Thursday, May 14, 2009

கங்குலி மீண்டும் கேப்டன் ஆகிறார்..

இந்திய கிரிக்கெட் அணியை..உலகக் கோப்பையில் செமி ஃபைனல் வரை ந்டத்திச் சென்றவர் கங்குலி.

இந்திய அணியின் திறமையான கேப்டன்களில் இவரும் ஒருவர்.ஐ.பி.எல்.,20-20 இல் கல்கத்தா அணிக்கு இவருக்கு கேப்டன் பதவி வேண்டும் என்று எண்ணியும்...அதில்..பல சச்சரவுகள் இருந்ததால் ,குழுவில் ஒரு ஆட்டக்காரராகவே இருந்து..வருகிறார்.இந்நிலையில் மீண்டும் கேப்டன் ஆகும் சந்தர்ப்பம் அவருக்கு கிடைத்திருக்கிறது.

சென்னை தேனாம்பேட்டை 6வது குறுக்குத்தெருவில்..சிலர் சேர்ந்து ஒரு கிரிக்கெட் குழு ஆரம்பித்துள்ளனராம்.அவர்கள்..உள்ளூரில் உள்ள மற்ற குழுக்களுடன் மேட்ச் விளையாட உள்ளனராம்.அவர்களை வழி நடத்த சரியான கேப்டன் இல்லை என்பதால்..கங்குலியை அணுக உள்ளனராம்.

ஷாருக்கானும்..உடனடியாக அவரை மகிழ்ச்சியுடன் விடுவிக்க தயாராம்.

ஒரு சுற்று பயணம் முடிந்து..ஆரம்பித்த இடத்திலேயே வந்து நிற்கும்..கங்குலி..இதற்கு ஒப்புக்கொள்வார் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.

15 comments:

  1. சென்னை தேனாம்பேட்டை 6வது குறுக்குத்தெருவில்..சிலர் சேர்ந்து ஒரு கிரிக்கெட் குழு ஆரம்பித்துள்ளனராம்.


    ஏன் இந்த கொலை வெறி

    ReplyDelete
  2. இருந்தாலும் இவ்வளவு ;) ஆகாதுங்க...

    அவரு ஏற்கனவே எங்க ஊரு திருச்சிக்கு கேப்டனா ஒத்துகிட்டாரு...

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி
    நெல்லைத்தமிழ்
    விஷ்ணு.

    ReplyDelete
  4. திருச்சிக்கா..? அல்லது..தேனாம்பேட்டைக்கா ..யார் ஏலத்தில எடுக்கறாங்கன்னு பார்ப்போம்

    ReplyDelete
  5. யோவ் சுரேஷு, திருச்சிக்கு தான் நான் இருக்கேனே ! அப்புறம் எதுக்குயா கங்குலி ?

    ராதாகிருஷ்ணன் சார், கங்குலி ரசிகர்கள் பாக்கறதுக்கு முன்னாடி வேற பதிவு போட்டுடுங்க. இல்லாட்டி இதை நீக்கிடுங்க !

    அதிஷா இப்ப தான் கங்குலிக்கிட்ட பேசினாராம் போன்ல. அவரை பாஸ்ட் பவுலரா சேர்த்துக்க சொல்லி ! பாக்கலாம்.

    ReplyDelete
  6. ஷாருக்கான் அடுத்த படத்தில செகன்ட் ஹீரோவா வேணா பண்ணு கொல்கட்டா டீம்ல ஆடி உன் பேர கெடுத்துக்காதனுட்டாருங்க ..

    என்ன செய்ய விதி வலியது.

    ReplyDelete
  7. //மணிகண்டன் said
    ராதாகிருஷ்ணன் சார், கங்குலி ரசிகர்கள் பாக்கறதுக்கு முன்னாடி வேற பதிவு போட்டுடுங்க. இல்லாட்டி இதை நீக்கிடுங்க ! //

    இதுக்கெல்லாம் புலிகேசி வரமாட்டார்னு உங்களுக்கு தெரியாதா? மணி

    ReplyDelete
  8. //அதிஷா said...
    ஷாருக்கான் அடுத்த படத்தில செகன்ட் ஹீரோவா வேணா பண்ணு கொல்கட்டா டீம்ல ஆடி உன் பேர கெடுத்துக்காதனுட்டாருங்க ..

    என்ன செய்ய விதி வலியது.//

    விதி வலியது

    ReplyDelete
  9. Is he the fake ipl player at blogspot dot com?

    ReplyDelete
  10. //Vijay said...
    Is he the fake ipl player at blogspot dot com?//

    irukkakkUdum

    ReplyDelete
  11. வருகைக்கு நன்றி ச்சின்னப் பையன்

    ReplyDelete
  12. remove this .... what do you thing about ganguly.... do u know how to hold the bat.......

    ReplyDelete
  13. i know u are good blogger and good writer... but this does not look good Suresh...

    ReplyDelete
  14. //remove this .... what do you thing about ganguly.... do u know how to hold the bat.......//

    நகைச்சுவைன்னு லேபிள் போட்டிருக்காரே, சிரிச்சிட்டுப் போய்டணும்.

    TVR, படிச்சப்போ சிரிப்பு வந்தாலும் கங்குலியை நினைச்சா பாவமா இருக்கு. சிக்ஸர் அடிச்சிட்டு சிங்கம் மாதிரி நடக்கும் கங்குலியை இப்பவும் மறக்க முடியலையே தலைவா!!!

    ReplyDelete