Monday, August 31, 2009

வாய் விட்டு சிரியுங்க..

1.காதலன்-நான் நேர்மையானவன்..என் அலுவலகத்திலே நான் மட்டும் தான்..லஞ்சம் வாங்காதவன்
காதலி-..நல்லவேளை..இப்பவாது சொன்னீங்களே..பிழைக்கத் தெரியாத உங்களை..கல்யாணம் பண்ணிக்க இருந்தேனே

2.அந்த டாக்டர்..இப்பவெல்லாம் யாருக்கும் ஷாக் டிரீட்மெண்ட் கொடுக்கறதில்லை
ஏன்,..
இப்பவெல்லாம் தான்..எப்பவும் கரண்ட் கட் இருக்கே

3.அந்த ஓட்டல்ல மட்டும்..'ஆம்லெட்' ரொம்ப சீப்பா தர்றாங்களே..எப்படி?
ஓட்டல் முதலாளி..ஒரு அரசியல்வாதியாம்..அவர் கூட்டங்கள்லே பேசறப்ப..அவர் மேல வீசப்படற முட்டைகளை பொறுக்கி எடுத்து வந்துடுவாராம்

4.அவன் கஞ்சன்னு எப்படி சொல்ற..
அவன் பொண்ணு கல்யாணத்திலே..மூகூர்த்தத்தில..ஆசிர்வாதம் பண்ண..கொடுத்த அட்சதையெல்லாம் பொறுக்கி..ரிஷப்ஷன்ல லெமன் ரைஸ் ஆக்கிட்டான்.

5.கணவன்-(மனைவியிடம்) வர்றியா,,ஓட்டல்ல போய் காஃபி சாப்பிட்டு வரலாம்
மனைவி-என்ன அதிசயமாய் இருக்கு இன்னிக்கு..
கணவன்-(நினைவு வந்தவராய்) சாரி...பாமா..நான் ஆஃபீஸ்ல டைபிஸ்ட் கிட்ட பேசற ஞாபகத்தில கேட்டுட்டேன்

6.அரசியல்வாதி-(கூட்டத்தில் பேசும்போது)என்னை வெற்றிபெறச் செய்தால்..இந்த தொகுதியை மேம்படுத்துவேன்..தவறினால்...நீங்கள் என்னை தூக்கிலிடலாம்..
கூட்டத்தில் ஒருவன்- தலைவா...இந்தா கயிறு

12 comments:

  1. //கூட்டத்தில் ஒருவன்- தலைவா...இந்தா கயிறு//

    அப்படி மட்டும் நடந்தா எத்தனை பேர் தூக்குல தொங்குவாங்க. நினைச்சுப்பாத்தேன். :)

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி சின்ன அம்மிணி

    ReplyDelete
  3. //சாரி...பாமா..நான் ஆஃபீஸ்ல டைபிஸ்ட் கிட்ட பேசற ஞாபகத்தில கேட்டுட்டேன்//


    டக்கரு பா !! ரொம்ப நல்லா கீது !!

    ReplyDelete
  4. //அவன் கஞ்சன்னு எப்படி சொல்ற..அவன் பொண்ணு கல்யாணத்திலே..மூகூர்த்தத்தில..ஆசிர்வாதம் பண்ண..கொடுத்த அட்சதையெல்லாம் பொறுக்கி..ரிஷப்ஷன்ல லெமன் ரைஸ் ஆக்கிட்டான்.//
    சூப்பர் காமெடி.. ஹா..ஹா...
    ஹி...ஹி....

    ReplyDelete
  5. ரொம்ப நல்லா இருக்குது.

    ReplyDelete
  6. ///டவுசர் பாண்டி said...
    //சாரி...பாமா..நான் ஆஃபீஸ்ல டைபிஸ்ட் கிட்ட பேசற ஞாபகத்தில கேட்டுட்டேன்//


    டக்கரு பா !! ரொம்ப நல்லா கீது ///


    நன்றி டவுசர் பாண்டி

    ReplyDelete
  7. //நொண்டிசாமியார் said...
    //அவன் கஞ்சன்னு எப்படி சொல்ற..அவன் பொண்ணு கல்யாணத்திலே..மூகூர்த்தத்தில..ஆசிர்வாதம் பண்ண..கொடுத்த அட்சதையெல்லாம் பொறுக்கி..ரிஷப்ஷன்ல லெமன் ரைஸ் ஆக்கிட்டான்.//
    சூப்பர் காமெடி.. ஹா..ஹா...
    ஹி...ஹி....//

    வருகைக்கு நன்றி நொண்டிசாமியார்

    ReplyDelete
  8. /// ரமேஷ் விஜய் said...
    நல்லா இருக்குது.//

    நன்றி ரமேஷ் விஜய்

    ReplyDelete
  9. // நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார்//

    நன்றி சரவணக்குமார்

    ReplyDelete
  10. நன்றி தமிழா, அப்பப்ப அவுத்துவிடுறேன் சொன்னீங்கே, செஞ்சீடீங்க.
    தொடரட்டும் உங்ககள் பணி.

    ReplyDelete
  11. ///venkat said...
    நன்றி தமிழா, அப்பப்ப அவுத்துவிடுறேன் சொன்னீங்கே, செஞ்சீடீங்க.
    தொடரட்டும் உங்ககள் பணி.//

    வருகைக்கு நன்றி venkat

    ReplyDelete