Monday, December 21, 2009

வாய் விட்டு சிரியுங்க ..

ஊர்லே பவர் கட்டுன்னு எல்லாரும் மந்திரியையே திட்டறாங்களே ..அதைப்பற்றி என்ன நினைக்கிற..
சரிதான் போப்பா..என் மனைவி என் பவரை கட் பண்ணி ரொம்ப நாளாச்சு

2.வர வர எங்க மாதர் சங்கத்திலே தேவை இல்லாததுக்கு எல்லாம் கூட்டம் போடறாங்க
அப்படி என்ன தேவையில்லா விஷயம்
கணவனுக்கு அடங்குவது எப்படி ன்னு இன்னிக்கு கூட்டம்.

3.இந்த காலத்து பொண்ணுங்களுக்கு கல்யாண ஆசையே இல்லை
எப்படி சொல்ற
நிறைய பொண்ணுங்களுக்கு லவ் லெட்டர் கொடுத்து பார்த்துட்டேன்..நோ ரெஸ்பான்ஸ்

4.தலைவர் ஏன் சுடுகாட்டில மீட்டிங் வைக்கணும்னு சொல்றார்
அங்க அடக்கமானவங்க பெயர் எல்லாம் வோட்டர்ஸ் லிஸ்ட்ல இருக்காம்

5.என் மனைவி என்னை மனுஷனாகவே மதிக்க மாட்டேன்னு சொல்றா
எதை வைச்சு சொல்ற
இலை போட்டிருக்கு..சாப்பிட்டு வாங்க ன்னு சொல்றா

6.உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா?
ஓட்டுவீடு,அபார்ட்மென்ட் இப்படித்தான் கிடைக்கும்...தங்க வீடெல்லாம் கிடையாது.

26 comments:

  1. //இந்த காலத்து பொண்ணுங்களுக்கு கல்யாண ஆசையே இல்லை
    எப்படி சொல்ற
    நிறைய பொண்ணுங்களுக்கு லவ் லெட்டர் கொடுத்து பார்த்துட்டேன்..நோ ரெஸ்பான்ஸ்
    //

    நான் படிக்கற காலத்திலிருந்து சொல்லிட்டு இருக்கேன், இத எல்லோரும் நகைச்சுவையாவே எடுத்துட்டு இருக்காங்க.., கொஞ்சம் கூட சீரியஸா எடுத்துக்க மாட்டாங்கறாங்க...,

    ReplyDelete
  2. ஹாஹ் ஹாஹ் ஹா ஹா

    ReplyDelete
  3. ஹா ஹா நல்ல நகைச்சுவை மருந்து. நன்றி அய்யா

    ReplyDelete
  4. //உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா?
    ஓட்டுவீடு,அபார்ட்மென்ட் இப்படித்தான் கிடைக்கும்...தங்க வீடெல்லாம் கிடையாது.//

    சூப்பரா இருக்கு பாஸ்.

    ReplyDelete
  5. //SUREஷ் (பழனியிலிருந்து) said...
    //இந்த காலத்து பொண்ணுங்களுக்கு கல்யாண ஆசையே இல்லை
    எப்படி சொல்ற
    நிறைய பொண்ணுங்களுக்கு லவ் லெட்டர் கொடுத்து பார்த்துட்டேன்..நோ ரெஸ்பான்ஸ்
    //

    நான் படிக்கற காலத்திலிருந்து சொல்லிட்டு இருக்கேன், இத எல்லோரும் நகைச்சுவையாவே எடுத்துட்டு இருக்காங்க.., கொஞ்சம் கூட சீரியஸா எடுத்துக்க மாட்டாங்கறாங்க...,//

    ஆமாம் சுரேஷ்..அந்த ஆதங்கம் தான் ஜோக்காய் உருவாச்சு

    ReplyDelete
  6. //goma said...
    ஹாஹ் ஹாஹ் ஹா ஹா//

    பார்த்து...பார்த்து...

    :-))))

    ReplyDelete
  7. //பித்தனின் வாக்கு said...
    ஹா ஹா நல்ல நகைச்சுவை மருந்து. நன்றி அய்யா//

    நன்றி பித்தனின் வாக்கு

    ReplyDelete
  8. //முரளிகண்ணன் said...
    kalakkal sir//

    Thanks Murali

    ReplyDelete
  9. //பூங்குன்றன்.வே said...
    சூப்பரா இருக்கு பாஸ்.//

    நன்றி பூங்குன்றன்

    ReplyDelete
  10. எல்லாமே ரசிக்கக்கூடியதாயிருக்கு.
    இண்ணைக்குக் காலேலயே சிரிச்சிட்டு வேலைக்குப் புறப்படுறேன்.நாள் முழுக்க நல்லாவே இருக்கும்.
    நன்றி ராதாகிருஷ்ணன்.

    ReplyDelete
  11. //ஹேமா said...
    எல்லாமே ரசிக்கக்கூடியதாயிருக்கு.
    இண்ணைக்குக் காலேலயே சிரிச்சிட்டு வேலைக்குப் புறப்படுறேன்.நாள் முழுக்க நல்லாவே இருக்கும்.
    நன்றி ராதாகிருஷ்ணன்.
    //

    நன்றி ஹேமா

    ReplyDelete
  12. //இந்த காலத்து பொண்ணுங்களுக்கு கல்யாண ஆசையே இல்லை
    எப்படி சொல்ற
    நிறைய பொண்ணுங்களுக்கு லவ் லெட்டர் கொடுத்து பார்த்துட்டேன்..நோ ரெஸ்பான்ஸ்//

    ஆமா தல! உண்மைதான்!

    ReplyDelete
  13. எல்லாம் நல்லா இருக்கு சார். குறிப்பா இலை போட்டிருக்கு:))

    ReplyDelete
  14. //வானம்பாடிகள் said...
    எல்லாம் நல்லா இருக்கு சார். குறிப்பா இலை போட்டிருக்கு:))//

    நன்றி வானம்பாடிகள்

    ReplyDelete
  15. ஜோக்குகள் அனைத்தும் அருமை.

    முதலாவது ஜோக்கை மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  16. //அக்பர் said...
    ஜோக்குகள் அனைத்தும் அருமை.

    முதலாவது ஜோக்கை மிகவும் ரசித்தேன்.//


    நன்றி அக்பர்

    ReplyDelete
  17. //அத்திரி said...
    அனைத்தும் அருமை//

    நன்றி அத்திரி

    ReplyDelete
  18. நகைச்சுவை துணுக்குகள் ரொம்ப அருமை

    வாய் விடாமல் சிரித்தேன் .

    ReplyDelete
  19. //Starjan ( ஸ்டார்ஜன் ) said...
    நகைச்சுவை துணுக்குகள் ரொம்ப அருமை

    வாய் விடாமல் சிரித்தேன்//

    நன்றி Starjan

    ReplyDelete
  20. //மணிகண்டன் said...
    Joke no 4 - nice.. good timing !//


    நன்றி மணிகண்டன்

    ReplyDelete
  21. "என் மனைவி என் பவரை கட் பண்ணி ரொம்ப நாளாச்சு" நினைத்து நினைத்து சிரிக்க வைக்கிறது.

    ReplyDelete