Monday, October 5, 2009

ஆனந்தம்


மஞ்சள் நீராட்டு
குங்குமப்பொட்டு
கழுத்தில்மாலை
ஆட்டிற்கோ ஆனந்தம்
விவரம் புரியாததால்
நேர்த்திக்கடன் ஆண்டவனுக்கு
நிறைவேற்றப் போவதால்
பக்தனுக்கோ ஆனந்தம்
தான் படைத்த உயிர்களில்
தன் பெயரைச் சொல்லி
ஒன்று பலியாவதால்
இறைவனுக்கோ கண்ணீர்
கண்டிப்பாக
ஆனந்தக் கண்ணீர் அல்ல

8 comments:

  1. அதனால தான் நான் சைவத்துக்கு மாறீட்டேன்.

    ReplyDelete
  2. //ஒன்று பலியாவதால்
    இறைவனுக்கோ கண்ணீர்
    கண்டிப்பாக
    ஆனந்தக் கண்ணீர் அல்ல//

    அழவைக்கும் வரிகள்...

    கவிதை சுத்த சைவம்....

    ReplyDelete
  3. //சின்ன அம்மிணி said...
    அதனால தான் நான் சைவத்துக்கு மாறீட்டேன்.//

    நன்றி சின்ன அம்மிணி

    ReplyDelete
  4. //க.பாலாஜி said...
    அழவைக்கும் வரிகள்...

    கவிதை சுத்த சைவம்....//

    நன்றி பாலாஜி

    ReplyDelete
  5. கவித கவித :)-

    நீங்க எழுதச் சொன்ன தொடர் ஒருவழியா எழுதிட்டேன்.

    ReplyDelete
  6. //மணிகண்டன் said...
    கவித கவித :)-

    நீங்க எழுதச் சொன்ன தொடர் ஒருவழியா எழுதிட்டேன்.//

    நன்றி மணி

    ReplyDelete
  7. /// மங்களூர் சிவா said...
    :(((///


    நன்றி சிவா

    ReplyDelete