Thursday, June 25, 2009

பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்..

தினமும் ஒரு பதிவு போடவே நாக்கு நமக்கெல்லாம் வெளியே தள்ளிடுது.இதுல மத்தவங்க பதிவை எல்லாம் படிச்சு பின்னூட்டம் இட ஏது நேரம்..

நாம பிறர் பதிவை படிச்சாத்தானே..நம்ம பதிவையும் சிலர் படிப்பாங்க..

ஆனால் ..சில பிரபல பதிவர்கள் பதிவையும் போட்டு...மற்ற பதிவுங்களுக்கு பின்னூட்டமும் போடறாங்களே...அதன் ரகசியம் என்ன ..

நாம அமைச்ச கமிட்டி...இதை விசாரித்து..இன்னிக்கு ஒரு அறிக்கை தாக்கல் செய்திருக்கு..அதன் விவரம்..

கலக்கல்

நச்

சூப்பர் தல

நல்ல பதிவு சகா

மச்சான் இப்படி பார்த்ததே இல்ல

டவுசரை கிழிச்சுட்டே

இப்படி அவங்க கம்ப்யூட்டர்ல தயாரா ஒன் லைன்ல நிறைய போட்டு வைச்சிருக்காங்க..ஒருவர் பதிவு போட்டதுமே...உடனே போட்டு வைத்துள்ள..நிரந்திர பின்னூட்டத்தை பதிவை படிக்காமலேயே கட் அண்ட் பேஸ்ட் பண்ணி போட்டுடுவாங்க..

நாமும்...அடடா..எவ்வளவு நேரம் செலவழிச்சு..எவ்வளவு பெரிய பதிவர்..நம்ம பதிவை படிச்சு பாராட்டி பின்னூட்டம் போட்டிருக்காங்கன்னு மகிழ்ச்சி அடைவதுடன்..அவங்க பதிவை எல்லாம் மாங்கு..மாங்குன்னு படிச்சு பின்னூட்டம் இடுவோம்.

ஆனால்..அவங்களுக்கு வேண்டப்பட்ட பதிவர்னா...பக்கம் பக்கமா..பாராட்டி, ஆலோசனை சொல்லி பின்னூட்டம் இடுவாங்க.இன்னும் கொஞ்ச நாள்ல அந்த பதிவர்ங்க பதிவு போடறதுக்கு முன்னாலேயே, பதிவை பாராட்டி 50 . 60 பின்னூட்டங்கள் வந்தாலும்..வரக்கூடும்.

அது சரி..புது பதிவர்கள் பதிவுக்கும்..இவங்க பின்னுட்டம் வருதேன்னா...அவங்க பதிவுக்கு வர பின்னூட்டத்தைப் பாருங்க..பெரும்பாலும்..ரொம்ப சிரமம் எடுத்துக் கிட்டு :-)))ன்னு போட்டுடுவாங்க.

இப்ப..நமெக்கெல்லாம் எப்படி பின்னூட்டம் வருதுன்னு புரிஞ்சு போச்சா..

படிச்சுட்டு..நீங்க ஓட்டைப் போடலேன்னாலும்..:-)) ன்னாவது ஒரு பின்னூட்டம் போட்டுடுங்க.

73 comments:

  1. நெடு நாள் கழித்து படித்த நல்ல பதிவு


    (இதுவும் ஒரு டெம்ப்ளேட் பின்னூட்டம் தான். ஹிஹி)

    ReplyDelete
  2. \\நமெக்கெல்லாம் எப்படி பின்னூட்டம் வருதுன்னு புரிஞ்சு போச்சா.. \\

    அக்மார்க் டி.வி.ஆர் டச்!

    ReplyDelete
  3. ஆமா அது யாருங்க அந்த பிரபல பதிவருங்க மாங்கு மாங்குனு ஸ்மைலி போடறது..

    (ஒரு வேளை உடன்பிறப்புவா இருக்குமோ!.. )

    ReplyDelete
  4. //
    அதிஷா said...

    ஆமா அது யாருங்க அந்த பிரபல பதிவருங்க மாங்கு மாங்குனு ஸ்மைலி போடறது..

    (ஒரு வேளை உடன்பிறப்புவா இருக்குமோ!.. )
    //

    என்னது நானெல்லாம் பிரபல் பதிவரா...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  5. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...............

    ReplyDelete
  6. நச்...

    இப்ப என்னையும் அந்த பிரபல பதிவர் லிஸ்ட்டில சேர்த்துடு தலைவா..

    ReplyDelete
  7. உள்ளேன் ஐயா.. ரெண்டு ஓட்டும் போட்டச்சி - இது நிரந்திர பின்னூட்டமா??

    ReplyDelete
  8. //பதிவு போடறதுக்கு முன்னாலேயே, பதிவை பாராட்டி 50 . 60 பின்னூட்டங்கள் வந்தாலும்..வரக்கூடும்.
    //

    ஹி ஹி ஹி

    ReplyDelete
  9. சார், என்ன இது? எனக்கு பிரபலங்கள் எல்லாம் இதே மாதிரிதான் பின்னூட்டம் போடறாங்க. அப்ப அவங்க என்னோட பதிவு படிக்கவே இல்லையா? இப்படி என் மகிழ்ச்சியைக் கெடுத்து விட்டீர்களே!

    Jokes apart -அவர்களுக்கும் டைம் இல்லை அல்லவா. பெரும்பாலும் படிச்சிட்டுத் தான் போடுறாங்கன்னு நினைக்கிறேன். ஆனா, டெம்ப்ளேட் பின்னூட்டம் போடத் தான் டைம் இருக்கு. என்ன செய்ய முடியும் அவர்களால்?

    அப்ப நீ என்ன செய்யுறனு கேக்காதீங்க. நா போற இடம் குறைவு. போனால் நிறுத்தி நிதானமா படிச்சு, மனசுக்குத் தோன்றிய பின்னூட்டம் தான் போடுறேன். இப்பதான் தெரியுது - அதனால்தான் நாம இன்னும் பிரபலம் ஆகலைன்னு. இல்லாட்டா இதுக்கும் ஒரு ஸ்மைலி போட்டுட்டு போயிருக்கலாம் :)

    அனுஜன்யா

    ReplyDelete
  10. கலக்கல்

    நச்

    சூப்பர் தல

    நல்ல பதிவு சகா

    மச்சான் இப்படி பார்த்ததே இல்ல

    டவுசரை கிழிச்சுட்டே

    &

    :-))

    ReplyDelete
  11. கலக்கல்

    நச்

    சூப்பர் தல

    நல்ல பதிவு சகா

    மச்சான் இப்படி பார்த்ததே இல்ல

    டவுசரை கிழிச்சுட்டே

    ஹிஹிஹிஹி

    ReplyDelete
  12. அப்படியா விசயம்?..

    :)))

    ReplyDelete
  13. மச்சான் இப்படி பார்த்ததே இல்ல

    ReplyDelete
  14. நச்சுன்னு ஒரு பின்னூட்டம் போடனும்னு ஆசையாதான் இருக்கு.

    ReplyDelete
  15. T.V.Radhakrishnan said...

    எப்படி விமரிசிப்பதுன்னு தெரியலே..ஆனாலும் ..வாழ்த்துக்கள் ன்னு போட்டுடறேன்//

    என்னோட பதிவுல நீங்க போட்ட பின்னூட்டம் படிச்சிட்டு போட்டிருக்கீங்க

    ReplyDelete
  16. சரியான நேரத்தில் தேவையான பதிவு.

    ReplyDelete
  17. நச்

    காபி பேஸ்ட் பண்ணல சார் டைப் அடிச்சது

    :)))))))))))))))

    ReplyDelete
  18. //உடன்பிறப்பு said...
    நெடு நாள் கழித்து படித்த நல்ல பதிவு


    (இதுவும் ஒரு டெம்ப்ளேட் பின்னூட்டம் தான். ஹிஹி)//

    வருகைக்கு நன்றி

    (இதுவும் டெம்ப்ளேட் நன்றி)

    ReplyDelete
  19. //அதிஷா said...
    \\நமெக்கெல்லாம் எப்படி பின்னூட்டம் வருதுன்னு புரிஞ்சு போச்சா.. \\

    அக்மார்க் டி.வி.ஆர் டச்!//

    நம்புகிறேன் அதிஷா

    ReplyDelete
  20. //அதிஷா said...
    ஆமா அது யாருங்க அந்த பிரபல பதிவருங்க மாங்கு மாங்குனு ஸ்மைலி போடறது..

    (ஒரு வேளை உடன்பிறப்புவா இருக்குமோ!.. //

    இல்லை..இல்லை..நீங்கதான்..ஹி..ஹி..

    ReplyDelete
  21. டிவிஆர் சார்

    நான் ஒரு பிரபல பதிவர் இல்லை..

    நான் ஒரு பிராப்ல பதிவருங்கோ

    ReplyDelete
  22. நல்லாத்தான் கெள‌ப்புராங்கைய்யா பீதியை

    ReplyDelete
  23. ///உடன்பிறப்பு said...
    //
    அதிஷா said...

    ஆமா அது யாருங்க அந்த பிரபல பதிவருங்க மாங்கு மாங்குனு ஸ்மைலி போடறது..

    (ஒரு வேளை உடன்பிறப்புவா இருக்குமோ!.. )
    //

    என்னது நானெல்லாம் பிரபல் பதிவரா...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்///

    அவ்வ்வ்

    ReplyDelete
  24. //rapp said...
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...............//

    அடட..ராப்..வாங்க..ரொம்ப பிஸியா...நம்ம கடைப் பக்கம் ரொம்ப நாளா காணும்...

    ReplyDelete
  25. // துளசி கோபால் said...
    :-)))))))//

    வாங்க மேடம்..டெம்ப்ளேட் நன்றியா..?

    ReplyDelete
  26. //மயாதி said...
    நச்...

    இப்ப என்னையும் அந்த பிரபல பதிவர் லிஸ்ட்டில சேர்த்துடு தலைவா..//

    நான் சேர்ப்பதில் எந்த ஆட்சேபணையும் இல்லை..ஆனா..அவங்க சேர்த்துக்கணுமே

    ReplyDelete
  27. //புருனோ Bruno said...
    //பதிவு போடறதுக்கு முன்னாலேயே, பதிவை பாராட்டி 50 . 60 பின்னூட்டங்கள் வந்தாலும்..வரக்கூடும்.
    //

    ஹி ஹி ஹி//

    வாங்க டாக்டர்..நீங்க வருகை புரிந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  28. //நசரேயன் said...
    உள்ளேன் ஐயா.. ரெண்டு ஓட்டும் போட்டச்சி - இது நிரந்திர பின்னூட்டமா??//
    50-50 ??

    ReplyDelete
  29. // கார்க்கி said...
    கிகிகிகிகிகி//

    :-)))

    ReplyDelete
  30. ///அனுஜன்யா said...
    சார், என்ன இது? எனக்கு பிரபலங்கள் எல்லாம் இதே மாதிரிதான் பின்னூட்டம் போடறாங்க. அப்ப அவங்க என்னோட பதிவு படிக்கவே இல்லையா? இப்படி என் மகிழ்ச்சியைக் கெடுத்து விட்டீர்களே!

    Jokes apart -அவர்களுக்கும் டைம் இல்லை அல்லவா. பெரும்பாலும் படிச்சிட்டுத் தான் போடுறாங்கன்னு நினைக்கிறேன். ஆனா, டெம்ப்ளேட் பின்னூட்டம் போடத் தான் டைம் இருக்கு. என்ன செய்ய முடியும் அவர்களால்?

    அப்ப நீ என்ன செய்யுறனு கேக்காதீங்க. நா போற இடம் குறைவு. போனால் நிறுத்தி நிதானமா படிச்சு, மனசுக்குத் தோன்றிய பின்னூட்டம் தான் போடுறேன். இப்பதான் தெரியுது - அதனால்தான் நாம இன்னும் பிரபலம் ஆகலைன்னு. இல்லாட்டா இதுக்கும் ஒரு ஸ்மைலி போட்டுட்டு போயிருக்கலாம் :)

    அனுஜன்யா//

    அதனால்தான் நாம இன்னும் பிரபலம் ஆகலைன்னு. இல்லாட்டா இதுக்கும் ஒரு ஸ்மைலி போட்டுட்டு போயிருக்கலாம் :)


    ???!!!!
    இதுவும் ஜோக் தானே சார்

    ReplyDelete
  31. வருகைக்கு நன்றி

    துபாய் ராஜா
    அத்திரி
    தீப்பெட்டி
    சிபி
    Anbu

    ReplyDelete
  32. // குடுகுடுப்பை said...
    நச்சுன்னு ஒரு பின்னூட்டம் போடனும்னு ஆசையாதான் இருக்கு.//

    நச்

    ReplyDelete
  33. //குடுகுடுப்பை said...
    T.V.Radhakrishnan said...

    எப்படி விமரிசிப்பதுன்னு தெரியலே..ஆனாலும் ..வாழ்த்துக்கள் ன்னு போட்டுடறேன்//

    என்னோட பதிவுல நீங்க போட்ட பின்னூட்டம் படிச்சிட்டு போட்டிருக்கீங்க//
    yes

    ReplyDelete
  34. ராதாகிருஷ்ணன் சார், ஏன் இப்படி ?????

    உங்களை பத்தி விலாவாரியா Mr No அவர்கள் என்னோட பதிவுல வந்து psycho analysis பண்ணி இருக்காரு. வேணும்னா சொல்லுங்க. அவர் எழுதினதை என்னோட ஈமெயில்லேந்து எடுத்து இந்த பதிவுல பின்னூட்டமா போடறேன்.

    ReplyDelete
  35. //மணிகண்டன் said...
    ராதாகிருஷ்ணன் சார், ஏன் இப்படி ?????

    உங்களை பத்தி விலாவாரியா Mr No அவர்கள் என்னோட பதிவுல வந்து psycho analysis பண்ணி இருக்காரு. வேணும்னா சொல்லுங்க. அவர் எழுதினதை என்னோட ஈமெயில்லேந்து எடுத்து இந்த பதிவுல பின்னூட்டமா போடறேன்.//


    அதை என்னோட மைல் ஐடி க்கு அனுப்புங்க.

    ReplyDelete
  36. //அதிஷா said...
    டிவிஆர் சார்

    நான் ஒரு பிரபல பதிவர் இல்லை..

    நான் ஒரு பிராப்ல பதிவருங்கோ//


    No Problem

    ReplyDelete
  37. வருகைக்கு நன்றி
    சாலிசம்பர்
    அக்னி பார்வை
    ச்சின்னப் பையன்
    Starjan

    ReplyDelete
  38. டவுசரை கிழிச்சிட்டீங்க....

    ReplyDelete
  39. // உடன்பிறப்பு said...
    நெடு நாள் கழித்து படித்த நல்ல பதிவு


    (இதுவும் ஒரு டெம்ப்ளேட் பின்னூட்டம் தான். ஹிஹி)//

    :-))))))))

    ReplyDelete
  40. வருகைக்கு நன்றி
    அது சரி
    கிரி

    ReplyDelete
  41. எப்படியோ.. இதுக்கு ஒரு "குத்து" பின்னூட்டத்தை அள்ளிட்டீங்க....

    ReplyDelete
  42. உங்க டெம்ப்ளேட் பின்னூட்டத்திலே சில பின்னூட்டங்களை விட்டுடீங்களே....!

    ReplyDelete
  43. தேவையான பதிவு...

    அடுத்த தளத்திற்கு சென்று விட்டீர்கள்... இங்கே அடுத்த தளத்திற்கு போக "லிப்ட்" தேவைபடுது எனக்கு ...!!!)

    ReplyDelete
  44. ஹாய்... நானே ஐம்பது........

    ReplyDelete
  45. அருமையான பதிவு சார். சூப்பர்

    ReplyDelete
  46. பதிவுகளைப் படித்துக் கருத்துரையிடும் பதிவர்களும் உள்ளார்கள் நண்பரே......

    ReplyDelete
  47. பின்னூட்டத்தை வாரி வழங்கிய நைனா விற்கு நன்றி..

    ReplyDelete
  48. //முரளிகண்ணன் said...
    அருமையான பதிவு சார். சூப்பர்//


    வருகைக்கு நன்றி முரளி

    ReplyDelete
  49. //கடைக்குட்டி said...
    52 :-)//


    நன்றி கடைக்குட்டி

    ReplyDelete
  50. //முனைவர்.இரா.குணசீலன் said...
    பதிவுகளைப் படித்துக் கருத்துரையிடும் பதிவர்களும் உள்ளார்கள் நண்பரே......//


    ஐயா..இது ஒரு நகைச்சுவைக்காக எழுதப் பட்ட பதிவு...அவ்வளவுதான்...தனிப்பட்டமுறையில் யாரையும் குறிப்பிட்டு அல்ல.

    ReplyDelete
  51. மச்சான் இப்படி பார்த்ததே இல்ல

    ReplyDelete
  52. என்ன வச்சு நீங்க காமெடி கீமெடி பண்ணலையே!

    ReplyDelete
  53. கலக்கல்

    ReplyDelete
  54. சூப்பர் தல

    ReplyDelete
  55. நல்ல பதிவு சகா

    ReplyDelete
  56. மச்சான் இப்படி பார்த்ததே இல்ல

    ReplyDelete
  57. டவுசரை கிழிச்சுட்டே

    ReplyDelete
  58. அடடா! இந்த ரூட் நமக்கு தெரியாம போச்சே...ரெடி ஸடார்ட்!

    ReplyDelete
  59. //SUBBU said...
    மச்சான் இப்படி பார்த்ததே இல்ல//


    நன்றி SUBBU

    ReplyDelete
  60. //வால்பையன் said...
    என்ன வச்சு நீங்க காமெடி கீமெடி பண்ணலையே!//

    அடடே...நீங்க்ளும் நம்பளப்போலத்தானா?

    ReplyDelete
  61. நன்றி
    நன்றி
    நன்றி
    நன்றி
    நன்றி
    நன்றி
    நன்றி
    பாரிஸ் திவா உங்க ஏழு பின்னூட்டத்திற்கும் (டெம்ப்ளேட் பின்னூட்டமாயிருந்தாலும்):-))

    ReplyDelete
  62. //குடந்தை அன்புமணி said...
    அடடா! இந்த ரூட் நமக்கு தெரியாம போச்சே...ரெடி ஸடார்ட்!//

    இனி உங்க பின்னூட்டங்களை நிரந்திரமாக எதிர்ப்பார்க்கலாம் அல்லவா..:-))

    ReplyDelete
  63. i think u get more comments for this blog :)

    ReplyDelete
  64. //JesusJoseph said...
    i think u get more comments for this blog :)//

    yes

    ReplyDelete