Monday, November 23, 2009

பார்த்துப் போ!!


இப்போதெல்லாம்

பொறுமையாய் இருக்கிறேன்

கோபம் வருவதில்லை

நா எனக்கு அடங்குகிறது

யாரைக் கண்டாலும் மகிழ்கிறேன்

பணத்தை

தலையிலா கொண்டு போகப்போறோம் - என

தாராளமாய் இருக்கிறேன்

ஏன் இப்படி ஒரு மாற்றம்?

பெரிசு பார்த்துப்போ என்கிறான்

துவி சக்கர இளைஞன்

14 comments:

  1. காலம் கடந்த ஞானம் அந்த பெரிசுக்கு.நமக்கு?

    ReplyDelete
  2. பக்குவம் வந்திடுச்சோ.....

    நல்ல கவிதை...

    ReplyDelete
  3. /ஏன் இப்படி ஒரு மாற்றம்?

    பெரிசு பார்த்துப்போ என்கிறான்/

    ஆஹா.

    ReplyDelete
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
    பூங்குன்றன்.வே
    பாலாசி
    வானம்பாடிகள்

    ReplyDelete
  5. வயதானாலும் சிலருக்கு இந்த அளவுக்கு ஞானம் வரவில்லையே...

    அவங்களை என்னா செய்வது?

    ReplyDelete
  6. //பெரிசு பார்த்துப்போ என்கிறான்

    துவி சக்கர இளைஞன்//

    பெரிசுபடுத்த வேண்டாம் !
    :)

    ReplyDelete
  7. /இராகவன் நைஜிரியா said...
    வயதானாலும் சிலருக்கு இந்த அளவுக்கு ஞானம் வரவில்லையே...

    அவங்களை என்னா செய்வது?
    //

    யாருக்கு ஞானவந்தாலும் பெரிசு... 'அந்த காலத்து ஆளு'ன்னு தான் சொல்லுவாங்க :)

    ReplyDelete
  8. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Starjan

    ReplyDelete
  9. //இராகவன் நைஜிரியா said...
    வயதானாலும் சிலருக்கு இந்த அளவுக்கு ஞானம் வரவில்லையே...

    அவங்களை என்னா செய்வது?//

    எல்லோரும் கோவி போல் இருப்பதில்லை:-))

    ReplyDelete
  10. //கோவி.கண்ணன் said...
    //பெரிசு பார்த்துப்போ என்கிறான்

    துவி சக்கர இளைஞன்//

    பெரிசுபடுத்த வேண்டாம் !
    :)//

    சம்மந்தப்பட்ட நீங்களே பெரிசு படுத்தாத போது எனக்கு என்ன
    :-))

    ReplyDelete
  11. //கோவி.கண்ணன் said...யாருக்கு ஞானவந்தாலும் பெரிசு... 'அந்த காலத்து ஆளு'ன்னு தான் சொல்லுவாங்க :)//

    :-))

    ReplyDelete
  12. இன்னும் கொஞ்ச நாள் ஆகும் கடை பிடிக்க

    ReplyDelete
  13. வருகைக்கு நன்றி
    நசரேயன்

    ReplyDelete