Monday, November 2, 2009

வாய் விட்டு சிரியுங்க..

1.எங்க ஆஃபீஸ்ல யார் தப்பு பண்ணினாலும் உடனே வீட்டுக்கு அனுப்பிடுவாங்க..
இப்போ நீங்க வேற வேலை தேடறீங்களா?

2.என்னோட பையன்..எப்போதும்..be indian..buy indian தான்
அவ்வளவு தேச பக்தியா?
ஆமாம்..படிப்பில கூட..இந்தியர்கள் கண்டுபிடித்த '0" தான் வாங்குவான்.

3.வெளிநாட்டிலிருந்து உன் பையன் என்ன வாங்கி வந்தான்
நாலு செண்ட் தான்
ஏன்..ஒரு ஏக்கர் வாங்கிட்டு வரச் சொல்லி இருக்கலாமே

4.டாக்டர்- உங்க வயற்றில எப்படி இவ்வளவு தீப்புண் ஏற்பட்டது
நோயாளி- பையன் +2 ல நல்ல மார்க் வாங்கணுமேன்னு..இவ்வளவு நாள் வயத்தில நெருப்பை கட்டிக்கிட்டு இருந்தேன்

5.டாக்டர் என் மூக்கு பலமடைய ஏதாவது மருந்து கொடுங்க.என் மூக்கு கண்ணாடி வைட்டக் கூட மூக்கால தாங்க முடியல

6.வர வர ஆஃபீஸ்ல இருந்து லேட்டா வர்றீங்களே..என்ன காரணம்
நான் என்ன செய்யறது...ஒரு பயலும் போறப்ப எழுப்பிவிடாம போயிடறாங்க..

11 comments:

  1. ஹிஹி ஹி எல்லாமே டாப்பு

    ReplyDelete
  2. //5.டாக்டர் என் மூக்கு பலமடைய ஏதாவது மருந்து கொடுங்க.என் மூக்கு கண்ணாடி வைட்டக் கூட மூக்கால தாங்க முடியல

    6.வர வர ஆஃபீஸ்ல இருந்து லேட்டா வர்றீங்களே..என்ன காரணம்
    நான் என்ன செய்யறது...ஒரு பயலும் போறப்ப எழுப்பிவிடாம போயிடறாங்க.. //
    \\
    super

    ReplyDelete
  3. அருமை அனைத்தும்.

    ReplyDelete
  4. 3 வது ரொம்ப நல்லாயிருந்துச்சு

    ReplyDelete
  5. சிரிப்பு சிரிப்பா வருகிறது.என் தொழில் ஜோக்ஸ் சுப்பர்

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி

    அத்திரி

    அக்னி பார்வை

    வானம்பாடிகள்

    பின்னோக்கி

    Dr.எம்.கே.முருகானந்தன்

    ReplyDelete
  7. //SUREஷ் (பழனியிலிருந்து) said...
    அது..,//

    அதே

    ReplyDelete
  8. அட்டகாசம் சார் புன்முறுவல் வர வைக்கும் நகைச்சுவை.

    ReplyDelete
  9. வருகைக்கு நன்றி

    Starjan
    முனைவர்.இரா.குணசீலன்
    Ganesh-Vasanth

    ReplyDelete