Wednesday, November 11, 2009

வாய் விட்டு சிரியுங்க..

1.காதலன்-நான் நேர்மையானவன்..என் அலுவலகத்திலே நான் மட்டும் தான்..லஞ்சம் வாங்காதவன்
காதலி-..நல்லவேளை..இப்பவாது சொன்னீங்களே..பிழைக்கத் தெரியாத உங்களை..கல்யாணம் பண்ணிக்க இருந்தேனே

2.அந்த டாக்டர்..இப்பவெல்லாம் யாருக்கும் ஷாக் டிரீட்மெண்ட் கொடுக்கறதில்லை
ஏன்,..
இப்பவெல்லாம் தான்..எப்பவும் கரண்ட் கட் இருக்கே

3.அந்த ஓட்டல்ல மட்டும்..'ஆம்லெட்' ரொம்ப சீப்பா தர்றாங்களே..எப்படி?
ஓட்டல் முதலாளி..ஒரு அரசியல்வாதியாம்..அவர் கூட்டங்கள்லே பேசறப்ப..அவர் மேல வீசப்படற முட்டைகளை பொறுக்கி எடுத்து வந்துடுவாராம்

4.அவன் கஞ்சன்னு எப்படி சொல்ற..
அவன் பொண்ணு கல்யாணத்திலே..மூகூர்த்தத்தில..ஆசிர்வாதம் பண்ண..கொடுத்த அட்சதையெல்லாம் பொறுக்கி..ரிஷப்ஷன்ல லெமன் ரைஸ் ஆக்கிட்டான்.

5.கணவன்-(மனைவியிடம்) வர்றியா,,ஓட்டல்ல போய் காஃபி சாப்பிட்டு வரலாம்
மனைவி-என்ன அதிசயமாய் இருக்கு இன்னிக்கு..
கணவன்-(நினைவு வந்தவராய்) சாரி...பாமா..நான் ஆஃபீஸ்ல டைபிஸ்ட் கிட்ட பேசற ஞாபகத்தில கேட்டுட்டேன்

6.அரசியல்வாதி-(கூட்டத்தில் பேசும்போது)என்னை வெற்றிபெறச் செய்தால்..இந்த தொகுதியை மேம்படுத்துவேன்..தவறினால்...நீங்கள் என்னை தூக்கிலிடலாம்..
கூட்டத்தில் ஒருவன்- தலைவா...இந்தா கயிறு

14 comments:

  1. //4.அவன் கஞ்சன்னு எப்படி சொல்ற..
    அவன் பொண்ணு கல்யாணத்திலே..மூகூர்த்தத்தில..ஆசிர்வாதம் பண்ண..கொடுத்த அட்சதையெல்லாம் பொறுக்கி..ரிஷப்ஷன்ல லெமன் ரைஸ் ஆக்கிட்டான்.//

    புதுசா இருக்கு.

    ReplyDelete
  2. :)) நல்லா இருக்குங்க. 4 சுபெர்ப்

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி
    வசந்த்
    Starjan
    அக்பர்

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி
    வானம்பாடிகள்
    velji

    ReplyDelete
  5. //அவன் கஞ்சன்னு எப்படி சொல்ற..
    அவன் பொண்ணு கல்யாணத்திலே..மூகூர்த்தத்தில..ஆசிர்வாதம் பண்ண..கொடுத்த அட்சதையெல்லாம் பொறுக்கி..ரிஷப்ஷன்ல லெமன் ரைஸ் ஆக்கிட்டான்.//


    அந்த பதிவர் கஞ்சன்னு எப்படின்னு சொல்ற..,


    பின்னூட்டங்கள எல்லாம் சேர்த்துவைத்து இடுகை ஆக்கி விடுகிறாராமே...,

    ஹி..., ஹி..,

    ReplyDelete
  6. ///SUREஷ் (பழனியிலிருந்து) said...

    அந்த பதிவர் கஞ்சன்னு எப்படின்னு சொல்ற..,


    பின்னூட்டங்கள எல்லாம் சேர்த்துவைத்து இடுகை ஆக்கி விடுகிறாராமே...,

    ஹி..., ஹி..,//

    இதுல எதுவும் உள்குத்து இல்லையே...ஹி..ஹி..ஹி..

    ReplyDelete
  7. அருமை, தாங்கள் விரும்பினால் தங்கள் படைப்புகளை எமது தமிழ்த்தோட்டத்தில் வெளியிட ஆவலாக இருக்கிறோம்...

    ReplyDelete
  8. 6 -ல மூணு சூப்பர் !! சும்மா !! ஒரே கள்ப்புல ராவா சல்பேட்டா உட்டா மேரி இருந்துச்சி !! அக்காங் !!

    ReplyDelete