Tuesday, June 2, 2009

பிரபல பதிவர் பற்றி ஒரு கிசுகிசு..

அவர் ஒரு பிரபல பதிவர்.அவர் பதிவுகள் என்றால்..எல்லாமே..அரை மணி நேரத்திற்குள் சூடான இடுகையில் வந்துவிடும்.

அவருக்கு பைத்தியக்காரன் உருவில்..மே 15 முதல் ஒரு சோதனை வந்து விட்டது.

எப்போதும் கணிணியை விட்டு அகலாமல்..பதிவிடும் அவரை..அவரது தங்கமணி...கோபித்ததுக்கொள்வதுண்டு..திடீரென..15ம் நாள்..தங்கமணி..'இனி ஜூன் 30வரை உங்கப் பக்கமோ..கணிணி பக்கமோ நான் வரமாட்டேன்.ஆனால்..உரையாடல்..சிறுகதைப் போட்டிக்கு ஒரு அருமையான சிறுகதை எழுதி..இருபதில்..ஒருவராக ஆகவேண்டும்..என கல்யாணபரிசு எம்.சரோஜா கணக்காய் கூறிவிட்டாராம்.அத்துடன் நில்லாது..அக்கம் பக்கத்திலும்..'என் கணவர்..சிறுகதை போட்டியில் கலந்துக் கொள்கிறார்'என செய்தி பரப்பிவிட்டாராம்.வேளா வேளைக்கு ஆரஞ்ச் ஜூஸ்,ஆப்பிள் ஜூஸ் என தங்கமணி கவனித்துக் கொள்கிறாராம்

நம்ம ஆளுக்கோ..வேற பதிவும் போடமுடியவில்லையாம்.பைரவன் கணக்கா...ஆமைக்கதை எழுதலாமா..காக்கா கதைஎழுதலாமா..என ஒரு கொயர் பேப்பரை வாங்கிவைச்சுக்கிட்டு..தலையைப் பிச்சுக்கிறாராம்.

நம்மால் முடிந்தது..அவர்மீது..இரக்கப்படுவது..ஒன்றுதான்.

18 comments:

  1. பிரபல பதிவர் யாரு ?

    டிவிஆரா ?

    ReplyDelete
  2. உங்களைத்தான் எதிர்பார்த்தேன்

    ReplyDelete
  3. //சூடான இடுகையில் வந்துவிடும்.//சூடான இடுகையையே காணோமே.

    ReplyDelete
  4. பிரபல பதிவர் எப்போ கதை போடுவாருன்னு சொல்லுங்க

    ReplyDelete
  5. // ILA said...

    பிரபல பதிவர் எப்போ கதை போடுவாருன்னு சொல்லுங்க//

    அப்படியே அந்த லிங்கையும் இங்க கொடுக்க சொல்லுங்க

    ReplyDelete
  6. சூடான இடுகையையே காணோமே.

    ReplyDelete
  7. //ILA said...
    //சூடான இடுகையில் வந்துவிடும்.//சூடான இடுகையையே காணோமே.//

    ஆமாம்..இளா..நம்ம ராசி..உப்பு வித்தா மழை பெய்யுது..மாவு வித்தா காற்றடிக்குது கதைதான்..

    ReplyDelete
  8. //ILA said...
    பிரபல பதிவர் எப்போ கதை போடுவாருன்னு சொல்லுங்க//

    நீங்க எப்ப போடப்போறீங்க?

    ReplyDelete
  9. சிரித்து மகிழ்ந்தேன். உங்களின் நகைச்சுவை ஊரறிந்தது. இப்போதுதான் நானறிகிறேன். ஃபாலோசெய்துகொள்ளவேண்டும் என எண்ணுவேன். செய்யாததால் நிறைய மிஸ் செய்திருப்பேன் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  10. //சென்ஷி said...
    // ILA said...

    பிரபல பதிவர் எப்போ கதை போடுவாருன்னு சொல்லுங்க//

    அப்படியே அந்த லிங்கையும் இங்க கொடுக்க சொல்லுங்க//

    மொதல்ல அவர் கதை எழுதி முடிக்கட்டும்..தட்டினான்..தட்டினான்..கதை ஆயிடுச்சுன்னா

    ReplyDelete
  11. //ஆதிமூலகிருஷ்ணன் said...
    சிரித்து மகிழ்ந்தேன். உங்களின் நகைச்சுவை ஊரறிந்தது. இப்போதுதான் நானறிகிறேன். ஃபாலோசெய்துகொள்ளவேண்டும் என எண்ணுவேன். செய்யாததால் நிறைய மிஸ் செய்திருப்பேன் என நினைக்கிறேன்.//

    வருகைக்கும்..பாட்டுக்கும் நன்றி ஆதி

    ReplyDelete
  12. //நசரேயன் said...
    சூடான இடுகையையே காணோமே.//

    :-((

    ReplyDelete
  13. மூளைய லைட்டா வடிசட்டியில வறுத்து பாருங்க, எதாவது ஐடியா வந்தாலும் வரலாம்!

    ReplyDelete
  14. வருகைக்கு நன்றி வால்..
    உங்க பின்னூட்டம் / உங்க ஐடியா அந்த பதிவருக்கு அனுப்பப்பட்டது

    ReplyDelete
  15. வெற்றி பெற வாழ்த்துகள் தலைவா சீக்கிரமா எழுதுங்க..

    ReplyDelete
  16. பிரபல பதிவர்,
    எந்த பார்க்கில் ,ஃப்ளாஸ்க்கும் காபியும் சைக்கிளும் பெடலுமாக காலையில், 9மனியிலிருந்து சாயங்காலம் 5மணி வரை ,கதை எழுதுறேன் பேர்வழின்னு இருப்பாரோ!!!!!
    தங்கமணிக்காகவாவது அவர் வெற்றி பெற வாழ்த்துவோம்

    ReplyDelete
  17. //Suresh said...
    வெற்றி பெற வாழ்த்துகள் தலைவா சீக்கிரமா எழுதுங்க..//
    உங்க பின்னூட்டம் அந்த பதிவருக்கு அனுப்பப்பட்டது

    ReplyDelete
  18. //goma said...
    பிரபல பதிவர்,
    எந்த பார்க்கில் ,ஃப்ளாஸ்க்கும் காபியும் சைக்கிளும் பெடலுமாக காலையில், 9மனியிலிருந்து சாயங்காலம் 5மணி வரை ,கதை எழுதுறேன் பேர்வழின்னு இருப்பாரோ!!!!!
    தங்கமணிக்காகவாவது அவர் வெற்றி பெற வாழ்த்துவோம்//
    வருகைக்கு நன்றி goma

    ReplyDelete