1.தலைவர் 39 தொகுதியிலே 23க்குத்தான் வேட்பாளரை அறிவிச்சிருக்கார்...மீதி..
அவர் கடவுளோட கூட்டணியாம்...மீதி 16 தொகுதி கடவுளுக்கு ஒதுக்கி இருக்காராம்.
2.தலைவர் ஏன் கவலையாய் இருக்கார்..
அவரோட கொள்ளுப் பேரனுக்கு ஒதுக்க தொகுதி இல்லையாம்.
3.தலைவர் வேட்புமனு தாக்கல் செய்யறதுக்கு முன்னாலே ஏன் 'கேக்" வெட்டினார்?
அவருக்கு அப்பப்ப எதையாவது வெட்டணும்
4.தலைவரோட மகனாய் இருக்கறதிலே ஒரு வசதி
என்னது
பாதுகாப்பான தொகுதியில நிற்கலாம்.
5.தலைவர் தலைமைல நடந்த பேரணி என்னவாயிற்று?
தலைவருக்கு அது 'சீரணி' யா அமைஞ்சுப் போச்சு.
6.ஜாதகக் கட்டுகளை தூக்கிக் கிட்டு தலைவர் ஏன் ஜோஸியர் கிட்ட போயிருக்கார்..
வேட்பு மனு கேட்டு இருக்கறவங்கள்ல யார் யாருக்கு பதவி யோகம் இருக்குன்னு ஜோஸியம் கேட்டுட்டு..அவங்களுக்கு தொகுதியை ஒதுக்குவாராம்
7.பேரன்-(பாட்டியிடம்) தாத்தா ஏன் 5...4...3...ன்னு புலம்பிக் கிட்டு இருக்கார்
பாட்டி-அவர் கட்சிக்கு எவ்வளவு தொகுதி கிடைக்கும்னு புலம்பி கிட்டு இருக்கார்.
8.தலைவரே! நமக்கு ஒதுக்கி இருக்கற தொகுதியில எதிர்க்கட்சி பலமான வேட்பாளரா போட்டிருக்கு
நம்ம் கட்சியே பலவீனமான கட்சிதானே...யாரை போட்டால் என்ன..
9.அகில இந்திய கட்சி நம்மளோடது..நமக்கும் 3 தானா..
சரியான நாமத்தை குறிப்பால உணர்த்திட்டாங்க.
10.நம்ம தலைவருக்கு எல்லா பதவியும் பிடிக்கும்..ஒன்றைத்தவிர
அது என்ன
சிவலோகபதவி.
1,3,5,10 கலக்கல்.
ReplyDeleteஅருமை தோழி i have become ur follower, apprum namma kadai pakkam vanga
ReplyDeleteமிக அருமையாக இருக்கிறது. ஆனால் இங்கே நடப்பதை பார்த்தால் இது நகைச்சுவை அல்ல, அத்தனையும் உண்மையுமாயும் இருக்கிறது.
ReplyDelete:-))
ReplyDeleteஅடுத்தவரை சிரிக்க வைப்பவர்களுக்குத்தான் என் ஓட்டு.
ReplyDeleteதைரியமா நில்லு தலைவா!
// narsim said...
ReplyDelete1,3,5,10 கலக்கல்.//
நன்றி நர்சிம்
நன்றி Suresh
ReplyDelete///நையாண்டி நைனா said...
ReplyDeleteமிக அருமையாக இருக்கிறது. ஆனால் இங்கே நடப்பதை பார்த்தால் இது நகைச்சுவை அல்ல, அத்தனையும் உண்மையுமாயும் இருக்கிறது.//
உண்மை
// இயற்கை said...
ReplyDelete:-))//
ரொம்ப சிரமப்பட்டு சிரித்தாற்போல் தெரிகிறதே இயற்கை
//goma said...
ReplyDeleteஅடுத்தவரை சிரிக்க வைப்பவர்களுக்குத்தான் என் ஓட்டு.
தைரியமா நில்லு தலைவா!//
தலைவி பேச்சிற்கு மறுப்பு எது?
ha ha ha ha ah hahahahahhaah
ReplyDelete:)))))))))))))))))))0
நன்றி அக்னி பார்வை
ReplyDeleteLast one is SUPER. Gooooooooooooood
ReplyDeleteநன்றி mohanpuduvai
ReplyDelete