Sunday, August 16, 2009

மனிதனாகும் ஆசை வேண்டாம்.

நன்றியில் நாயாய் இரு
வீரத்தில் சிங்கமாய் இரு
ஞாபகத்தில் யானையாய் இரு
உறவுகளில் காக்கையாய் இரு
மானத்தில் மானாய் இரு
தந்திரத்தில் நரியாய் இரு
சேமிப்பில் ஒட்டகமாய் இரு -ஆனால்
மனிதா
மனிதனாய் மட்டும் இருந்திடாதே!!!

ஓ..மிருகங்களே..
நீங்கள் நீங்களாகவே இருங்கள்
மனிதனாகும் ஆசை வேண்டாம்...

10 comments:

  1. கண்போன பாதையில் கால் போகலாமா
    கால்போன பாதையில் மனம் போகலாமா
    மனம்போன பாதையில் மனிதன் போகலாமா
    மனிதன்போன பாதையில் மறந்தும் போகலாமா?

    ReplyDelete
  2. நல்ல கவிதை..மனிதாபிமானம் இல்லாத மனிதனுக்கு தரும் டோஸா இது ராதாக்ருஷ்ணன்?!

    ReplyDelete
  3. கவிதையும் எழுதுவிங்களா ?

    சொல்லவே இல்லை !

    ReplyDelete
  4. கவிதையும் எழுதுவிங்களா ?

    சொல்லவே இல்லை !

    ReplyDelete
  5. மனிதனாக மட்டும் மனிதனுக்குத் தெரியவில்லை...ஓஹ்...

    ReplyDelete
  6. //SP.VR. SUBBIAH said...
    கண்போன பாதையில் கால் போகலாமா
    கால்போன பாதையில் மனம் போகலாமா
    மனம்போன பாதையில் மனிதன் போகலாமா
    மனிதன்போன பாதையில் மறந்தும் போகலாமா?//

    எப்படி எந்த நடிப்பாய் இருந்தாலும் சிவாஜி ஞாபகத்தில் வருவாரோ..அதுபோல எல்லா கவிதைகளும் கண்னதாசன் தொட்டதே
    நீண்ட நாட்கள் கழித்து..என் வலைப்பக்கம் வந்துள்ள ஆசிரியருக்கு நன்றி

    ReplyDelete
  7. //ஷைலஜா said...
    நல்ல கவிதை..மனிதாபிமானம் இல்லாத மனிதனுக்கு தரும்//

    ஆகா...கவிதைக்கு ஒரு ஷைலஜா என்ற நிலையில் உள்ள தங்கள் பாராட்டுக்கு நன்றி

    ReplyDelete
  8. //கோவி.கண்ணன் said...
    கவிதையும் எழுதுவிங்களா ?

    சொல்லவே இல்லை !//

    நான் ஏதோ கிறுக்கப் போக அதற்கு கவிதை என்ற பெயரிட்ட உங்களுக்கு நன்றி கோவி

    ReplyDelete
  9. //மங்களூர் சிவா said...
    கவிதையும் எழுதுவிங்களா ?

    சொல்லவே இல்லை //

    நான் ஏதோ கிறுக்கப் போக அதற்கு கவிதை என்ற பெயரிட்ட உங்களுக்கு நன்றி சிவா

    ReplyDelete
  10. //goma said...
    மனிதனாக மட்டும் மனிதனுக்குத் தெரியவில்லை...ஓஹ்...//

    வருகைக்கு நன்றி கோமா

    ReplyDelete