Friday, December 11, 2009

வாழ்த்துகளா..அனுதாபமா


மகளின் மணம்

சீர் செனத்தியென

ஐம்பது பவுன் நகை

ஐம்பதாயிரம் வராததட்சணையாக

வெள்ளி பித்தளை

உங்க பொண்ணுக்குத்தானே

உள்குத்து பேச்சுடன்

சாப்பாட்டுச் செலவு

சத்திர வாடகை

பதிவு செய்ய கையூட்டு

இத்தியாதி..இத்தியாதி..

வாழ்நாள் சேமிப்பு

ஒரே நாளில் கரைகிறது

குழம்பில் கலக்கப்படும்

பெருங்காயமாய்..

வந்தவர்கள் சொல்கின்றனர்

வாழ்த்துகளை

பெண்ணின் தந்தையிடம்

அவர் காதுகளில்

ஒலி அலைகள் மாறி

அனுதாபங்கள் என்றே

ஒலிக்கிறது

30 comments:

  1. //அவர் காதுகளில்
    ஒலி அலைகள் மாறி
    அனுதாபங்கள் என்றே//

    சரிதான்....

    சிறப்பான கவிதை....

    ReplyDelete
  2. நல்லாச் சொன்னீங்க....

    ReplyDelete
  3. //வாழ்நாள் சேமிப்பு

    ஒரே நாளில் கரைகிறது//

    அசத்தல் வரிகள்.அர்த்தமுள்ள கவிதை.

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி பாலாசி

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி பூங்குன்றன்.வே

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி வானம்பாடிகள்

    ReplyDelete
  7. அருமையாக உள்ளது உங்க கவிதை

    ReplyDelete
  8. கவிதை நல்லாயிருக்கு ஐயா

    ReplyDelete
  9. கவிதை எளிமையா புரியுத மாதிரி இருக்கு சார்.

    ReplyDelete
  10. //குழம்பில் கலக்கப்படும்

    பெருங்காயமாய்..//

    இதற்க்கான பொருள் சிந்தித்ததும் சிரிப்பு வந்தாலும் வயித்தெரிச்சல் மிஞ்சியது...
    சிறப்பான வரிகள் சார்..

    ReplyDelete
  11. //அத்திரி said...
    கவிதை நல்லாயிருக்கு ஐயா//

    நன்றி அத்திரி

    ReplyDelete
  12. //இத்தியாதி..இத்தியாதி..

    வாழ்நாள் சேமிப்பு

    ஒரே நாளில் கரைகிறது
    //

    பெற்றக் கடன் வளர்த்த கடன் !
    :)

    ReplyDelete
  13. //அக்பர் said...
    கவிதை எளிமையா புரியுத மாதிரி இருக்கு சார்.//

    :-)))

    ReplyDelete
  14. //பிரியமுடன்...வசந்த் said...
    //குழம்பில் கலக்கப்படும்

    பெருங்காயமாய்..//

    இதற்க்கான பொருள் சிந்தித்ததும் சிரிப்பு வந்தாலும் வயித்தெரிச்சல் மிஞ்சியது...
    சிறப்பான வரிகள் சார்..//

    நன்றி வசந்த்

    ReplyDelete
  15. //கமலேஷ் said...
    நல்ல கவிதை...//

    நன்றி கமலேஷ்

    ReplyDelete
  16. //கோவி.கண்ணன் said...
    //இத்தியாதி..இத்தியாதி..

    வாழ்நாள் சேமிப்பு

    ஒரே நாளில் கரைகிறது
    //

    பெற்றக் கடன் வளர்த்த கடன் !
    :)//



    வருகைக்கு நன்றி கோவி

    ReplyDelete
  17. கேட்டதுல தப்பில்ல.. அய்யோ பாவம்தான்.. இப்பல்லாம் மருமகன் சைடுலயும் மற்றம் வந்திருக்கு.. மாமானார் வீட்டுக்கு ஹெல்ப் பண்றவரா அப்புறமா மாறிடறார்..

    ReplyDelete
  18. சாருநிவேதிதாவின் 10 நூல்களின் வெளியீடும், புகைப்படங்களும்.

    http://kaveriganesh.blogspot.com/2009/12/10.html

    ReplyDelete
  19. நன்று டிவிஆர் ஐயா!

    நிதர்சனம்!

    ReplyDelete
  20. //ரிஷபன் said...
    கேட்டதுல தப்பில்ல.. அய்யோ பாவம்தான்.. இப்பல்லாம் மருமகன் சைடுலயும் மற்றம் வந்திருக்கு.. மாமானார் வீட்டுக்கு ஹெல்ப் பண்றவரா அப்புறமா மாறிடறார்..//

    எல்லாவற்றிலும் விதிவிலக்குகள் உண்டு.
    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  21. //KaveriGanesh said...
    சாருநிவேதிதாவின் 10 நூல்களின் வெளியீடும், புகைப்படங்களும்.

    http://kaveriganesh.blogspot.com/2009/12/10.html//
    அருமையாக கவர் செய்துள்ளீர்கள்..புகைப்படங்கள் அருமை

    ReplyDelete
  22. //அத்திவெட்டி ஜோதிபாரதி said...
    நன்று டிவிஆர் ஐயா!

    நிதர்சனம்!//

    வருகைக்கு நன்றி ஜோதிபாரதி

    ReplyDelete
  23. ரொம்ப வாஸ்தவமாய் இருக்கு டிவிஆர்!

    கல்யாணத்திற்கு நிற்கிற மகள் நினைவு வந்து விட்டது..

    ReplyDelete
  24. //பா.ராஜாராம் said...
    ரொம்ப வாஸ்தவமாய் இருக்கு டிவிஆர்!

    கல்யாணத்திற்கு நிற்கிற மகள் நினைவு வந்து விட்டது..//

    வருகைக்கு நன்றி ராஜாராம்.
    கவலை வேண்டாம்..மலைபோல் தோன்றும் வேதனை யாவும் பனிபோல் மாறிவிடும்

    ReplyDelete