Saturday, August 22, 2009

கருத்து வேறுபாடுகள்

மனிதன்..ஆறறிவு படைத்தவன். அவனுக்கென்று விருப்பு,வெறுப்புகள் உண்டு.
சாதாரண விஷயங்களையே எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒருவருக்கு இட்லி.காலை உணவிற்கு பிடிக்கும்..ஒருவருக்கு தோசை இப்படி..
எனக்கு வெளியே செல்ல பேண்ட் போட்டு செல்லப் பிடிக்கும்.
ப.சிதம்பரத்துக்கு பொதுக்கூட்டம்..பார்லிமெண்ட் என்றால் வேஷ்டி பிடிக்கும்.,குடும்பத்துடன் வெளியே செல்ல பேண்ட்..சூட்.,
கலைஞருக்கு மஞ்சள் சால்வை.
ஜெயலலிதாவிற்கு..திலகம் இட்டு..அதை சற்றே அழித்து மேலே நீட்டினாற்போன்று இடுதல் பிடிக்கும்.
ஒருவருக்கு சூப்பர் ஸ்டாரை பிடிக்கும்
மற்றவர்க்கு கமலைப் பிடிக்கும்..
ஒவ்வொருவருக்கும் ஒரு மாறுபட்ட ரசனை..
தான் விரும்புபவரை..மற்றவர் விமரிசத்தால் ..அவரை கீழ்த்தரமாக பேசுவது..அவர் மதத்தை இழுப்பது..அவர் ஜாதியை இழுப்பது எல்லாம் இன்று நம்மிடையே சர்வ சாதாரணம்.
நமக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை..அடுத்தவனுக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என எண்ணுபவர்கள்.
இவர்களெல்லாம்..ஏன் புரிந்து கொள்ளமாட்டேன் என்கிறார்கள்.
உனக்கு பிடிப்பது..மற்றவனுக்கு பிடிக்க வேண்டிய அவசியமில்லை.
அவன் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்...அவன் சுதந்திரத்தில்...எண்ணத்தில் தலையிட நாம் யார்.
ஒரு கணம்...மற்றவர்கள் பற்றி பேசும் முன்

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்ற அண்ணாவின் வாசகத்தை நினைவில் கொள்ளுங்கள்.

நமக்கு பிடிக்காததை ஒருத்தர் செய்தால்...அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுங்கள்.

ஒருவன் தவறிழைத்தால்..சாத்வீக முறையில் திருத்தப்பாருங்கள்.

உங்களுக்கு ஒருவன் தவறிழித்தால்..நீங்கள் உடனே பழிக்குப்பழி வாங்க எண்ணாதீர்கள்.

அவனை மன்னியுங்கள்..முடிந்தால் அவனுக்கு நல்லது செய்யுங்கள்.



கோபத்தை அகற்றுங்கள்.

அப்படியும் அவன் திருந்தவில்லையென்றால் உங்களை மலையாக நினையுங்கள்...

13 comments:

  1. உங்களது இந்த "கருத்து வேறுபாடுகள்" ல் யாருக்கும் எந்த கருத்து வேறுபாடும் இருக்காது... :)

    ReplyDelete
  2. நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  3. பதிவுலகத்துக்குத் தேவையான அறிவுரைகள்தான்..!

    நன்றிங்கோ ஐயா..!

    ReplyDelete
  4. உங்களின் இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடுதான்..........

    ReplyDelete
  5. //RAD MADHAV said...
    நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.....//

    வருகைக்கு நன்றி RAD MADHAV

    ReplyDelete
  6. //உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    பதிவுலகத்துக்குத் தேவையான அறிவுரைகள்தான்..!

    நன்றிங்கோ ஐயா..!//

    நன்றி உண்மைத் தமிழன்

    ReplyDelete
  7. //அன்புடன் அருணா said...
    உங்களின் இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடுதான்..........//

    வருகைக்கு நன்றி அருணா

    ReplyDelete
  8. நல்ல இடுகை.

    //அவன் சுதந்திரத்தில்...எண்ணத்தில் தலையிட நாம் யார்.//

    இது புரியாமல் தான் நிறைய பேர் அட்வைஸ் மழை பொழிய ஆரம்பிச்சுடுறாங்க.அவரவர்களுக்கு வரும் போதுதான் தனி மனித சுதந்திரத்தின் அவசியத்தை புரிந்து கொள்கிறார்கள்.

    ReplyDelete
  9. //நாடோடி இலக்கியன் said...
    நல்ல இடுகை.//


    வருகைக்கு நன்றி நாடோடி இலக்கியன்

    ReplyDelete
  10. //நாடோடி இலக்கியன் said...
    //அவன் சுதந்திரத்தில்...எண்ணத்தில் தலையிட நாம் யார்.//

    இது புரியாமல் தான் நிறைய பேர் அட்வைஸ் மழை பொழிய ஆரம்பிச்சுடுறாங்க.அவரவர்களுக்கு வரும் போதுதான் தனி மனித சுதந்திரத்தின் அவசியத்தை புரிந்து கொள்கிறார்கள்.//

    உள்குத்து எதுவும் இல்லையே!!

    ReplyDelete