Monday, June 15, 2009

வாய் விட்டு சிரியுங்க..

1.அவர் போலி பல் டாக்டர்னு எப்படி சொல்ற..
பல் பளீச்சுன்னு இருக்கணும்னா..சபீனா போட்டு தேய்க்கச் சொல்றாரே

2.அந்த டாக்டர் முன்னால் அரசியல்வாதியாய் இருப்பார்னு எப்படி சொல்ற
நர்ஸிங் ஹோம் திறப்புவிழாவிற்கு..பிணி திரண்டு வாரீர்னு அழைப்பிதழ் அடிச்சிருக்காரே

3.எங்க கட்சியில தலைவருக்கு தொண்டர் எல்லாம் கட்டுப்படுவோம்..
அவ்வளவு கட்டுக்கோப்பான கட்சியா?
ஆனா..யார் தலைவர்..யார் தொண்டர்கள் என்பதிலேதான் பிரச்னை

4.பாட்டி இறந்துட்டான்னு இரண்டாம் முறை லீவ் கேட்கறே..அதனால உன்னை நம்ப மாட்டேன்..உங்க பாட்டிகிட்ட லெட்டர் வாங்கிட்டு வா
எங்க பாட்டிக்கு எழுதப் படிக்கத் தெரியாதே சார்

5.அந்த கிரிக்கட் வீரர் மிகவும் புகழ் வாய்ந்தவர்னு சொல்றியே..நிறைய செஞ்சரி அடிச்சிருக்காரா?
அதெல்லாம் இல்லை..விளையாடும் போதெல்லாம்..இஞ்சுரி தான்

6.என்னோட கணவர் ரொம்ப தற்புகழ்ச்சிக்காரர்
ஏன் அப்படி சொல்ற
தான் சமைச்சதை..அருமையா இருக்குன்னு தானே பாராட்டிக்கிட்டு சாப்பிடுவார்.

20 comments:

  1. \\நர்ஸிங் ஹோம் திறப்புவிழாவிற்கு..பிணி திரண்டு வாரீர்னு அழைப்பிதழ் அடிச்சிருக்காரே\\

    சூப்பர்....

    ReplyDelete
  2. /
    என்னோட கணவர் ரொம்ப தற்புகழ்ச்சிக்காரர்
    ஏன் அப்படி சொல்ற
    தான் சமைச்சதை..அருமையா இருக்குன்னு தானே பாராட்டிக்கிட்டு சாப்பிடுவார்
    /

    இதில சிரிக்க என்ன இருக்கு பொறாமை பிடித்த மனைவி.
    :(


    நிறைய நாளைக்கு நம்ப வூட்ல இப்பிடித்தானுங்கோ
    :))))))

    ReplyDelete
  3. அனைத்தும் நன்று.

    ReplyDelete
  4. :)- Nice ones. Do you write them on your own ? or do you write them from your memories sir ?

    ReplyDelete
  5. வருகைக்கும்..பாராட்டுக்கும் நன்றி

    நிகழ்காலத்தில்

    ReplyDelete
  6. நன்றி ச்சின்னப் பையன்

    ReplyDelete
  7. //மங்களூர் சிவா said...
    நிறைய நாளைக்கு நம்ப வூட்ல இப்பிடித்தானுங்கோ
    :))))))//

    அவங்களும் பாவம்...வேலைக்குப் போகும்போது...நீங்க செஞ்சா தப்பு இல்ல சிவா

    ReplyDelete
  8. //மங்களூர் சிவா said...
    :))
    நல்ல தொகுப்பு.//

    நன்றி

    ReplyDelete
  9. //ananth said...
    அனைத்தும் நன்று.//


    வருகைக்கும்..பாராட்டுக்கும் நன்றி

    ReplyDelete
  10. //மணிகண்டன் said...
    :)- Nice ones. Do you write them on your own ? or do you write them from your memories sir ?//

    மணி..அனைத்து ஜோக்குகளும் நானே எழுதுவது..நான் கிட்டத்தட்ட 750ஜோக்குகள் எழுதி வைத்துள்ளேன்..அவற்றிலிருந்து எடுத்து எழுதுகிறேன்..சில வேளைகளில்..கிட்டத்தட்ட..இதே அர்த்தத்தில் ஜோக்குகளும் வருவதுண்டு.வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  11. // நையாண்டி நைனா said...
    Nice Jokes//

    நன்றி நைனா

    ReplyDelete
  12. /////

    அந்த கிரிக்கட் வீரர் மிகவும் புகழ் வாய்ந்தவர்னு சொல்றியே..நிறைய செஞ்சரி அடிச்சிருக்காரா?
    அதெல்லாம் இல்லை..விளையாடும் போதெல்லாம்..இஞ்சுரி தான்
    ////

    :))))))))))))

    ReplyDelete
  13. வருகைக்கு நன்றி அக்னி

    ReplyDelete
  14. நல்ல முயற்சி்
    "நர்ஸிங் ஹோம் திறப்புவிழாவிற்கு..பிணி திரண்டு வாரீர்னு அழைப்பிதழ் அடிச்சிருக்காரே.."
    மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  15. ***
    மணி..அனைத்து ஜோக்குகளும் நானே எழுதுவது..நான் கிட்டத்தட்ட 750ஜோக்குகள் எழுதி வைத்துள்ளேன்..அவற்றிலிருந்து எடுத்து எழுதுகிறேன்..சில வேளைகளில்..கிட்டத்தட்ட..இதே அர்த்தத்தில் ஜோக்குகளும் வருவதுண்டு.வருகைக்கு நன்றி
    ***

    kudos to your effort and creativity sir.

    கலக்கறீங்க.

    ReplyDelete
  16. //டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...
    நல்ல முயற்சி்
    "நர்ஸிங் ஹோம் திறப்புவிழாவிற்கு..பிணி திரண்டு வாரீர்னு அழைப்பிதழ் அடிச்சிருக்காரே.."
    மிகவும் ரசித்தேன்.//

    வருகைக்கு நன்றி doctor

    ReplyDelete
  17. //மணிகண்டன் said...
    kudos to your effort and creativity sir.

    கலக்கறீங்க.//

    Thanks Mani

    ReplyDelete