Tuesday, January 12, 2010

பதிவர்களை வாங்கப் பார்க்கும் தயாரிப்பாளர்கள்

எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் உள்ளது போல தெரிகிறது ..சமீபத்தில் அதிகம் ஊடகங்களில் அடிப்பட்ட அந்த நிறுவனம்.

ஏற்கனவே..அது தயாரித்து..வெளியிடும் நிலையில் உள்ள படத்திற்கு பிரச்னை ஏற்பட்டது.

இந்நிலையில்..இணையத்தில்...வெளிவரும் விமரிசனங்களைக் கண்டு...திரை உலகினரிடையே சிறிது பயம் இருக்கிறது.இதை சில மாதங்களுக்கு முன் தமிழ் சினிமா என்ற இணைய இதழ் தன் தலையங்கம் மூலம் தெரிவித்திருந்தது.அகநாழிகை புத்தக வெளியீட்டு விழாவில் அஜயன் பாலா வும் இது குறித்து பேசினார்.

எங்கே..தன் படத்தையும்..இணையம் விமரிசனத்தில் கிழித்துவிடப் போகிறதே..என்ற பயம் வந்து விட்டது போல இருக்கிறது போலும்..அல்லது நம்மிடமிருந்து எதையோ எதிர்ப்பார்க்கின்றனர்.

திடீரென நேற்று பலர் பதிவுகளில் அந்நிறுவனத்தின் பின்னூட்டம் ஒன்றை பார்க்க நேர்ந்தது..அதில் பிளாக் எழுதுபவர்களுக்கு நிறுவனம் பல வேறு வாய்ப்புகள் அளிக்கப் போவதாகவும்..பதிவுகளை அவர்கள் வலைப்பதிவில் பதிவு செய்துக் கொள்ளுமாறும் கோரப்பட்டிருந்தது.

உள்ளே சென்று பார்த்தால் ..இன்றைய டாப் 10 பிளாக்குகள்,மிகச் சிறந்த பதிவுக்கு அந்நிறுவன விருது,கலக்கல் கவிதைகள்,சினிமா, சிந்தனை என பல பிரிவுகள் இருந்தன.

உண்மையாக அந்நிறுவனம் பதிவர்களை ஊக்குவிக்க இம் முடிவை எடுத்திருந்தால் நம் பாராட்டுகள்..

ஆனால்..தனக்கென ஒரு நோக்கம் வைத்துக் கொண்டு..அதற்காக தற்காலிகமாக..இம் முடிவை எடுத்திருந்தால்...அவர்களுக்கு ஏமாற்றமே ஏற்படும்.

எது எப்படியோ..இணையத்தில் பதிவுகளின் வலிமை அறிந்து மகிழ்ச்சியும்..பதிவர்கள் இது கண்டு மேலும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

38 comments:

  1. அப்ப நாம மொக்க போடல உறுப்படியா ஏதோ பண்றோம்னு தெரியுது..::))

    ReplyDelete
  2. அவங்க பார்வைக்கு சுலபமா வந்துவிடும் என்று நினைக்கிறார்களோ..,

    ReplyDelete
  3. அதானா சங்கதி!!!!!நான் ரெடி நீங்க ரெடியா கதையா?

    ReplyDelete
  4. அய்யா இதுவும் ஒர் விளம்பரம் தான். பார்த்து பெரும்பான்மையானோர் மனதில் எழுந்த எண்ணத்தை அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்.

    எச்சரிக்கையாய் இருக்க வேண்டிய தருணம் பொறுப்பாய் செயல்பட.

    பிரபாகர்.

    ReplyDelete
  5. பதிவர்கள் பவர் உள்ளவர்கள் ஆய்டாங்கயா!

    ReplyDelete
  6. பதிவர்கள் பவர் உள்ளவர்கள் ஆய்டாங்கயா!

    http://eluthuvathukarthick.wordpress.com/

    ReplyDelete
  7. மனதில் நினைச்சதை பிட்டு பிட்டு வெச்சிட்டீங்க.

    ஓட்டுகளை போட்டாச்சு...

    ReplyDelete
  8. உள் நோக்கத்தோடு செய்திருந்தால் விடை விரைவில் தெரியும் :)

    ReplyDelete
  9. //உள் நோக்கத்தோடு செய்திருந்தால் விடை விரைவில்//

    நிச்சயமாக ஆதாயம் இல்லாமல் இறங்கமாட்டார்கள்...

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. சரியான எச்சரிக்கை.

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. பயம் இருக்கிறது.

    ReplyDelete
  13. சரியாக சொன்னீர்கள் ......

    ReplyDelete
  14. நானும் அப்படித்தான் நினைச்சேன்..

    ReplyDelete
  15. நீங்க சொல்றது சரிதான்.

    ReplyDelete
  16. சரியா சொன்னீங்க டிவிஆர் சார்

    ReplyDelete
  17. என்னமோ நடக்குது மர்மமா இருக்குது.

    ReplyDelete
  18. //அப்ப நாம மொக்க போடல உறுப்படியா ஏதோ பண்றோம்னு தெரியுது..::))// ரிப்பீட்டுங்க

    ReplyDelete
  19. ஹி ஹி ஹி

    இன்னும் கொஞ்ச நேரத்துல இங்கயும் கமெண்ட் போட்டுடுவாங்க....

    ReplyDelete
  20. நான் அதுல மெம்பரே ஆயிட்டேன் சார்.. ஒரு எழவையும் காணோம்...

    தமிழர் திருநாள் நலவாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. //அப்ப நாம மொக்க போடல உறுப்படியா ஏதோ பண்றோம்னு தெரியுது//

    சீரியல்ல அவங்க போடுற மொக்கைய விட நம்ம ஜாஸ்தியா போடுறோம்னு நினைச்சுட்டாங்க போல

    :))

    ReplyDelete
  22. நிச்சயமாக ஆதாயம் இல்லாமல் இறங்கமாட்டார்கள்...

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  23. பதிவர்களின் பலம் பல மாற்றங்களை உருவாக்கட்டும்.

    ReplyDelete
  24. இதற்காகவே நாமளும் விமர்சனம் எழுதலாம் போலயே!

    ReplyDelete
  25. வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி
    பலா பட்டறை
    SUREஷ்
    Goma
    பிரபாகர்
    Imayavaramban

    ReplyDelete
  26. வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி
    ரவி
    எம்.எம்.அப்துல்லா
    Sangkavi
    cable sankar
    வானம்பாடிகள்

    ReplyDelete
  27. வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி
    negamam
    மகா
    வித்யா
    ஜாக்கி சேகர்
    S.A. நவாஸுதீன்

    ReplyDelete
  28. வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி
    அக்பர்
    starjan
    D R Ashok
    அகல்விளக்கு
    அக்னி பார்வை

    ReplyDelete
  29. வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி
    கண்ணா..
    தண்டோரா .....
    வெ.இராதாகிருஷ்ணன்
    வால்பையன்

    ReplyDelete
  30. புதிய முயற்சிக்கு வாழ்த்துவோம்.
    பதிவர்களையும் அழ வைக்க மாட்டங்கன்னு நம்புவோம்.

    ReplyDelete
  31. வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி kailash

    ReplyDelete
  32. பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  33. இதிலிருந்து தெரிவது என்னவென்றால் ...நம்ம்ளப்ப்பார்த்து பயப்படறாய்ங்க்....இது நமக்கெல்லாம் பெருமதானே...எதுக்கும் கொஞ்சம் பதிவு எழுதும்போது ஹெல்மட் மாட்டிக்கிட்டு எழுதலாமோ...

    ReplyDelete
  34. வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி kannaki

    ReplyDelete