Thursday, October 29, 2009

வாய் விட்டு சிரியுங்க

என்னோட லட்சியமே ஒரு கோவில் கட்டறதுதான்
அவ்வளவு பக்தியா?
அதெல்லாமில்லை...கோவில் கட்டினா...மெகா சீரியலுக்கு வாடகைக்கு விடலாம்..அதுதானே இன்னிக்கு முக்கிய ஷூட்டிங் ஸ்பாட்

2.நம்ம ஊர்ல காலரா வராம தடுக்கணும்னா ஈக்களை ஒழிக்கணும்.அதுக்கு கம்ப்யூட்டர்களுக்கு தடை விதிக்கணும்
என்ன சொல்றீங்க
இப்ப எல்லாம்..ஈ மெயில்கள் நிறையவருதாமே..அதை ஒழிக்கணுமே

3.(வேகமாக ஓடும் காரை நிறுத்திய போக்குவரத்து காவலர்) சார்...நீங்க மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில போறீங்க
ஏன்..அபாண்டமா பொய் சொல்றீங்க?..நான் காரையே 10 நிமிஷம் முன்னாலதான் எடுத்தேன்.

4.உங்க வீட்டு பெண்கள் எல்லாம்...cat walk பழகறாங்களா? ஏதாவது ஃபேஷன் ஷோவில கலந்துக்கிறாங்களா?
இல்ல...வீட்ல இருக்கிற எலிகளை பிடிக்கத்தான்.

5.பேச்சுப் போட்டியில அரை மணி நேரம் பேசியும் உனக்கு பரிசு கிடைக்கலையா? எதைப்பற்றிப் பேசினே?
சுருங்கச் சொல்லி விளக்க வைப்பது எப்படின்னு

6.வக்கீல் சார்...என் கேஸ் ஜெயிக்குமா?
உண்மையை சொல்லணும்னா..ஜெயிக்கிறது கஷ்டம் தான்
உண்மையைச் சொல்றதாயிருந்தா இருந்தா...உங்களை வக்கீலா வைச்சிருக்க மாட்டேனே

11 comments:

  1. //உங்க வீட்டு பெண்கள் எல்லாம்...cat walk பழகறாங்களா? ஏதாவது ஃபேஷன் ஷோவில கலந்துக்கிறாங்களா?
    இல்ல...வீட்ல இருக்கிற எலிகளை பிடிக்கத்தான்.//

    விழுந்து விழுந்து சிரித்தேன்!

    ReplyDelete
  2. //இப்ப எல்லாம்..ஈ மெயில்கள் நிறையவருதாமே..அதை ஒழிக்கணுமே
    //

    அய்யோ
    அய்யோ
    அய்யோ
    முடியல

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி கதிர் - ஈரோடு

    ReplyDelete
  4. எல்லாமே சூப்பர். :))

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி பித்தனின் வாக்கு

    ReplyDelete
  6. //.நம்ம ஊர்ல காலரா வராம தடுக்கணும்னா ஈக்களை ஒழிக்கணும்.அதுக்கு கம்ப்யூட்டர்களுக்கு தடை விதிக்கணும்
    என்ன சொல்றீங்க
    இப்ப எல்லாம்..ஈ மெயில்கள் நிறையவருதாமே..அதை ஒழிக்கணுமே//

    ஹா....ஹா....

    எல்லாமே காமடித்தான்....ரசித்தேன்....

    ReplyDelete