Monday, November 9, 2009

வாய் விட்டு சிரியுங்க..

1.யூனியன் தலைவர்- நம் அலுவலகத்தில் நம் மேல் திணிக்கப்படும் வாலண்டரி ரிடைர்மெண்டை எதிர்க்கும் விதத்தில் நான் முதலில் இந்த ஸ்கீமில் வெளியேறி நிர்வாகத்திற்கு ஒரு பாடம்
கற்பிக்க உள்ளேன்.

2.நான் உங்கிட்டே சொல்லாதேன்னு சொன்ன ரகசியத்தை நீ சுஜாதாகிட்ட சொல்லிட்டதா சொன்னாளே
நான் சுஜாதா கிட்டே சொன்னதை உங்கிட்டேசொல்லாதேன்னு சொன்னேனே சொல்லிட்டாளா
சரி...சரி..நான் அவ கிட்ட உன் கிட்ட சொல்ல மாட்டேன்னு சொல்லி இருக்கேன்..அதனால நான் அவ சொன்னதை உன் கிட்ட சொன்னதை அவகிட்ட சொல்லிடாதே
(படிக்கும் ரங்கமணிகளுக்கு தலை சுற்றுகிறதா)

3.அந்த தமிழ் படம் பார்க்கிறவங்களுக்கெல்லாம் ஒரு சின்ன புத்தகம் தர்றாங்களாமே
அது..அந்த படத்தில வர தமிழ் பாட்டுக்களுக்கு தமிழ் அர்த்தம் போட்டிருக்காங்களாம்.

4.குழந்தை-(சிரசாசனம் செய்யும் தந்தையைப் பார்த்துவிட்டு)அம்மா...அம்மா..சீக்கிரம் வாயேன்..அப்பாவுக்கு தலை இருக்க வேண்டிய இடத்திலே கால் இருக்கு..கால் இருக்க வேண்டிய இடத்திலே தலை இருக்கு.

5.என் பையன் என்னைவிட தைர்யசாலி..என் மனைவி எதைச் சொன்னாலும் எதிர்த்து பேசுவான்.

6.நீ காதலிக்கிற பெண்ணைப்பற்றி என் அபிப்பிராயம் எதுக்கு தம்பி கேட்கிறே?
அந்த பெண்ணைப்பற்றி எனக்கு ஒரு வருஷமாகத்தான் தெரியும்...உங்களுக்கு இருபது வருஷமா தெரியுமே!

18 comments:

  1. =)) அத்தனையும் சூப்பர்.

    ReplyDelete
  2. என்ன டி வி ஆர் சார் கொஞ்ச நாளா பதிவு எழுதல ...

    நல்லாருக்கு

    ReplyDelete
  3. // 5.என் பையன் என்னைவிட தைர்யசாலி..என் மனைவி எதைச் சொன்னாலும் எதிர்த்து பேசுவான். //

    இது சூப்பர் சிரிப்புங்க.

    எல்லாமே நல்லா இருக்கு. அதுல இதுதான் பெஸ்ட்.

    ReplyDelete
  4. அத்தனையும் சூப்பர்

    :-))))))))))))))))

    ReplyDelete
  5. 2, 4, ரசித்தேன்.

    ReplyDelete
  6. //வானம்பாடிகள் said...
    =)) அத்தனையும் சூப்பர்.//

    நன்றி வானம்பாடிகள்

    ReplyDelete
  7. ///Starjan ( ஸ்டார்ஜன் ) said...
    என்ன டி வி ஆர் சார் கொஞ்ச நாளா பதிவு எழுதல ...

    நல்லாருக்கு///

    நன்றி ஸ்டார்ஜன்..நான் ஏன் ஒரு வாரமா பதிவு எழுதவில்லை என தனிப் பதிவு எழுதிவிடுகிறேன்

    ReplyDelete
  8. //இராகவன் நைஜிரியா
    இது சூப்பர் சிரிப்புங்க.

    எல்லாமே நல்லா இருக்கு. அதுல இதுதான் பெஸ்ட்//

    நன்றி இராகவன்

    ReplyDelete
  9. //ச்சின்னப் பையன் said...
    அத்தனையும் சூப்பர்

    :-))))))))))))))))//

    நன்றி ச்சின்னப்பையன்..இது பின்னூட்டத்திற்கு..
    நன்றி சின்னப்பையன்..நீண்ட நாட்களுக்குப் பிறகு நம்ம வலைப்பக்கம் வந்து பின்னூட்டம் இட்டமைக்கு

    ReplyDelete
  10. //சின்ன அம்மிணி said...
    2, 4, ரசித்தேன்.//

    நன்றி சின்ன அம்மிணி

    ReplyDelete
  11. ஆகா........Net Connection வந்துட்டு !
    :)

    ReplyDelete
  12. //கோவி.கண்ணன் said...
    ஆகா........Net Connection வந்துட்டு !
    :)//

    வந்துட்டோம்ல

    ReplyDelete
  13. ஐந்தாவது ஜோக்கை தவிர மற்றதெல்லாம் கொஞ்சம் மொக்கை ரகம் தான்!

    ReplyDelete
  14. வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி வால்

    ReplyDelete
  15. ரெண்டாவது ஜோக்குக்கு தல சுத்துதுடா சாமி.

    முடிஞ்சா இங்கயும் வந்து சிரிச்சிட்டு போங்க
    http://sirikkalaam.blogspot.com

    ReplyDelete
  16. (படிக்கும் ரங்கமணிகளுக்கு தலை சுற்றுகிறதா)//

    அய்யா முடில...ஒரு முடிவோடத்தான் இருக்கிங்களா...

    ReplyDelete
  17. வருகைக்கு நன்றி
    நாஞ்சில் பிரதாப்

    ReplyDelete