Wednesday, December 23, 2009

கவிதை என்றால் இது கவிதை

கடற்கரையில்

மீன்களின் கவுச்சி நாத்தம்

என்றவன்

வீடுவந்ததும்

அடுக்களையில் இருந்த

இல்லாளிடம்

மீன் குழம்பு வாசனை

பிரமாதம் என்றான்

2) ஏரிகளின் மீது

கட்டப்பட்ட கல்லறைகள்

அடுக்குமாடி கட்டிடங்கள்

3)நேற்று வறட்சி

இன்று மழை வெள்ளம்

நாளை வரப்போவது

மீண்டும் வறட்சி

4)ஏழையின்

ஈர்க்குச்சிக் கால்கள்

எலும்பு கைகள்

ஒட்டிய கன்னம்

வயிற்றுச் சுருக்கங்கள்

உருக்குலைந்த மேனி

இதில்

வறுமைக்கோட்டை

தீர்மானிக்கப் போகும்

அளவுகோல் எது

43 comments:

  1. //2) ஏரிகளின் மீது
    கட்டப்பட்ட கல்லறைகள்
    அடுக்குமாடி கட்டிடங்கள்//

    நறுக்கென்ற வரிகள்...

    கடைசியும் அருமை...

    ReplyDelete
  2. //ஏரிகளின் மீது

    கட்டப்பட்ட கல்லறைகள்

    அடுக்குமாடி கட்டிடங்கள்//

    உண்மை.

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி

    க.பாலாசி
    ராமலக்ஷ்மி

    ReplyDelete
  4. சந்தேகமே இல்லை. இதுதான் கவிதை.:)

    ReplyDelete
  5. நல்ல கவிதைகள்.
    ஆயினும் முதல் கவிதையில் 'வீடுவந்ததும்' என்ற சொல் தேவையா?

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி வானம்பாடிகள்

    ReplyDelete
  7. வீடுவரை கவுச்சி நாத்த எண்ணத்தை சுமந்து வருவதால் அந்த வார்த்தைகள்.

    வருகைக்கு நன்றி Doctor

    ReplyDelete
  8. கவிதை நல்லாயிருக்குங்க.
    முதல் கவிதையில மீன சமைச்சுட்டா நாத்தம் வராதில்லையா ?
    2,3,4 சமூக பார்வை நல்லாயிருக்கு.

    ReplyDelete
  9. அது சரி...


    --வித்யா

    ReplyDelete
  10. இதுதான் கவிதையே...கடைசி இன்னும்.....

    ReplyDelete
  11. மிக எதார்த்தம்......தொடருங்கள்

    4வது எனக்கு மிகவும் பிடித்தது

    ReplyDelete
  12. ஏரிகளின் மீது கட்டபட்ட கல்லறைகள் :(

    ReplyDelete
  13. வருகைக்கு நன்றி பின்னோக்கி

    ReplyDelete
  14. //Vidhoosh said...
    அது சரி...


    --வித்யா//


    வருகைக்கு நன்றி வித்யா

    ReplyDelete
  15. //திகழ் said...
    நல்ல கவிதைகள்.//


    நன்றி திகழ்

    ReplyDelete
  16. //உமா said...
    இதுதான் கவிதையே...கடைசி இன்னும்.....//


    வருகைக்கு நன்றி உமா

    ReplyDelete
  17. //ஆரூரன் விசுவநாதன் said...
    மிக எதார்த்தம்......தொடருங்கள்

    4வது எனக்கு மிகவும் பிடித்தது//

    வருகைக்கு நன்றி ஆரூரன் விசுவநாதன்

    ReplyDelete
  18. //வித்யா said...
    ஏரிகளின் மீது கட்டபட்ட கல்லறைகள் :(//

    வருகைக்கு நன்றி வித்யா

    ReplyDelete
  19. //வறுமைக்கோட்டை

    தீர்மானிக்கப் போகும்

    அளவுகோல் எது //

    கண்டு பிடிக்க வில்லை ஐயா

    ReplyDelete
  20. வருகைக்கு நன்றி நசரேயன்

    ReplyDelete
  21. சார் இங்கப்பாருங்க சார்..என்கைய பாருங்க... அப்படியே புல்லரிக்குதுசார் புல்லரிக்குது...

    கொன்னுட்டீங்க சார்... அதுல முதல் கவிதை குட்டிஜோக் மாதிரியே இருந்துச்சு...கடைசி கவிதை யோசிக்க வச்சுது. மொத்தத்துல உங்களுக்குள்ள ஒரு என்.எஸ்.கே.வும், கண்ணதாசனும் ஒளிஞசிட்டுருக்காங்கன்னு தெரியுது...அவங்களை அப்பப்ப வெளியவுடுஙக சார்...

    ReplyDelete
  22. உங்க கவிதையை படிச்ச தமிழ்மணம் கூட நிலைகுலைஞ்சி ஒரே இடத்துல நிக்குது. அது என்ன இப்படி ஒரு தலைப்பு ! கவிஞருக்கே உரிய அகங்காரமா:)- எனக்கு எரி-கல்லறை ரொம்ப பிடிச்சிருந்தது.

    ReplyDelete
  23. குட்டிக்கவிதைகள் பெரிய சங்கதிகள் சொல்கின்றன பாஸ்.அருமை..

    ReplyDelete
  24. எனக்கு புரிஞ்சிட்டாலே அது கவித-தாங்க!!

    ஏன் மத்தவங்க எல்லாம் உங்ககிட்ட க்ளாஸ் வரக்கூடாது!!!!????

    ReplyDelete
  25. எல்லாமே உணர்ந்து எழுதப்பட்ட நல்ல கவிதைகள்.கடைசிக் கவிதை மனதைத் தொட்டது.

    ReplyDelete
  26. //அன்புடன் அருணா said...
    கடைசிக் கவிதை அருமை.//


    நன்றி அருணா

    ReplyDelete
  27. //வருகைக்கு நன்றி said...
    நறுக்கென்ற வரிகள்...//

    வருகைக்கு நன்றி வருகைக்கு நன்றி

    ReplyDelete
  28. //நாஞ்சில் பிரதாப் said...
    புல்லரிக்குதுசார் புல்லரிக்குது...

    . மொத்தத்துல உங்களுக்குள்ள ஒரு என்.எஸ்.கே.வும், கண்ணதாசனும் ஒளிஞசிட்டுருக்காங்கன்னு தெரியுது...அவங்களை அப்பப்ப வெளியவுடுஙக சார்...//

    புல்லரிக்குது...பிரதாப்
    :-)))

    ReplyDelete
  29. //மணிகண்டன் said...
    உங்க கவிதையை படிச்ச தமிழ்மணம் கூட நிலைகுலைஞ்சி ஒரே இடத்துல நிக்குது. அது என்ன இப்படி ஒரு தலைப்பு ! கவிஞருக்கே உரிய அகங்காரமா:)- எனக்கு எரி-கல்லறை ரொம்ப பிடிச்சிருந்தது.//

    நன்றி மணி

    ReplyDelete
  30. //மணிகண்டன் said...
    கவிஞருக்கே உரிய அகங்காரமா:)- //

    :-))))

    ReplyDelete
  31. //பூங்குன்றன்.வே said...
    குட்டிக்கவிதைகள் பெரிய சங்கதிகள் சொல்கின்றன பாஸ்.அருமை..//


    நன்றி பூங்குன்றன்

    ReplyDelete
  32. //ஹாலிவுட் பாலா said...
    எனக்கு புரிஞ்சிட்டாலே அது கவித-தாங்க!!

    ஏன் மத்தவங்க எல்லாம் உங்ககிட்ட க்ளாஸ் வரக்கூடாது!!!!????//

    வருகைக்கு நன்றி பாலா

    ReplyDelete
  33. //ஹேமா said...
    எல்லாமே உணர்ந்து எழுதப்பட்ட நல்ல கவிதைகள்.கடைசிக் கவிதை மனதைத் தொட்டது.//

    நன்றி ஹேமா

    ReplyDelete
  34. எல்லாமே நச் நச் ன்னு இருக்கு

    ReplyDelete
  35. //கோவி.கண்ணன் said...
    எல்லாமே நச் நச் ன்னு இருக்கு//

    நன்றி கோவி

    ReplyDelete
  36. வருகைக்கு நன்றி ஜெரி ஈசானந்தா

    ReplyDelete
  37. அருமையா எழுதறீங்கன்னு சொல்ல, அனுபவம் இல்லை!

    மீன் மனசுல துள்ளுது!!

    ReplyDelete
  38. வருகைக்கு நன்றி கலையரசன்

    ReplyDelete
  39. //ஏரிகளின் மீது
    கட்டப்பட்ட கல்லறைகள்
    அடுக்குமாடி கட்டிடங்கள்//

    இன்னும் ரெண்டு வரி சேர்துக்கவா?

    //ஏரிகளின் மீது
    கட்டப்பட்ட கல்லறைகள்
    அடுக்குமாடி கட்டிடங்கள்
    அடுத்த பூகம்பத்தில்
    இடிந்தும் கல்லறைகளாகவே!!
    //

    கடைசி கவிதை சூப்பர்...

    ReplyDelete