Tuesday, November 10, 2009

விசும்பு


வாவெனில் வராய்

வந்து விட்டாலோ

செல்லெனினும் செல்லாய்

வராவிடினும் நீ

வந்திடும் பஞ்சம் - வந்து

அதிகம் தங்கிவிடினும்

அளப்பறிய நாசம்

எங்கள் அன்பு நண்பா

எங்கள் வாழ்வு

உன்கையில் என

உணர்ந்து

ஆண்டுதோறும் தவறாது

அளவோடு வந்திடு

நாங்கள் வசைபாடும் முன்

நாட்டைவிட்டு சென்றிடு

விசனத்தால்

விசும்ப வைத்திடாதே!!!

6 comments:

  1. வரலைன்னாலும் விசும்பல்
    வந்தாலும் விசும்பல்
    :))

    ReplyDelete
  2. விசும்புக்கு விசும்பல் அபாரம்.:)

    ReplyDelete
  3. /// மங்களூர் சிவா said...
    வரலைன்னாலும் விசும்பல்
    வந்தாலும் விசும்பல்
    :))///


    அதனால்தான் அளவோடு வருக
    வருகைக்கு நன்றி..நீங்கள் நம்ம கடைக்கு அடிக்கடி வாங்க

    :-)))

    ReplyDelete
  4. ///வானம்பாடிகள் said...
    விசும்புக்கு விசும்பல் அபாரம்.:)//


    வருகைக்கு நன்றி வானம்பாடிகள்

    ReplyDelete