Wednesday, November 18, 2009

வாய் விட்டு சிரியுங்க...

கணவன்_(திருமணம் ஒன்றில்) நாடு எப்படிப்போகுது பாரு..மணமேடையில் தலையை விரிச்சுப் போட்டுக்கிட்டு ஜாக்கெட் கூட போடாம பொண்ணு உட்கார்ந்து கிட்டு இருக்கு
மனைவி- நல்லா கண்ணடியை போட்டுக்கிட்டுப் பாருங்க..அது பொண்ணு இல்ல..புரோகிதர்

2.உன் உடம்புலே எல்லாம்..திட்டுத் திட்டா படைபோல இருக்கு.,அதைப் பற்றி கொஞ்சம் கூட கவலை இல்லாம இருக்கே
எனக்குத்தான் ஒரு தம்பி இருக்கானே! தம்பி உடையான் படைக்கு அஞ்சான்..கேள்விபட்டதில்லையா?

3.தொண்டர்களே...உஷாராய் இருங்கள்..எதிக்கட்சியினர் 'புதியதோர் உலகம் செய்வோம்'என்கிறார்கள்..பழைய இந்த உலகத்தை எடுத்து சென்றிட அவர்கள் போடும் திட்டம் இது.

4.டாகடர்(நோயாளியிடம்)உங்க உடம்பு நல்லா ஆகணும்னா..ஆஃபீஸூக்கு லீவ் போடாம போங்க..அங்கபோய் நல்ல தூக்கம் போட்டா சரியாயிடும்.

5.என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி ஒரே தொந்தரவு
யாரு..உன் காதலனா?
இல்லை...என் அம்மாவும்..அப்பாவும்

6.உனக்கும் உன் மனைவிக்கும் கருத்து வேறுபாடே வராதா?
வரும்..ஆனால் நான் ஒரு வார்த்தை சொன்னதும் அவ சரியாயிடுவா
என்ன சொல்வே
நீ சொல்றதுதான் சரின்னு சொல்லிடுவேன்

15 comments:

  1. ஸ்டார்ட் டு பினிஸ் புல் பார்ம்=)). முதலும் கடைசியும் செம.

    ReplyDelete
  2. //3.தொண்டர்களே...உஷாராய் இருங்கள்..எதிக்கட்சியினர் 'புதியதோர் உலகம் செய்வோம்'என்கிறார்கள்..பழைய இந்த உலகத்தை எடுத்து சென்றிட அவர்கள் போடும் திட்டம் இது.//

    இது காமெடியில்ல உண்மை....

    ReplyDelete
  3. //தொண்டர்களே...உஷாராய் இருங்கள்..எதிக்கட்சியினர் 'புதியதோர் உலகம் செய்வோம்'என்கிறார்கள்..பழைய இந்த உலகத்தை எடுத்து சென்றிட அவர்கள் போடும் திட்டம் இது.\\

    செய்தாலும் செய்வார்கள்

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி வானம்பாடிகள்

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி வசந்த்

    ReplyDelete
  6. 6...வாழ்க்கைக்கல்வி!

    ReplyDelete
  7. //velji said...
    6...வாழ்க்கைக்கல்வி!//

    வருகைக்கு நன்றி velji

    ReplyDelete
  8. //பித்தனின் வாக்கு said...
    GOOD HUMER.//


    நன்றி பித்தனின் வாக்கு

    ReplyDelete
  9. //Jaleela said...
    சரியான காமடி//

    நன்றி Jaleela

    ReplyDelete
  10. 1,2,3,4 பிடித்தது சிரித்தேன்.

    ReplyDelete
  11. // பின்னோக்கி said...
    :)//

    வருகைக்கு நன்றி பின்னோக்கி

    ReplyDelete
  12. //மாதேவி said...
    1,2,3,4 பிடித்தது சிரித்தேன்//

    நன்றி மாதேவி

    ReplyDelete