Tuesday, June 23, 2009

வாய் விட்டு சிரியுங்க..

1.முன்னால ஈ ஓட்டிக்கிட்டு இருந்த உன் வியாபாரம் இப்ப எப்படி இருக்கு
ஈ மெயில் ஓட்டிக்கிட்டு இருக்கு இப்ப..

2.எங்க ஆஃப்ஸ்ல யார் தப்பு பண்ணினாலும் வீட்டுக்கு அனுப்பிடுவாங்க
அப்போ..நீங்க இப்ப வேலை இல்லாமலா இருக்கீங்க

3.டாகடர் அந்த நோயாளிக்கு வயிற்றுப்போக்கு
நல்லவேளை..இன்னிக்கு வயிற்றுப்பிழைப்புக்கு என்ன செய்யறதுன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.

4.அந்த டாக்டர் நல்லவர்னு எப்படி சொல்ற
தலைவலின்னு போனேன்..பிளட் டெஸ்ட்,சி.டி.ஸ்கேன், எக்ஸ்ரே இப்படி எதுவும் எடுக்க வேண்டாம்..ஏற்கனவே ஒருத்தருக்கு எடுத்த ரிபோர்ட் இருக்கு..அதை யூஸ் பண்ணிக்கிறேன்னு உங்களுக்கு செலவு குறையும்னு சொல்லிட்டார்.

5.என் மாமியாரை நாய் கடிச்சுடுத்து
இப்ப..நாய் எப்படி இருக்கு

6.உன் பையன் ஒரு ரூபா காயினை விழுங்கிட்டான்னு சொன்னியே..அப்பறம் என்ன ஆச்சு
டாக்டருக்கு 500 ரூபா கொடுத்து..ஒரு ரூபாயை மீட்டேன்.

8 comments:

  1. /
    அந்த டாக்டர் நல்லவர்னு எப்படி சொல்ற
    தலைவலின்னு போனேன்..பிளட் டெஸ்ட்,சி.டி.ஸ்கேன், எக்ஸ்ரே இப்படி எதுவும் எடுக்க வேண்டாம்..ஏற்கனவே ஒருத்தருக்கு எடுத்த ரிபோர்ட் இருக்கு..அதை யூஸ் பண்ணிக்கிறேன்னு உங்களுக்கு செலவு குறையும்னு சொல்லிட்டார்.
    /

    அவர் சாதாரணமா நல்லவரில்லை. ரொம்பாஆஆ நல்லவர்
    :))))))))))))

    ReplyDelete
  2. நல்லாயிருக்குது. நீங்களா எழுதறதா இவை.? அப்படியானால் பத்திரிகைகளுக்கு முயற்சிக்கலாமே.!

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி துபாய் ராஜா
    ஒரு ராஜா விடமிருந்து பாராட்டு கிடைத்ததற்கு மகிழ்ச்சி
    :-))

    ReplyDelete
  4. //ஆதிமூலகிருஷ்ணன் said...
    நல்லாயிருக்குது. நீங்களா எழுதறதா இவை.?//

    பின்ன மண்டபத்தில யாராவது எழுதிக்கொடுத்தாங்களா என்ன?

    ReplyDelete
  5. //ஆதிமூலகிருஷ்ணன் said...
    பத்திரிகைகளுக்கு முயற்சிக்கலாமே.!//

    வெகுஜன பத்திரிகைகளில் வெளியாக ஆள்யாரும் எனக்குத் தெரியாது..ஆதி..
    ஆமாம் ..புது வீடு எப்படி இருக்கு?

    ReplyDelete