Monday, October 12, 2009

பனிப்பாவை (கவிதை)


வைகறையில்
கதிரோனின் கீற்றுகள்
வண்ண வெளிச்சம் போட்டு
புற்களில் தூங்கும்
பனிப்பாவையினரின்
நிர்வாணத்தைக் கலைத்து
மேனியில் ஊடுறிவி
இன்னலை விளைவிக்க
வெட்கத்துடன் பாவையினர்
மறைந்தனரே

16 comments:

  1. எதுக்கு கவிதை எழுதும்போது டைட்டில்ல கவிதைன்னு பிராக்கெட்ல போடறீங்க :)-

    ReplyDelete
  2. /எதுக்கு கவிதை எழுதும்போது டைட்டில்ல கவிதைன்னு பிராக்கெட்ல போடறீங்க :)-/

    அதே!

    கவிதை அழகு. புல்லின் நுனிப் பனி போல் படிக்கச் சிலிர்ப்பு.

    ReplyDelete
  3. //வைகறையில்
    கதிரோனின் கீற்றுகள்//

    ஆரம்பமே அசத்தல்....

    முடிவு அழகு....

    நல்ல கவிதை.....

    ReplyDelete
  4. நல்லாயிருக்கு...

    ReplyDelete
  5. //மணிகண்டன் said...
    எதுக்கு கவிதை எழுதும்போது டைட்டில்ல கவிதைன்னு பிராக்கெட்ல போடறீங்க :)-//

    பதிவு ஏன் இவ்வளவு சின்னதாய் இருக்குன்னு நீங்க பின்னூட்டம் போட்டுட்டா என்ன செய்யறது

    ReplyDelete
  6. //கவிதை அழகு. புல்லின் நுனிப் பனி போல் படிக்கச் சிலிர்ப்பு.//

    நன்றி வானம்பாடிகள்

    ReplyDelete
  7. //க.பாலாஜி said...
    நல்ல கவிதை.....//
    நன்றி பாலாஜி

    ReplyDelete
  8. //தண்டோரா ...... said...
    நல்லாயிருக்கு...//

    நம்ம வலைப்பூ பக்கம் வந்ததற்கும்...கருத்துக்கும் நன்றி தண்டோரா

    ReplyDelete
  9. //வெட்கத்துடன் பாவையினர்
    மறைந்தனரே//
    அழகு..........

    ReplyDelete
  10. /// புலவன் புலிகேசி said...
    //வெட்கத்துடன் பாவையினர்
    மறைந்தனரே//
    அழகு..........///


    நன்றி புலவன் புலிகேசி

    ReplyDelete
  11. //நசரேயன் said...
    உள்ளேன் ஐயா//

    மகிழ்ச்சி நசரேயன்

    ReplyDelete
  12. //வெட்கத்துடன் பாவையினர்
    மறைந்தனரே//

    கவிதையில் சொற் குற்றம் இல்லை..இருந்தாலும் மன்னித்து விடலாம்.

    ஆனால் பொருட் குற்றம் உள்ளது..மன்னிக்க முடியாதது.
    இப்ப உள்ள பாவைகள் வெட்கத்துடன் மறைய மாட்டாங்க..நீங்க தான் வெட்கப்பட்டு ஓடிப் போகணும்.
    ஆயிரம் பொற் காசுகள் லேது.

    ReplyDelete
  13. //veerapandian said...
    //வெட்கத்துடன் பாவையினர்
    மறைந்தனரே//

    கவிதையில் சொற் குற்றம் இல்லை..இருந்தாலும் மன்னித்து விடலாம்.

    ஆனால் பொருட் குற்றம் உள்ளது..மன்னிக்க முடியாதது.
    இப்ப உள்ள பாவைகள் வெட்கத்துடன் மறைய மாட்டாங்க..நீங்க தான் வெட்கப்பட்டு ஓடிப் போகணும்.
    ஆயிரம் பொற் காசுகள் லேது.//

    அவையில் ..என் பாட்டில் குற்றம் கண்டுபிடித்தது எவர்

    ReplyDelete
  14. அருமையான கவிதை ஐயா.

    ReplyDelete
  15. //Rads said...
    அருமையான கவிதை ஐயா.//

    நன்றி Rads

    ReplyDelete