Tuesday, June 2, 2009

வாலிப கலைஞருக்கு வயது 86


ஆண்டொன்று போனால்

அகவை ஒன்று கூடும்..

ஆயின்..பொலிவொன்று ஏறும்

அருமைத் தலைவா உனக்கு..

ஆயிரமாயிரம் குறைசொல்வாரும்

ஆரவாரத்திலிருந்து ஒதுங்கி

அறுபது மணித்துளி யோசித்தால்

அகிலத்தில்.உன்னைப்போல்

அமையவில்லை வேறு யாருமென

அறிவர்..

ஆயிரம் கைகள் தடுத்தாலும்

ஆதவா...நீ மறையாய்

அன்புடன் வாழ்த்த வயதில்லை

வணங்குகிறேன் என மாட்டேன்

வாழ்த்துகிறேன்

நாளும் சிறப்பாய் பணிபுரிந்திட..

17 comments:

  1. நூறு அடிக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நம்மை விட யாருக்கிறது தகுதி அவனை வாழ்த்த? வாழ்த்துவோம்.. நூறாண்டும் தாண்டியிருக்கட்டும் நம்மோடு.!

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி உடன்பிறப்பு

    ReplyDelete
  4. //ஆதிமூலகிருஷ்ணன் said...
    நூறாண்டும் தாண்டியிருக்கட்டும் நம்மோடு.!//

    yes

    ReplyDelete
  5. இராஜபக்சே, கோத்தபாயே இராஜபக்சே மற்றும் பொன்சேகா ஆகியோரும் வாழ்த்துகிறார்கள்.

    ReplyDelete
  6. நம்மை விட யாருக்கிறது தகுதி அவனை வாழ்த்த? வாழ்த்துவோம்...


    இராஜபக்சே, கோத்தபாயே இராஜபக்சே மற்றும் பொன்சேகா

    ReplyDelete
  7. // கோவி.கண்ணன் said...
    இராஜபக்சே, கோத்தபாயே இராஜபக்சே மற்றும் பொன்சேகா ஆகியோரும் வாழ்த்துகிறார்கள்.
    //

    கோவியண்ணே!

    நீங்க ஈழத்தமிழர்களுக்காக உயிரையும் கொடுப்பீர்கள் என்று நாங்கள் அறிவோம். அப்படியிருக்க தொடர்ந்து உங்கள் தமிழினப் பாசத்தை நெற்றியில் ஒட்டிக்கொண்டு அலைய வேண்டுமா? :-)

    ReplyDelete
  8. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  9. அது என்ன ?வாழ்த்தவயதில்லை வணங்குகிறேன்....!!!
    வாழ்த்த வயது தேவையில்லை மனம்தான் வேண்டும்.
    வயது இருந்து ,மனமின்றி வாழ்த்தினால் வாழ்த்தாகுமா.
    ஆகவே தோழர்களே ,
    8 வயது குழந்தை கூட 80ஐ வாழ்த்தலாம்.

    ReplyDelete
  10. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  11. //கோவி.கண்ணன் said...
    இராஜபக்சே, கோத்தபாயே இராஜபக்சே மற்றும் பொன்சேகா ஆகியோரும் வாழ்த்துகிறார்கள்.//

    தமிழினத்துரோகிகளும் அவரை வாழ்த்துவது கண்டு மகிழ்ச்சிதான்

    ReplyDelete
  12. //ரஜினி ரசிகன் said...
    நம்மை விட யாருக்கிறது தகுதி அவனை வாழ்த்த? வாழ்த்துவோம்...


    இராஜபக்சே, கோத்தபாயே இராஜபக்சே மற்றும் பொன்சேகா//
    தமிழினத்துரோகிகளும் அவரை வாழ்த்துவது கண்டு மகிழ்ச்சிதான்

    ReplyDelete
  13. //லக்கிலுக் said...
    கோவியண்ணே!

    நீங்க ஈழத்தமிழர்களுக்காக உயிரையும் கொடுப்பீர்கள் என்று நாங்கள் அறிவோம். அப்படியிருக்க தொடர்ந்து உங்கள் தமிழினப் பாசத்தை நெற்றியில் ஒட்டிக்கொண்டு அலைய வேண்டுமா? :-)//

    :-))))

    ReplyDelete
  14. goma said...
    //அது என்ன ?வாழ்த்தவயதில்லை வணங்குகிறேன்....!!!
    வாழ்த்த வயது தேவையில்லை மனம்தான் வேண்டும்.
    வயது இருந்து ,மனமின்றி வாழ்த்தினால் வாழ்த்தாகுமா.
    ஆகவே தோழர்களே ,
    8 வயது குழந்தை கூட 80ஐ வாழ்த்தலாம்.//
    உண்மை., அதனால்தான் வாழ்த்தியிருக்கிறேன்

    ReplyDelete
  15. இப்பதிவு..ஒரு மூத்த தலைவனை...தமிழனை வாழ்த்தும் பதிவு...வசைபாடும் பதிவல்ல..ஆகவே பிருந்தன் உங்கள் பின்னூட்டங்கள் நீக்கப்பட்டிருக்கின்றன.மன்னிக்கவும்

    ReplyDelete