Friday, June 19, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்(19-6-09)

1.ஒருவன் தன் தாய்,தந்தையரை இழக்கலாம்..சகோதரர்களை இழக்கலாம்,நட்பை இழக்கலாம்..ஆனால் இழக்கக்க்டாது தன்னம்பிக்கையை.

2.நாம் செய்யும் காரியங்கள் பாராட்டப் பட வேண்டும் என மனம் ஆசைப்படுகிறது.ராமாயணத்தில் அனுமன் கடலைத் தாண்டியதாகக் கூறப்படுகிறது.அப்படி தாண்டுவதற்கு ஊக்கம் முதலில் ஏற்படவில்லை.ஜாம்பவானோட பாராட்டு உரைகள் தான்..'தன்னால் கடலைத் தாண்டமுடியும்" என்ற தன்னம்பிக்கையை அனுமனுக்கு ஏற்படுத்தியது.அதுபோல சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்து வருவதற்குக் கூட ஜாம்பவானோட பாராட்டு உரைகள் தான் அனுமனுக்கு வலிமையைக் கொடுத்தது.செயற்கரிய செயல் செய்ய பாராட்டுகள் கண்டிப்பாக ஒருவருக்கு பலத்தைக் கொடுக்கும்.

3.உயரத்தில் பறக்கிறோம் என்ற இறுமாப்பு வேண்டாம்..எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் காற்றாடி கீழே இறங்கித்தான் ஆக வேண்டும்.

4.ஒருவனின் வெளித்தோற்றம் கண்டு..நல்லவன் என்றோ...தீயவன் என்றோ உறுதி செய்ய முடியாது.வீணை கோணல்தான்..ஆனால் இனிய நாதம் உண்டு.அம்பு நேராக இருக்கும்..ஆனால் உயிரை வாங்கிவிடும்.

5.அதிர்ஷ்டத்தின் ரகசியம் இரண்டே இரண்டு சொற்களில்தான் இருக்கிறது.அதை வாழ்வில் பின்பற்றுங்கள்.அது கடின உழைப்பு ஒன்றுதான்.
சமையல் மோசமானால் ஒருநாள் கஷ்டம்
அறுவடை மோசமானால் ஓராண்டு நஷ்டம்
கல்வி மோசமானால் வாழ்நாள் முழுதும் நஷ்டம்

6.கொசுறு ஜோக்

டாக்டர் ராத்திரி பூரா கண்ணே மூடலை
அதான் இங்கே வந்துட்டீங்க இல்ல...நான் மூட வைச்சுடறேன்.

20 comments:

  1. டாக்டர் பைத்தியம் புடிக்கிற மாதிரி இருக்கு ..
    அதான் இங்கே வந்துட்டீங்க இல்ல...

    தானா சீக்கிரமே ஆயிருவீங்க

    ReplyDelete
  2. //Blogger T.V.Radhakrishnan said...

    // உடன்பிறப்பு said...
    சாவி மீது மிகுந்த மதிப்பு உண்டு அவர் தலைவரின் தோழர்//

    நம்மைப்போல என்று சொல்லலாமா உடன்பிறப்பு((ஏனெனில் எனக்கு உங்கள் மீது மதிப்பு உண்டு)//

    ஐயா, நீங்கள் பெரியவர் என்று தெரியாமல் நீங்கள் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்த காலத்தில் உங்களையும் சேர்த்து விமர்சித்து சில சமயங்களில் எழுதி இருக்கிறேன். அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். கலைஞரை விமர்சிப்பவர்கள் எல்லாம் தரம் தாழ்ந்து எழுதுவதால் உங்களையும் தவறாக நினைத்துவிட்டேன். ஆனால் உங்கள் விமர்சனம் எப்போதுமே தரம் தாழ்ந்ததில்லை

    ReplyDelete
  3. அனைத்துமே அருமை..

    தேவையான அறிவுரைகள்தான்..!

    நன்றி டி.வி.ஆர். ஸார்..!

    ReplyDelete
  4. உடன்பிறப்பு..சற்று கண் கலங்க வைத்து விட்டீர்கள்..எனது இந்த பதிவை படித்திருக்கிறீர்களா?

    http://tvrk.blogspot.com/2008/12/blog-post_04.html

    ReplyDelete
  5. //சூரியன் said...
    டாக்டர் பைத்தியம் புடிக்கிற மாதிரி இருக்கு ..
    அதான் இங்கே வந்துட்டீங்க இல்ல...

    தானா சீக்கிரமே ஆயிருவீங்க//


    வருகைக்கு நன்றி சூரியன்...உங்க ஜோக்கும் நன்றாய்த்தான் இருக்கிறது

    ReplyDelete
  6. //உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    அனைத்துமே அருமை..

    தேவையான அறிவுரைகள்தான்..!

    நன்றி டி.வி.ஆர். ஸார்..!//

    வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி உண்மைத்தமிழன்

    ReplyDelete
  7. ///6.கொசுறு ஜோக்

    டாக்டர் ராத்திரி பூரா கண்ணே மூடலை
    அதான் இங்கே வந்துட்டீங்க இல்ல...நான் மூட வைச்சுடறேன்///

    டாப்பு

    ReplyDelete
  8. வருகைக்கு நன்றி அக்னி

    ReplyDelete
  9. மிக அருமையான சுண்டல்!.

    ReplyDelete
  10. //மங்களூர் சிவா said...
    மிக அருமையான சுண்டல்!.//

    நன்றி சிவா

    ReplyDelete
  11. ரசிக்கும் படியா இருக்கு

    ReplyDelete
  12. // நசரேயன் said...
    ரசிக்கும் படியா இருக்கு//

    நன்றி நசரேயன்

    ReplyDelete
  13. இந்த வார சுண்டல் ஒரே தத்துவ மழை தான் ! நீங்களும் உடன்பிறப்பும் நெஞ்சுருக பேசிக்கொள்கிறது தான் என்னனு புரியல.

    ReplyDelete
  14. மணிகண்டன் said...

    இந்த வார சுண்டல் ஒரே தத்துவ மழை தான் ! நீங்களும் உடன்பிறப்பும் நெஞ்சுருக பேசிக்கொள்கிறது தான் என்னனு புரியல.//

    இவரும் உடன்பிறப்புதான்.

    ReplyDelete
  15. //மணிகண்டன் said...
    இந்த வார சுண்டல் ஒரே தத்துவ மழை தான் ! நீங்களும் உடன்பிறப்பும் நெஞ்சுருக பேசிக்கொள்கிறது தான் என்னனு புரியல.//

    :-)))

    ReplyDelete
  16. // குடுகுடுப்பை said...
    நல்ல சுண்டல்தான்//

    நன்றி குடுகுடுப்பை

    ReplyDelete
  17. //குடுகுடுப்பை said...
    மணிகண்டன் said...

    இந்த வார சுண்டல் ஒரே தத்துவ மழை தான் ! நீங்களும் உடன்பிறப்பும் நெஞ்சுருக பேசிக்கொள்கிறது தான் என்னனு புரியல.//

    இவரும் உடன்பிறப்புதான்.//

    நீங்களும் உடன்பிறப்புதான்

    ReplyDelete
  18. T.V.Radhakrishnan said...

    //குடுகுடுப்பை said...
    மணிகண்டன் said...

    இந்த வார சுண்டல் ஒரே தத்துவ மழை தான் ! நீங்களும் உடன்பிறப்பும் நெஞ்சுருக பேசிக்கொள்கிறது தான் என்னனு புரியல.//

    இவரும் உடன்பிறப்புதான்.//

    நீங்களும் உடன்பிறப்புதான்//

    நான் கு.ஜ.மு.க பொதுச்செயலாலர்.

    ReplyDelete
  19. //குடுகுடுப்பை said...
    நான் கு.ஜ.மு.க பொதுச்செயலாலர்.//

    :-)))

    ReplyDelete