Thursday, December 17, 2009

இடது மூலை

இப்போதெல்லாம்

செய்தித் தாள் வந்ததும்

அவசர அவசரமாக

கண்கள்

விளையாட்டுப் பகுதி பக்கத்தின்

இடது மூலையைப்

பார்க்கவே விரும்புகிறது

தெரிந்தவர்கள் பெயர்

என்னைவிட

வயது குறைந்தோர்

பெயர் வருகிறதா என்று

13 comments:

  1. //விளையாட்டுப் பகுதி பக்கத்தின்

    இடது மூலையைப்//

    அந்தப் பகுதி மட்டும்தானா தலைவரே...,

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி வானம்பாடிகள்

    ReplyDelete
  3. //SUREஷ் (பழனியிலிருந்து) said...
    //விளையாட்டுப் பகுதி பக்கத்தின்

    இடது மூலையைப்//

    அந்தப் பகுதி மட்டும்தானா தலைவரே...,//

    ஆம்..அந்த பக்கம் மட்டும்தான்.. அட்வர்டைஸ்மென்ட் லைனுக்கு கட்டணம்..அதனால்தான்..மற்றப் பக்கம் டிஸ்பிளே ரேட் அதிகம்..நமக்கு வசதி இல்லை

    ReplyDelete
  4. சுஜாதா முன்னேயே இப்படித்தான் சொன்னார்

    ReplyDelete
  5. வருகைக்கும்..தகவலுக்கும் நன்றி சகாதேவன்

    ReplyDelete
  6. இடது பக்க மூலையில என்ன இருக்கு ?

    ReplyDelete
  7. //ஹேமா said...
    இடது பக்க மூலையில என்ன இருக்கு ?//


    அவ்வளவு வெள்ளந்தியா நீங்க!!!

    ReplyDelete
  8. இன்னொரு வெள்ளந்தி.. படிச்சதுக்கு அப்புறம் ஓடிப் போய் இடது பக்க மூலைய பார்த்தேன்.. அடக் கஷ்டமே கவிதையை இப்ப சூப்பர்னு சொல்ல முடியுது..

    ReplyDelete
  9. //ரிஷபன் said...
    இன்னொரு வெள்ளந்தி.. படிச்சதுக்கு அப்புறம் ஓடிப் போய் இடது பக்க மூலைய பார்த்தேன்.. அடக் கஷ்டமே கவிதையை இப்ப சூப்பர்னு சொல்ல முடியுது..//

    :-)))
    வருகைக்கு நன்றி ரிஷபன்

    ReplyDelete
  10. வருகைக்கு நன்றி பின்னோக்கி

    ReplyDelete