Friday, July 24, 2009

அருமை+கலக்கல்+;-)) = பிரபலம் (சிறுகதை)

புது நிர்வாக அதிகாரி வருகிறார் இன்று எங்கள் அலுவலகத்திற்கு.

இளைஞர்தானாம்..ஆனால் அதி புத்திசாலியாம்.அவர் பதவி ஏற்றதும்தான் ரெஷஷன் சமயத்திலும்..எங்கள் அலுவலக graph மட்டும் வடக்கு நோக்கியே போய்க்கொண்டிருக்கிறது.

அவர்..எங்கள் அலுவலகம் வருகிறார் என்றதும்..எங்கள் அனைவருக்கும் படபடப்பு.

'கார் வந்து விட்டது' என கத்தினான் அட்டெண்டர் ஆறுமுகம்.எங்க டீம் லீடர் விக்னேஷ் அவருக்கு மாலை போட..நான் பூங்கொத்தைத் தருகிறேன்.

ஒரு சென்டிமீட்டர் அளவே வாய் விரித்து புன்னகைக்கிறார்.உள்ளே மிதமான குளிரூட்டப்பட்ட அறைக்குச் சென்று அமர்கிறார்.நானும்..விக்னேஷும் உள்ளே செல்கிறோம்.நான் தற்போது நடந்துக் கொண்டிருக்கும் புராஜக்ட் பற்றி விவரிக்கிறேன்..'அருமை' என்கிறார்.

விக்னேஷ்..ஸ்டாஃப் குறைவாயிருந்த போதும்..எல்லா வேலைகளையும் குறித்த நேரத்தில் முடித்து விடுகிறோம்..என்கிறான்...'கலக்கிட்டீங்க' என பாராட்டுகிறார்.

பின்..எல்லாவற்றிற்கும்..ரெடிமேடாக தயாரித்தாற்போல ஒரிரு வார்த்தைகளிலேயே பதில் சொல்கிறார்.

நானும் விக்னேஷும் வெளியே வருகிறோம்...எனக்கோ ஆச்சர்யம்..விக்னேஷிடம் ..'அதிகம் பேசமாட்டேன் என்கிறார்..எப்படி இவர் திறமையானவராய் இருக்கிறார்' எனக் கேட்க நினைக்கிறேன்.

அதற்குள் விக்னேஷ் சொல்கிறான்..'உனக்குத் தெரியுமா..இணையதளத்தில்..மிகப் பிரபல பதிவர் இவர். இவர் பிளாகை தினம் 1000 பேருக்குமேல் பார்வையிடுகிறார்கள்'

18 comments:

  1. நல்லா இருக்கு.

    ReplyDelete
  2. நல்ல இடுகை வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  3. பிளாகருக்கு வாய் இடுகையில மட்டும்தான் கிழியுமுன்னு உள்குத்தோட சொல்லிட்டீங்க!

    ReplyDelete
  4. ஹா ஹா செம சிறுகதை ;) எல்லாமே இப்படி தான் பிளாகர் எல்லாருமா என்ன ? பல பேர் பக்கம் பக்கமா பதிவு போட்டாலும் சின்னதாய் கமெண்ட் போடுறத் தப்பு இல்லை ஆனா படிச்சிட்டு போட்டா சரி தான்..

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி
    சந்ரு
    பாலா

    ReplyDelete
  6. // புருனோ Bruno said...
    :)//

    நன்றி doctor

    ReplyDelete
  7. //Suresh said...
    ஹா ஹா செம சிறுகதை ;) எல்லாமே இப்படி தான் பிளாகர் எல்லாருமா என்ன ? பல பேர் பக்கம் பக்கமா பதிவு போட்டாலும் சின்னதாய் கமெண்ட் போடுறத் தப்பு இல்லை ஆனா படிச்சிட்டு போட்டா சரி தான்..//

    சரி தான்

    ReplyDelete
  8. //டக்ளஸ்... said...
    ரைட்டு..//

    நன்றி டக்ளஸ்

    ReplyDelete
  9. ஆஹா.. அருமை..கலக்கல்..னு போட்டா அடி விழுமே இங்க..

    கரெண்ட்!!!

    ReplyDelete
  10. வித்தியாசமா இருக்கு.

    விடை பெறுகிறேன் .... சாரி...சாரி..
    வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
  11. //கே.ரவிஷங்கர் said...
    வித்தியாசமா இருக்கு.

    விடை பெறுகிறேன் .... சாரி...சாரி..
    வாழ்த்துகிறேன்!//

    ;-))

    நன்றி ரவிஷங்கர்

    ReplyDelete
  12. //Cable Sankar said...
    நைஸ்..//

    வருகைக்கு நன்றி Sankar

    ReplyDelete