Wednesday, August 5, 2009

வாய் விட்டு சிரியுங்க..

என் பையன் ஆஃபீஸ்ல ஒரு வேலையை முடிச்சு தரச் சொன்னா..என் கிட்டேயே லஞ்சம் கேட்கிறான்..
அப்படியா?
கேட்டா..இது தொழில் ரீதியான சந்திப்புன்னு சொல்றான்.

2.எங்க ஊர் தாதா அரிவாளை எடுத்துட்டா கொலை விழாமல் இராது..
அது என்ன பெரிய விஷயம்..எங்க ஊர் டாக்டர் சாதாரண கத்தியிலேயே..ஆபரேஷன் தியேட்டர்ல அந்த கொலையை பண்ணிடுவார்.

3.தந்தை- (மனைவியிடம்) நம்ம பொண்னு ரகசியமா..உன் கிட்ட என்ன சொல்றா
மனைவி-அவ இனிஷியலை மாத்திக்கணுமாம்..உங்க பர்மிஷன் கேட்கறா

4. ஹிஸ்டரில ஃபெயில் மார்க் வாங்கி இருக்கியே
நான் பொறக்கறதுக்கு முன்னால நடந்ததெல்லாம் கேட்கறாங்க

5.அந்த டாக்டர் போலின்னு எப்படி சொல்ற
18 வயசுக்குள்ள இருக்கற நோயாளிக்கு ஆபரேஷன் பண்ணினா அது மைனர் ஆபரேஷனாம்..அதுக்குமேல வயசுள்ளவங்களுக்கு பண்ணினா அது மேஜர் ஆபரேஷனாம்

6.எங்க தமிழ் ஆசிரியரைப் பற்றி சின்னதா ஒரு நாவல் எழுதி இருக்கேன்
குரு நாவல்ன்னு சொல்லு

7.உங்க பையனுக்கு எஜுகேஷன் லோன் வாங்கினியே..எப்படி படிக்கிறான்..
கடனேன்னு படிக்கிறான்

12 comments:

  1. .உங்க பையனுக்கு எஜுகேஷன் லோன் வாங்கினியே..எப்படி படிக்கிறான்..
    கடனேன்னு படிக்கிறான்

    :-))))))

    ReplyDelete
  2. ம்ம்ம்ம் சிரிக்கலாம்

    ReplyDelete
  3. //ஹிஸ்டரில ஃபெயில் மார்க் வாங்கி இருக்கியே
    நான் பொறக்கறதுக்கு முன்னால நடந்ததெல்லாம் கேட்கறாங்க//


    நாங்கூட அதனால தான் ஃபெயில்!
    :)

    ReplyDelete
  4. எல்லாமே சிரிப்பை வரவழைத்தன.
    அந்த 5வது ஜோக் சூப்பர்.

    ReplyDelete
  5. ஹா ஹா ஹா ....

    சிரிப்பு வருது சிரிப்பு வருது

    சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது

    நல்ல காமெடிகள்

    நல்லாயிருக்கு

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி
    ஞானசேகரன்
    வால்பையன்
    நைனா
    அக்பர்
    ஸ்டார்ஜன் )

    ReplyDelete
  7. //உங்க பையனுக்கு எஜுகேஷன் லோன் வாங்கினியே..எப்படி படிக்கிறான்..
    கடனேன்னு படிக்கிறான் //

    top

    ReplyDelete
  8. //nila said...
    //உங்க பையனுக்கு எஜுகேஷன் லோன் வாங்கினியே..எப்படி படிக்கிறான்..
    கடனேன்னு படிக்கிறான் //

    top//


    நன்றி nila

    ReplyDelete
  9. /
    கடனேன்னு படிக்கிறான்
    /

    :-))))))

    ReplyDelete
  10. //// மங்களூர் சிவா said...
    /
    கடனேன்னு படிக்கிறான்
    /

    :-))))))///

    நன்றி சிவா

    ReplyDelete