    வருகின்ற காமிராவில்
    தெரியாது இவள் பசி
    /
    :((
    nice lines

    ReplyDelete
  9. வருகைக்கு நன்றி அத்திரி
    மங்களூர் சிவா

    ReplyDelete
  10. //6.ஒரு ஜோக்..

    தலைவா..உன்னை எதிர்க்கட்சில அவமானப்படுத்திட்டாங்க
    எப்படி?
    உனக்கு எதிரா போட்டிபோட சொத்தை கேண்டிடேட்டை போட்டுட்டாங்க.//

    :)

    தலைவா..நம்ம கட்சியை தேர்தல் ஆணையம் அவமானப்படுத்திவிட்டது

    எப்படி?

    நமக்கு பஞ்சோந்தி சின்னம் ஒதுக்கிட்டாங்க.

    ReplyDelete
  11. //தலைவா..நம்ம கட்சியை தேர்தல் ஆணையம் அவமானப்படுத்திவிட்டது

    எப்படி?

    நமக்கு பஞ்சோந்தி சின்னம் ஒதுக்கிட்டாங்க.//

    நல்ல ஜோக்..கோவி.

    ReplyDelete
  12. சிரிப்பும் நல்ல சிந்திக்கவும் :-)வைத்தது

    ReplyDelete
  13. வருகைக்கு நன்றி சுரேஷ்

    ReplyDelete