Wednesday, April 29, 2009

வாய் விட்டு சிரியுங்க...

1.அந்தக் கல்யாணத்தில அரை மணிக்கொரு முறை..இந்நிகழ்ச்சியை வழங்கியவர்னு விளம்பரம் பண்றாங்களே ஏன்?
பொண்ணோட அப்பா மெகாசீரியல் தயாரிப்பாளராம்...கல்யாணத்திற்கும் ஸ்பான்சர் வாங்கிட்டார்.

2.எதிர்க்கட்சித் தலைவர் நான் பயந்தவன் என்று நினைக்கிறார்.அவருக்கு ஒன்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்..மனசாட்சிக்குக்கூட பயப்படாதவன் நான்.

3.அவன் பண விஷயத்தில் ரொம்ப மோசம்..நேற்று கேட்டப்போது இன்னிக்கு தரேன்னு சொன்னான்.இன்னிக்குக் கேட்டா நாளைக்குத் தரேன்னு சொல்றான்..
அவன் உனக்கு ஏதாவது கடன் தரணுமா?
இல்லை...நான் தான் அவன் கிட்ட கடன் கேட்டிருக்கேன்.

4.மனைவி- வர வர டி.வி.யிலே நிகழ்ச்சிகள் பார்க்கணும்னா போரடிக்குது...உங்களுக்கு..?
கணவன்-உன்னைவிடவா எனக்கு டி.வி.,

5.அந்த ஜவுளிக்கடை முதலாளி..எந்தத் துணி வாங்கினாலும்...மீட்டர் என்ன விலைன்னு சொல்லிட்டு...மேல 5 ரூபாய் போட்டுக்கொடுங்கன்னு சொல்லுவார்
ஏன்?
இதுக்குமுன்னால ஆட்டோ டிரைவராய் இருந்தாராம்.

6.என்னோட பையனுக்கு எல்லா கேள்விக்கும்...விடை பாதிதான் தெரியும்..
எப்படி சொல்ற..
இந்தியாவிற்கு யார் சுதந்திரம் வாங்கிக் கொடுத்ததுன்னா..சோனியா காந்தின்னு சொல்லுவான்...கீதாஞ்சலி எழுதியது ஷர்மிளா தாகூர்ன்னு சொல்லுவான்.

7.மொக்கை,கவுஜ,சகா,மச்சி,ரிப்பீட்டேய்...இப்படியெல்லாம் என்னடா புதுசா பேச ஆரம்பிச்சிருக்கே?
தமிழ்ல பிளாக்ஸ்பாட் எழுத ஆரம்பித்திருக்கிறேனே

16 comments:

  1. வருகைக்கு நன்றி
    முனைவர்.இரா.குணசீலன்
    வால்பையன்
    LOSHAN

    ReplyDelete
  2. கவுஜ சார் அது கவுஜ !

    ஜோக்ஸ் எல்லாம் சூப்பர்.

    ReplyDelete
  3. சூப்பர் சார்.. அதோட இதுவும்

    ‘கடவுளோட கூட்டணி சொல்லி நம்ம தலைவர் பன்ற லொள்ளு தாங்கல”

    ஏன்

    மதுரை தொகுதியில் மீனாட்சியம்மனும்,காஞ்சியல காமட்சியமனும் போட்டியிடுவார்கள் ன்னு பட்டயல் வெளியிட்டிருக்காரு.”

    ReplyDelete
  4. //மணிகண்டன் said...
    கவுஜ சார் அது கவுஜ !//
    தட்டச்சு பிழை..மாற்றிவிட்டேன்

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி
    மணிகண்டன்
    Uzhavan
    agnipaarvai

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி தீப்பெட்டி

    ReplyDelete
  7. வருகைக்கு நன்றி
    ச்சின்னப் பையன்
    நசரேயன்

    ReplyDelete
  8. :))))))
    நல்லாயிருக்கு....

    ReplyDelete