Friday, May 15, 2009

அதிபுத்திசாலி அண்ணாசாமியின் கருத்துக் கணிப்பு..

அண்ணாசாமி ஒரு பத்திரிகை நடத்திவருகிறார்.அவ்வப்போது..நடக்கும் நிகழ்ச்சிகளை..நமது பிரத்தியேக நிருபர் என்று செய்தி வெளியிடுவார்.

உண்மையில்..அவரும்..அவர் மனைவி ..மற்றும் உறவினர் ஆறு பேரும்தான் அங்கு எல்லாம்.

தேர்தல் கணிப்புப் பற்றி மற்ற பத்திரிகைகள் செய்தி வெளியிடுவதைக் கண்டவர்..தன் பத்திரிகையிலும்..ஒரு கருத்துக் கணிப்பு வெளியிட எண்ணினார்.ஆனால்..சர்வே எடுக்க ஆட்கள் இல்லையே என்ன செய்வது என நினைத்தவர்.. தன் பத்திரிகை உறவைக் கூப்பிட்டார்.

தான்..தி.மு.,க., ஆதரவு எனச் சொல்லிவிட்டு மற்றவர்களைக் கேட்டார்.அவர் மனைவி,மற்றும் இருவர்..தி.மு.க.,விற்கு ஓட்டு என்றனர்.

வேறு மூவர் அ.தி.மு.க.,விற்குதான் எங்கள் ஓட்டு என்றனர்.

எஞ்சியவர்..இம்முறை விஜய்காந்திற்கு ஓட்டு என்றார்.

எட்டில்..நால்வர்..தி.மு.க., அப்போது தி.மு.க.விற்கு..50% ஆதரவு.

எட்டில் மூவர் அ.தி.மு.க., அப்போது..37.5 % அதி.மு.க.,

எட்டில் ஒருவர் விஜய்காந்த்,..அப்போது தே.மு.தி.க., 12.5%

தி.மு.க.,விற்கு 50%ஆதரவு...நம் பத்திரிகை கருத்துக் கணிப்பில் என செய்தி வெளியிட்டார்.

11 comments:

  1. இந்த கருத்துக்கணிப்பு உங்க வீட்டில் எடுத்ததா அண்ணாச்சி

    ReplyDelete
  2. நான் அதி புத்திசாலியா shabi

    ReplyDelete
  3. Ha..ha...pala karuthu kanippukal ippadi than irukkindrana:-))

    ReplyDelete
  4. //உண்மையில்..அவரும்..அவர் மனைவி ..மற்றும் உறவினர் ஆறு பேரும்தான் அங்கு எல்லாம்.//

    அரசியல் கட்சி போலவே
    இருக்கே சார்.

    அடுத்து அதிபுத்திசாலி அண்ணாசாமி அரசியலுக்கு வருகிறார் என
    தகவல் வருமா ?

    ‘அகநாழிகை‘
    பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  5. அதிபுத்திசாலி அண்ணாசாமி அரசியலுக்கு வருகிறார் "அகநாழிகை"

    ReplyDelete