Monday, November 23, 2009

இறுதிவரை பிரியாதிருக்க...


இன்று

உன் மணநாள்

இறுதிவரை துணையிருப்பாய்

என்றிருந்தேன்..

ஆயின்..வேறொருவன் துணையானாய்

மரணமே...

இனி என் துணை

மறு பிறப்பென்று ஒன்றிருந்தால்

மறவாமல் உனக்கு

மகனாய் பிறந்திடுவேன்..

அப்போதேனும்..

உன் இறுதி வரை

உனைவிட்டு பிரிய வேண்டாமே!!!!

8 comments:

  1. நெகிழ்வான கவிதை டிவிஆர்!

    ReplyDelete
  2. டபுள் டச்சிங்க் தி ஹார்ட்..

    ReplyDelete
  3. ஐயா பின்னி படல் எடுக்கீங்க

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி
    வானம்பாடிகள்
    பா.ராஜாராம்
    பிரியமுடன்...வசந்த்
    இராகவன் நைஜிரியா
    நசரேயன்

    ReplyDelete
  5. எப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க?

    ReplyDelete